Monday, November 23, 2009

என்ன கொடுமை சரவணா இது!!!

நேற்றைக்கு முன்தினம், ரமணா பட அனுபவம் போல எனது நண்பருக்கு ஏற்பட்டது. அவர் இருப்பது அடையார் . வியாழன் அன்று அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் மிகவும் அதிகமாகவே, அவர் உடனே பதறி போய், அங்கிருக்கும் ஒரு புகழ் பெற்ற மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் . அவரை சோதித்த மருத்துவர்கள் ,அவரை உடனே பெட்டில் அட்மிட் செய்திருக்கின்றனர் . அவரும் கேஷ்லெஸ் கார்டு வைத்திருந்ததால், பெரிய மருத்துவமனை என்ற பயம் இன்றி அட்மிட் ஆகி இருக்கிறார்.
சாதாரண காய்ச்சலுக்கு , X-Ray, ஸ்கேன் போன்ற இத்தியாதி அயிட்டங்கள் எடுக்கப்பட்டன. அடுத்த நாள் , அவர் கிளம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு மருத்துவர்கள், ”ஒரு நாளிற்கு மேல் தங்கி இருந்தால்தான் கார்டு யூஸ் பண்ண முடியும் ” என்று கூறிவிட்டார்கள். சரி என்று அவரும் வேறு வழி இன்றி ,அங்கேயே தங்கி விட்டார். அடுத்த நாள் கிளம்பும் வேளையில் , வந்தது பில் . மொத்தம் பன்னிரெண்டாயிரத்து சொச்சம்.
அட கடவுளே! அதான் பணம் க்ளைம் பண்ணியாச்சே என்றால்,” பணம் க்ளைம் பண்ணியது ரிஜெக்ட் ஆகிவிட்டது ”என்று கூறியிருக்கிறார்கள். என்ன என்று இன்ஷூரன்ஸ் கம்பெனியிடம் விசாரித்தால், "இம்மாதிரியான நோய்களுக்கு ,அதாவது சாதாரண காய்ச்சலுக்கு பெட்டில் அட்மிட் ஆக வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தினால் ரிஜெக்ட் செய்யப்படிருக்கிறது"என்று கூறியிருக்கிறார்கள்.
நண்பருக்கு தலை சுற்றி விட்டது. எவ்வளவோ பேச்சு வார்த்தை நடத்திய பின்னும் அவர் , பணம் கட்டியே ஆக வேண்டும் என்று கூறிவிட்டனர். வேறு வழி இன்றி , அவர் அங்கே பணத்தை அழுதுவிட்டு வந்தார். சாதாரண காய்ச்சல் காஸ்ட்லி காய்ச்சல் ஆகிவிட்டது.
அவருடைய பில்லை வாங்கி பார்த்தேன்.எனக்கு நிறைய சந்தேகங்கள்.
1)ஏங்க ஒருநாள் ரூம் வாடகை 2500ஆ!! அதுவும் ஏசி இல்லாமல்??. ஸ்டார் ஹோட்டெல்ல கூட அவ்வளவு கிடையாதே!!
2) முதலில் தவறாக எடுத்துவிட்டோம் என்று இரண்டு தடவை X-Ray எடுத்து இருக்கிறீர்கள். அது உங்களது தவறு. அதற்காக ஏன் இரண்டு தடவை பில் போட்டு இருக்கிறீர்கள்??
3)ஏங்க, இந்த மாதிரியான சாதாரண காய்ச்சலுக்கு பெட்டில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்ற அடிப்படை கூட உங்களுக்கு தெரியாதா? தெருமுக்குல சின்ன கிளினிக் வச்சிருக்குற டாக்டர் கூட சொல்லிருவாறே!!
4)கேஷ்லெஸ் கார்டுக்கு கிளைம் பண்ணி ,ரிஜெக்ட் ஆகி வந்த தொகை 30,000என்று எழுதியிருக்கிறது. ஆனால் கட்ட வேண்டிய தொகை என்று 12,000 வசூலிக்கப்பட்டது. எப்படீங்க இப்படியெல்லாம் ??.
இனிமே ,மருத்துவமனைக்குன்னு போகனுமுனா கொஞ்சம் யோசிச்சிட்டுதான் போகணும் போல இருக்கு.
...............................................................................................................................................................................
இந்த பதிவு சப்புனு போயிடக்கூடாது பாருங்க..அதனால காரமா ஒரு விசயம் சொல்றேன் கேளுங்க.சென்ற வாரம் சன் பிக்சர்ஷின் “கண்டேன் காதலை” படம் பார்த்தேன். ஒரு தடவை பார்க்கலாம். அதில் , தமன்னா விருத்தாச்சலம் தொகுதியில், , சாரிங்க , பகுதியில் இறங்கும் போது, ஒரு மொட்டை பாஸ் , பைக்கில் வந்து கூப்பிடுவானே.. அந்த குரல எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.. ..கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு கப்பல் பரிசளிக்கபடும்.

20 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சாதாரண காச்சலுக்கு ஏன் பிரபல பெரிரிரிரிரிய வைத்தியசாலைக்குப் போனீங்க? அப்போதே அவர்களுக்குத் தெரிந்திருக்கும் ஏமாற்றலாமென; ஏமாற்றிவிட்டார்கள்.
அந்த நாட்களில் இலங்கையில் கொழும்பு செல்லும் யாழ்மாவட்ட மக்களை டாக்சிக்காரர்; ஏமாற்றுவார்கள்.
எப்படி? புகையிரத நிலையத்துக்கு சமீபத்தில் இருக்கும் இடத்துக்குக் கூட சிலர்; டாக்சி பிடிப்பர்; அவர்களுக்கு தெரிந்துவிடும், இது ஊருக்குப் புதிது, எனவே கொழும்பைச் சுற்றிக் காட்டி கறந்துவிடுவார்கள்.
சாதாரண காச்சலா? சாதாரண வைத்திய சாலைக்குப் போங்கள்.

இராகவன் நைஜிரியா said...

கொடுமைங்க.. சாதாரண ஜுரத்துக்கு, ரூ. 12,000 பில்லா..

பகல் கொள்ளையா இருக்கே...

எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறாங்கப்பா...

அதுவும் அவங்க பண்ண தப்புக்கு, இரண்டுதடவை சார்ஜ் பண்ணியிருப்பது மகாக் கொடுமை..

அன்புடன் அருணா said...

அடப் பாவமே!

அன்புடன் அருணா said...

அடப் பாவமே!

ப்ரியமுடன் வசந்த் said...

கொஞ்சமில்ல நிறைய யோசிச்சுட்டுத்தான் போகணும்,திருட்டுப்பசங்க...

அப்பாவி முரு said...

தங்கச்சி, இந்த சளி இருக்கே அது மருந்து எடுத்தா ஒரு வாரத்துல போயிரும். மருந்து எடுக்கலை ஏழு நாளில் தான் போகும்-ன்னு யாரு பேசின ஞாபகம்

R.Gopi said...

மருத்துவமனை பெரிய பணம் பிடுங்கும் இடம்... இங்கேயும் வெள்ளை முகமூடி போட்டுட்டு தான் டாக்டர்ஸ்னு பெயர் சொல்லி கொள்ளை அடிப்பார்கள்...

பகல்னு மட்டும் இல்லை... ஆஸ்பத்திரிகள் 24 மணி நேரம் கொள்ளை நடக்கும் இடம்...

நாம் தான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கணும்...

இன்னொன்னு, அந்த மெடிக்ளைம்... இதுலயும் எச்சரிக்கையா இருக்கணும்... முழு விபரங்களையும் கேட்டு வாங்க வேண்டும்.....

இனிமே ஜூரம் வந்தால், பாட்டி வைத்தியம் தான்....

सुREஷ் कुMAர் said...

ஆஹா.. ஆளுமாட்டினா அமுக்கிடுவானுங்களே.. பேசாம நீங்க சொன்ன அந்த முக்குகடை டாக்டர்கிட்டியே போயிருக்கலாமோ..

sathishsangkavi.blogspot.com said...

கொள்ளை அடிக்கிறார்கள் என்று தெரிந்து தானே
அங்கபோறீங்க...... அவுங்க கொள்ளையடிக்க
நாமூம் தானே ஒரு காரணம்........

நாம தான் எச்சரிக்கையா இருக்கணும்.......

காய்ச்சலுக்கு சித்த வைத்தியம் தான்........

Unknown said...

// , தமன்னா விருத்தாச்சலம் தொகுதியில், , சாரிங்க , பகுதியில் இறங்கும் போது, ஒரு மொட்டை பாஸ் , பைக்கில் வந்து கூப்பிடுவானே.. அந்த குரல எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.. ..கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு கப்பல் பரிசளிக்கபடும்.
//
அவரு hitman படத்துல ஹீரோவா நடிச்சவர் தான...

Tamil Home Recipes said...

அடப் பாவிகளா இப்படியா ஆஸ்பத்திரி நடத்துவது!

malarvizhi said...

தஞ்சையில் பிறந்தவளிடம் பெரியகோவிலை பற்றி தெரியுமா என்று கேட்கலாமா? நிறைய உள்ளது விரைவில் எழுதுகிறேன் . உங்கள் நண்பரை பற்றி கூறினீர்கள் . என் கணவர் அறுவை சிகிச்சை மருத்துவர். நான் மேல் சிகிச்சைக்காக சென்னை சென்றால் எனக்கும் இதே கதி தான். அங்கு மட்டும் இல்லை பெரும்பாலான மருத்துவர்கள் இப்படி தான் இருக்கிறார்கள். இதனால் அனைத்து மருத்துவர்களுக்கும் கெட்டபெயர் ஏற்படுகிறது. சும்மா சொல்கிறேன் என நினைக்க வேண்டாம் . இன்று என் கணவர் ஓரளவிற்கு புகழோடு இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் இவரிடம் போனால் மிகவும் சரியான வைத்தியம் கிடைக்கும் என மக்கள் நம்புவது தான். தன்னால் முடியவில்லை என்றால் சரியான மருத்துவரிடம் அனுப்பி விடுவார்.

suvaiyaana suvai said...

கொடுமைங்க!! சாதாரண ஜுரத்துக்கு, ரூ. 12,000 பில்லா!!!!

Dr.Rudhran said...

keep writing

நட்புடன் ஜமால் said...

யாருக்குமே கப்பல் வேண்டாம் போல ...

Karthikeyan said...

மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஒரு திட்டமிடல் தேவையிருக்கிறது.. பெரிய பிரிச்சினைகளுக்கு, பெரிய மருத்துவமனைகள் தேவை.. சிறிய விஷயங்களுக்கு, க்ளீனிக் டாகடர்களிடம் போனாலே போதும்..

நான் இதற்குமுன் பணிபுரிந்த நிறுவனம்,புகழ்பெற்ற ஒரு வங்கியின் மென்பொருள் நிறுவனம்.. மருத்துவக்காப்பீடு அளிக்கும் கம்பெனியும் அந்த வங்கியுடையதுதான்..

அங்கே சேர்ந்திருந்து, ஒரு வருடமாகியிருந்தது.. அந்த சமயத்தில், என் மனைவியின் பிரசவ சிகிச்சைகளுக்கான செலவுகளை திரும்பப்பெற வேண்டி,
Maternity bills, pre-maternity மருந்து ரசீதுகள், டாக்டர் அளித்த அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பித்திருந்தேன்..

க்ளைம் மறுக்கப்பட்டு திரும்பவந்தது.. ஏன் என்று கேட்டால், சேர்ந்தநாளிலிருந்து 9 மாதங்கள் கழித்துதான் அதற்கு க்ளைம் பண்ணமுடியும் என்ற் சொல்லிவிட்டார்கள்.. அதான் சேர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டதே என்றால், இந்த மருத்துவகாப்பீடு திட்டத்தில் சேர்ந்து 9 மாதங்கள் ஆகியிருக்கவேண்டுமாம்.. (சேர்ந்து நான்கு மாதங்கள் கழித்துதான் மருத்துவகாப்பீட்டுக்காக register செய்திருக்கிறார்கள்.)

யார் வேண்டுமானாலும் ஏமாற்றுவார்கள் போலிருக்கிறது..

--o0o--

ஏற்ற இறக்கமில்லாமல் இருந்தாலும்,
கொஞ்சம் வித்தியாசமாகயிருந்த அந்தக்குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று சொல்லிவிடவும்.. (போனமாதமாக இருந்தால், படகு கேட்டிருப்பேன்.. மழை தண்ணீர்!)

நன்றி..

என் பதிவிற்கும் வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்..

http://kaaranam1000.blogspot.com

கார்த்திகேயன்

thiyaa said...

அருமை யான பதிவு
நல்வாழ்த்துகள்

புலவன் புலிகேசி said...

கொடுமையான விடயம்...அவரிடம்தான் பில் உள்ளதே...கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யலாமே...நமக்கென்ன என்றிருப்பதால் தான் அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள்..இவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும்..மரணதண்டனைக்குரிய குற்றம் இது...

Cable சங்கர் said...

கொடுமை தான் நாம் தான் உசாராக இருக்க வேண்டும்.. கீப் ரைட்டிங்..

Beski said...

நல்ல ஒரு பகிர்வு.
உஷாரா இருந்துக்கறோம்.

அப்றம்,
நல்லா எண்டர தட்டி எழுதுங்க, ஏன் கஞ்சத்தனம்?
சில பேரு ஒரு பாராவுக்கே எண்டர தட்டு தட்டுன்னு தட்டி உசுர எடுக்குறாங்க...