"அம்மா ...போயிட்டு வர்றேன்..!"
"சரிம்மா..பாத்து போயிட்டு வா.இன்னைக்கு கோவிலுக்கு போகணும் ஞாபகம் இருக்குல்ல "
"இருக்கும்மா,evening சீக்கிரம் வந்துடுறேன் போதுமா.bye"
என் அலுவலகம் அடையார் என்பதால் ,எங்கள் வீட்டிலிருந்து bells road வழியாக கண்ணகி சிலையை அடைந்து ,அடையார் செல்ல வேண்டும்.கண்ணகி சிலைக்கு எதிரே ,திருவல்லிக்கேணி செல்லும் சாலையில் ,இடது ஓரத்தில் தான் எப்போதும் நின்றிருப்பான் அருள்.
கடந்த 5 மாதங்களாக தான் அவனை எனக்கு தெரியும்.வண்டியை வேகமாக அவனிருக்கும் இடத்திற்கு ஓட்டினேன்.அருள்,ரோட்டில் படங்களை வரைந்து ,அதன் மூலம் யாசகம் பெறுபவன்.அவனுக்கு ஒரு கால் வேறு கிடையாது. கட்டையின் துணையோடுதான் நின்று கொண்டிருந்தான்.
அவனுடைய ஒவ்வொரு படங்களும் தத்ருபமாய் இருக்கும்.வெறும் கலர் சாக்பீசாலே தெய்வங்களை அலங்கரித்திருப்பான்.

இன்று வெள்ளிக்கிழமை ஆதலால்,பராசக்தி புலியில் அமர்ந்திருந்தாள்.அவள் மேலே 50 பைசா 1 ரூபாய் சில்லறைகள் சிதறிக்கிடந்தன.
அம்மாவை ஒருநாள் இங்கு அழைத்து வந்து காட்ட வேண்டும். பிறகு தினமும் வருகிறேன் என அடம்பிடிப்பாள்.மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.
அருள் நல்ல கற்பனைசாலி மற்றும் திறமைசாலியும் கூட.நேரத்திற்கு தகுந்த மாதிரி படம் வரைவான்.நவராத்திரி நேரங்களில் ,பலவகையான அம்மன்கள் ,கிறிஸ்துமஸ் சமயங்களில் ஏசுநாதர்,குடில் ,சுதந்திர தின நேரங்களில் ,தேசத்தலைவர்கள் என்று அவனுடைய படைப்புக்கள் நமக்கு சில செய்திகளை சொல்லிகொண்டிருக்கும்.
சாதி மத பேதங்கள் எல்லாம் தனக்கு தானே மனிதன் அமைத்து கொண்டது என்பதை அவனுடைய நவீன படங்களின் மூலம் உணர்த்துவான்.அதனாலேயே அவனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவனுடைய வீடு, சாந்தோம் சர்ச் பின்புறம் உள்ள ஒரு சேரியில் இருக்கிறது என்று கூறியிருக்கிறான்.பாவம் காலில்லா அம்மா,தங்கை ஆகிய இருவருக்கும் இவன்தான் துணை
சரி நாம் ஏதாவது உதவி செய்யாலாமே என்று ,கடந்த ஒரு வாரமாக "youthful fine arts" academy மூலமாக அவனுடைய படங்களை கண்காட்சியாக வைக்கும் முயற்சிகளில் இருக்கிறேன்.இதோ இன்றோடு அந்த வேலையும் முடிந்துவிட்டது.அவனிடம் சில பத்திரங்களில் கையெழுத்து வாங்கி விட்டால் ,பிறகு அந்த அகாடமியே எந்த நாளில் நடத்தலாம் என்று சொல்லி விடுவார்கள்.
"என்ன அருள்.இன்னைக்கு எவ்வளவு கலெக்சன்?"
"இப்பதான்க்கா ஆரம்பிச்சிருக்கு ..100 ரூபாய் எப்படியும் தேறும்னு நினைக்கிறேன்"
"சரி..சரி..எனக்கு ஆபீஸ்க்கு நேரமாச்சு.இந்தா.இந்த பேப்பரில் கையெழுத்து போடு."
"அக்கா.இந்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போரேனோ தெரியலைக்கா"-கண் கலங்கினான் அருள்.
"அருள்..உன் திறமையையும் தாண்டி ,உன்னோட முற்ப்போக்கான சிந்தனைகள்தான் இந்த சமுதாயத்திற்கு தேவை.புத்தாண்டு அன்னைக்கு ஒரு படம் வரைந்திருந்தியே ஞாபகம் இருக்கா?சிவன் பார்வதி மடியில் இயேசுவை வைத்து,மேலே பிறை வடிவில் வரைந்து...பல கருத்துக்களை சொல்லாமல் சொல்லி இருந்தாய் .அப்பொழுதே உனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றியது."
"நன்றிக்கா"
"சரி நான் கிளம்பிறேன் அருள்.பார்ப்போம் ".
ஒரு வாரம் கழித்து ,வீட்டிற்கு தபால் வந்திருந்தது.அருளுக்குதான்.அடுத்தமாதம்,27 ஆம் தேதி ,தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ,கண்காட்சி நடத்தலாம் என்பதற்கான செய்தி வந்திருந்தது.
உடனே அருளிடம் இந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்ல வேண்டும் என்று scooty ஐ எடுத்து கிளம்பினேன்.
"வாணி..மணி ஏழரை.இப்போ ஏன் போற?நாளைக்கு கொடுத்துக்கலாமே?"
"இல்லம்மா.எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.இப்பவே அவனுடைய வீட்டுக்கு போய் கொடுத்துட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பிருவேன்..நீயும் வர்றியா?"
"இல்ல..நீ போயிட்டு வா..பாத்து எப்பவும் 40 லே ஓட்டு"
"சரிம்மா வர்றேன்"
சாந்தோம் சர்ச் தாண்டி ,இடது புறத்தில் அமைந்த ,ஒரு சிறிய குறுக்கு தெருவுக்குள் வண்டியை ஓட்டினேன்.அருள் சொன்ன அடையாளங்களை வைத்து அவனுடைய வீட்டை நெருங்கினேன்.
மூக்கினுள் ஏறிய கெட்ட வாடையையும் தாண்டி,மனதில் ஒரு நிறைவான சுகந்தம் தவழ்ந்து கொண்டிருந்தது.
அவனுடைய வீட்டின் முன்புறம் கூட்டமாய் இருந்தது.வண்டியை ஓரத்தில் நிறுத்தி விட்டு கூட்டத்தை நோக்கி நடந்தேன்.
"ஏண்டி,கழிசடை,கஸ்மாலம்,ஏதோ போனா போகுதுன்னு டைப் கிளாசுக்கு அனுபிச்சா ..அந்த முருகேசனோட ஊர் சுத்திருயோ ?"-அருளின் குரல்தான்.
மெல்ல கூட்டத்திற்குள் கலந்தேன்.ஒரு பெண்ணை தன்னுடைய கால் கட்டையால் அடித்து கொண்டிருந்தான் அருள்.
" ஏண்டி ..சோத்த திங்கிறியா? இல்ல வேற ஏதாவது திங்கிறியா?இனிமே அந்த இந்துப்பயலோட சுத்தின,கழுத கண்ட துண்டமா வெட்டிருவேன்.அடுத்த வாரம் உனக்கும் நம்ம மாமனுக்கும் கல்லாணம் ...ஜாக்கிரதை "
அருள் இப்படியும் பேசுவானா? தொண்டையை அடைத்தது.
"ஏ ..விடுப்பா.பொட்டபுள்ளைய போட்டு ரொம்ப அடிக்காத.அதான் அடுத்த வாரம் கல்யாணம்னு சொல்லிட்டேல விடு விடு"-பக்கத்தில் நின்றிருந்தவன் அருளை விளக்கினான்.
ஏனோ தெரியவில்லை.அவனிடம் தபாலை கொடுக்காமலே திரும்பினேன்,
258 comments:
«Oldest ‹Older 201 – 258 of 258// நட்புடன் ஜமால் said...
என்னா முரு
என்னா பந்தாயம்//
அண்ணே நான் தான்
என்ன பந்தயம்?
வாழ்க முரு
முருவுக்கு வாழ்த்துக்கள்
//ரெடி..ஸ்டார்ட்.. மியூசிக்//
ஜிங்.. டிங்.. ராங்.. தங்..
டம டம டும்,., டும்,,
பீ...பீ... ஜிங்.. ஜிங்க்..//
இனி என்னா பந்தையம் அதான் அடிச்சிட்டீங்களே!
இப்பொழுது ஜமால் கோப்பையை சந்தடி இல்லாமல் பெற்றார்
சரி தங்கச்சி.. சாப்பிட போங்க..
அது சரி 4.00 மணிக்கு சாப்பிட போறீங்க
// Rajeswari said...
இப்பொழுது ஜமால் கோப்பையை சந்தடி இல்லாமல் பெற்றார்//
டீச்சர் தப்பு தப்பா சொல்லக் கூடாது..
முருதான் 200
சந்தடி இல்லாமல் பறிக்கும் போது கை தவறி விட்டது. முருவுக்கு வாழ்த்துக்கள்
// Rajeswari said...
இப்பொழுது ஜமால் கோப்பையை சந்தடி இல்லாமல் பெற்றார்//
அக்கா சரியா பாருங்க.,
பிரச்சனையை உருவாக்காதீங்க..
// நட்புடன் ஜமால் said...
இனி என்னா பந்தையம் அதான் அடிச்சிட்டீங்களே! //
அதானே இனி என்ன பந்தையம்..
அப்பாடா தப்பிச்சேன்..
// Rajeswari said...
சந்தடி இல்லாமல் பறிக்கும் போது கை தவறி விட்டது. முருவுக்கு வாழ்த்துக்கள் //
ஓ இப்படி எல்லாம் வேற நடக்குதா
யாரு 225
முருவே 200
அதுவேறையா 225
சரி சரி பார்த்துடுவோம்!
225 மட்டும் தானா
அண்ணே என் ஸ்டைல போடுறீங்க கமெண்ட்
சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் உரிமையுடன் அழிக்கப்படுகிறது ...
225 போடும் யாவருக்கும் வாழ்த்துகள்
225 போச்சு
ஹையா!
நாந்தான்.
நான் கிளம்பறேன் ரொம்ப பசிக்குது ...முரு, ஜமால், ராகவன் அண்ணா தொடருங்கள் நான் பிறகு வந்து சேர்ந்து கொள்கிறேன்
மனதை தொட்ட கதை ராஜேஸ்வரி
manithanin marupakkathai velippaduththiya kathai. super
என்னாப்பா இது ஞாயிறும் அதுவுமா கடையிலே இவ்வலவு கூட்டம்
நன்றி அபு அப்சர் ..
//ஏனோ தெரியவில்லை.அவனிடம் தபாலை கொடுக்காமலே திரும்பினேன்,//
அப்போ எப்படிங்க மத்தவங்களை திருத்துவது... ஏதாவது சொன்னாலதானே தெரியும்
சரி அந்த 5 ஸ்டர்ர் எக்ஸிபிசன் என்னாச்சி
//என்னுடைய scootiyai ஸ்டார்ட் செய்தேன்.
//
ம்ம் ஒத்துக்கறோம் உங்ககிட்டே ஸ்கூட்டி இருக்குனு, ஆமா அது புதுசா
உழவன் " " Uzhavan " said...
manithanin marupakkathai velippaduththiya kathai. super//
வாங்க உழவன் சார்...வருகைக்கும் கதையை ரசித்தமைக்கும் நன்றி
அபுஅஃப்ஸர் said...
//ஏனோ தெரியவில்லை.அவனிடம் தபாலை கொடுக்காமலே திரும்பினேன்,//
அப்போ எப்படிங்க மத்தவங்களை திருத்துவது... ஏதாவது சொன்னாலதானே தெரியும்//
வாணி கண்டிப்பாக நல்ல முடிவுதான் எடுத்து இருப்பாள்
நல்ல கதை ராஜேஸ்வரி. எல்லோருமே தத்தம் படைப்பின்படி இருப்பதில்லை.. அல்லது படைப்பின் படி இருப்பார்கள் என்று நினைப்பதும் தவறுதான்...
அழகான கதை!!! இத்தனை பின்னூட்டங்கள் நிறைந்திருக்கும் இப்பதிவினில் எனது பின்னூட்டம் இடைச்செறுகலாக இருக்குமென்று நினைக்கிறேன்....
அன்புடன்
ஆதவா
வாருங்கள் ஆதவா .தங்களது கூற்று முற்றிலும் உண்மை
ராஜேஸ்வரி, கதை நன்றாக உள்ளது. முரண்பாடுகள் இல்லையென்றால் வாழ்க்கை ஏது...?
(எல்லாம் சரி... என்ன நடக்குது இங்கே? 237 பின்னூட்டங்கள்...)
வாழ்த்துக்கள்.
- பொன்.வாசுதேவன்
:( இப்படியும் நடக்கும். அதிகமான மனிதர்களுக்கு மதம் பி(டி)த்து இருக்கிறது. கதை சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள்...
நல்ல கதை!!! எனக்கு பிடித்தது.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
வாசுதேவன்,ஜோதிபாரதி, விக்னேஷ்வரன் மற்றும் விஜய் சின்னசாமி
நல்லா இருக்கு ...
படிக்கும் பொது "சொல்லாமலே" படம் நியாபகம் வந்துச்சு ...
நல்ல கதை..நல்லா சொல்லியிருல்லீங்க... உங்கள் பக்கமே வரமுடியாது போல... 244வது கமெண்ஸாக வரமுடிகிறது. நம்மளையும் கவனிச்சுங்கோ ராஜேஸ்வரி. வாழ்த்துக்கள்.
மோனி said...
நல்லா இருக்கு ...
படிக்கும் பொது "சொல்லாமலே" படம் நியாபகம் வந்துச்சு .//
வாங்க மோனி.கருத்துக்கு நன்றி
ராம்.CM said...
நல்ல கதை..நல்லா
சொல்லியிருல்லீங்க...//
நன்றி ராம் ..
// உங்கள் பக்கமே வரமுடியாது போல... 244வது கமெண்ஸாக வரமுடிகிறது. நம்மளையும் கவனிச்சுங்கோ ராஜேஸ்வரி. வாழ்த்துக்கள்//
என்ன ராம். இப்படி சொல்லிட்டீங்க.
எத்தனாவது கமெண்ட்ச் ஆக இருந்தா என்ன.?
next time "me the first"
போட்டுருங்க
இது எதார்த்தம்
எவ்வளவு கும்மி
ஆஹா...
நான் ரொம்ப லேட்டா தான் இந்த கதையைப் படிக்கிறேன்...
அருமை அருமை...
எப்பிடிங்க இதெல்லாம்???
கலக்கல்...
வாங்க வேத்தியன்..
கருத்துக்கலுக்கு நன்றி
பின்னூட்ட கடலில் போட்ட பெருங்காயம்.....
....251....
அக்கா கதை நல்லா இருக்கு......
//coolzkarthi said...
பின்னூட்ட கடலில் போட்ட பெருங்காயம்.....
....251....//
பெருங்காயம் எப்பொலுதும் வாசமாத்தான் இருக்கும் கார்த்தி..
நன்றி அக்கா....
நல்ல அருமையான கதை!
இயல்பா சொல்லி இருக்கீங்க!
நன்றி தேவன் சார்
நல்ல கதை கரு.. அதிர்ச்சியான முடிவு
ரசித்து படித்தேன்
அன்புடன்
கருணா கார்த்திகேயன்
//கார்த்திகேயன். கருணாநிதி said...
நல்ல கதை கரு.. அதிர்ச்சியான முடிவு
ரசித்து படித்தேன்//
வாங்க கார்த்திகேயன் .....
கதையை ரசித்தமைக்கு மிகவும் நன்றி...
அடிக்கடி வாங்க
// கதையை ஆரம்பிச்சதே “இன்று வெள்ளிக்கிழமை” என்றுதான்.. //
கதைனு சொல்லிட்டதால இது மெய்யாலு நடக்கலைனு நெனைக்கிறேன்.. ஆமாவா..?
மிக்க நன்றி ராஜேஸ்வரி அடிக்கடி கடை பக்கம் வாங்க சந்தோசமா சிரித்து விட்டு போங்க :-)
உண்மையிலுமே நீங்க ரசனைக்காரி... தான்
ராஜி கதை ரொம்ப நல்லா இருந்திச்சு
எதிர் பாராத திருப்பம்
இதுதான் எதார்த்தம், நல்ல எழுத்து நடை அருமையா இருந்திச்சு
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.
கும்மி சூப்பர் போங்க :))
அசத்திட்டீங்க ராஜி!!
Post a Comment