Wednesday, May 23, 2012

தாண்டவப் பொழுதுகள்

தட்டி தட்டி திறக்கப்படாமலிருக்க
முட்டிக்கொண்டு வருகின்றன
உணர்வறைகள்.

எட்டி பிடிக்க முடியா
எத்தனையோ விடயங்கள்
என் காலடியில் கிடக்க
முடங்கி கிடக்கின்றன
முன்பொருநாள் தொலைத்த
என் உன்னத நிலைகள்.

காரணங்கள் அனைத்தும்
களவாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன
பொய்மை என் வாசலில்
விரல் பதிக்கும் வேளையில்.

கட்டுப்பட்டு கிடக்கிறேன்
கயிற்றினுள் பம்பரமாய்
சுழல வைக்கும் ரகசியம்
உன்னிலிருந்து விடுபடும்வரை ...




9 comments:

'பரிவை' சே.குமார் said...

//கட்டுப்பட்டு கிடக்கிறேன்
கயிற்றினுள் பம்பரமாய்
சுழல வைக்கும் ரகசியம்
உன்னிலிருந்து விடுபடும்வரை ...
//

கடைசிப் பத்தி கலக்கல்...
அருமையான கவிதை.

Anonymous said...

ஆனந்தவிகடன் வார இதழில் இன்று வெளியான என் விகடனில் தங்கள் வலைப் பதிவு பற்றிய விமர்சனம் படித்தனே¢. மகிழ்ச்சி. வலைப்பதிவு பக்கத்தையும் பார்த்தேன். நன்றாக உள்ளது. மென்பொருள் துறையில் பணியாற்றிக்கொண்டு தமிழ் மீதும் காதல் கொண்டு எழுதி வருவது பாராட்டுக்குரியது. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன் பாலமுருகன்.
www.saffroninfo.blogspot.com

தொடர்புக்கு : 9842940657

Rajeswari said...

தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பாலமுருகன் !

அ.மு.செய்யது said...



Congrats Rajeshwari....Saw you in anantha vikatan..

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

வாழ்த்துக்கள்!!பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

மென்பொருள் பிரபு said...

Came to know about your blog in av. Congrats

Athisaya said...

வணக்கம் சொந்தமே!தங்கள் அறிமுகம் கிடைத்தது மகிழ்ச்சி.

கவிதை அருமையாக உள்ளது.அதிலும் இறுதி வரிகள் மிகச்சிறப்பு.சந்திப்போம்.

srujana said...

Win Exciting and Cool Prizes Everyday @ www.2vin.com, Everyone can win by answering simple questions. Earn points for referring your friends and exchange your points for cool gifts.