Wednesday, April 15, 2009

திரும்ப நான் கல்லூரி சென்றால்..

இந்த தலைப்பிற்கு,தொடர் பதிவிட அழைத்தமைக்கு தேவன் சாருக்கு முதலில் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

கல்லூரி-இந்த வார்த்தை, கல்லூரி படிப்பை முடித்தவருக்கு கிளர்ச்சியையும்,கல்லூரி செல்ல வாய்ப்பில்லாதவருக்கு ஒருவித ஏக்கத்தையும்,கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பவருக்கு துள்ளலையும் தரும் ஒரு மந்திரச்சொல்.

பொங்கல்,தீபாவளிக்கு மட்டுமல்லாமல்,வாரத்தில் ஏழு நாளும் வண்ண வண்ண ஆடைகளை புனைந்து,நித்தமும் வாழ்வை திருவிழாவாக்கி கொண்டிருப்பது ,கல்லூரி காலம்.

பாடம் ஒவ்வொன்றிற்கும்,ஒவ்வொரு நோட்டு போட்டு,புத்தக பொதி சுமந்த கழுதைகளிலிருந்து,பட்டாம் பூச்சியாய், “அனைத்தும் அறிவே” என்ற கூற்றை மெய்ப்பிக்கும் பொருட்டு,ஒரு சில புத்தகங்களை மட்டும் மார்பில் அணைத்தும்,சட்டையை ட்க் இன் செய்வது போல நோட்டுக்களை டக் இன் செய்தும் பரிணாம வளர்ச்சி கண்டது கல்லூரி.

பள்ளிகளில் கிணற்று தவளையாய் இருந்த நட்பு வட்டம்,பல வண்டிகள் மாறி சென்று படித்து,பல புதிய முகங்களை வாழ்வில் அடையாள்ப்படுத்தி,நட்பு விட்டத்தை அதிகப்படுத்தியது கல்லூரி காலம்.நண்பர்களாய்,இன்றும் நம்முடன் வந்து கொண்டிருப்பவர்களில் ,அதிக சதவிகிதமும் கல்லூரி தந்த வரம்.

தேவையில்லாத தயக்கங்களை வெளியேற்றி,பல திறமைகளை வெளிக்கொணரவும்,உணர்ந்து கொள்ளவும் வாய்ப்பளித்த காலம்.

பாடத்தில் பெயிலானால்,காதை பிடித்து திருகாமல்,காசு கொடுத்து மறுபடியும் எழுத சொல்லும் தந்தையையும்,ஹோம் வொர்க் செய்யாததிற்கு ,முட்டி போட சொல்லாத ஆசிரியர்களையும் உள்ளடக்கிய காலம்.

தெளிவாய் அணுகுபவருக்கு,ஏணிப்படிகளாகவும்,நெறிபடுத்தப்படாத எண்ணம் உடையவருக்கு சறுக்கு மரமாகவும் .அமைவது கல்லூரி வாழ்வு.

கடல் போல்,நவரசம் கலந்த அனைத்து உணர்வுகளையும் அள்ளித்தரும் காலம், அந்த நான்கைந்து வருட கல்லூரி காலம் மட்டும் தான்.

இவ்வாறு,அனைவருடைய வாழ்க்கையிலும் வசந்த காலமாய்,ஆயிரமாயிரம் கனவுகளை ருசிக்க வைக்கும்,இனிய பிராந்தியமாய் இருப்பது அவரவர் கல்லூரி காலங்கள்தான்.

வேதனையான பல நிகழ்வுகள் கூட,நினைக்கையில் இனிப்பாய் மாறுவது,கல்லூரி வாழ்வை மறுபடியும் அசைபோடும் போதுதான்..

நானும் எனது கல்லூரி வாழ்வை திரும்பி வாழ நினைக்கிறேன்,அதே நண்பர்களுடன்.ஏனெனில்,”படிப்பு”,”மதிப்பெண்” என்று குதிரைக்கு மாட்டிய கடிவாளமாய்தான்,என் கல்லூரி வாழ்வு சென்றது.நட்பு எனும் நறுமணத்தை ,சரியாக நுகர மறந்த நாட்கள் அவை.இன்றுள்ளது போல் நட்பு வட்டம், அன்று பெரிய பரப்பளவை கொண்டிருக்கவில்லை.

இந்த பதிவெழுத சந்தர்ப்பம் அமைந்தது போல, கல்லூரிக்கு மாணவியாய் செல்ல வாய்ப்பு அமையுமா என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.

இந்த பதிவை தொடர்ந்து எழுத நான் அழைப்பது, ஜமால் மற்றும் வேத்தியன்.





36 comments:

அப்துல்மாலிக் said...

//,”படிப்பு”,”மதிப்பெண்” என்று குதிரைக்கு மாட்டிய கடிவாளமாய்தான்,என் கல்லூரி வாழ்வு சென்றது.நட்பு எனும் நறுமணத்தை ,சரியாக நுகர மறந்த நாட்கள் அவை//

அச்சச்சோ என்னாங்க இவ்வளவு விளக்கமா விரிவா கல்லூரியை பற்றி சொல்லிவிட்டு கடைசிலே அனுபவிக்கவே இல்லேனு சொல்லிட்டீங்க‌

அப்துல்மாலிக் said...

//நண்பர்களாய்,இன்றும் நம்முடன் வந்து கொண்டிருப்பவர்களில் ,அதிக சதவிகிதமும் கல்லூரி தந்த வரம்.
//

இது எல்லோருக்கும் பொருந்தும்

அப்துல்மாலிக் said...

Me the First

அப்துல்மாலிக் said...

கல்லூரி வாழ்வை பற்றி அழகாக சொல்லிருக்கீங்க‌

உண்மைதான்...

நட்புடன் ஜமால் said...

மருபடியும் பாடம் நடத்தப்போறீங்கன்னு பார்த்தேன் ...


நம்மளையும் மாட்டிவிட்டாச்சா

ஏற்கனவே இதே பதிவுக்கும் பொன்னாத்தா மாட்டி உட்டிருக்காங்க

அப்துல்மாலிக் said...

//வாரத்தில் ஏழு நாளும் வண்ண வண்ண ஆடைகளை புனைந்து,நித்தமும் வாழ்வை திருவிழாவாக்கி கொண்டிருப்பது ,கல்லூரி காலம்.
///

பள்ளிக்கால யூனிஃபார்ம்லேர்ந்து பிடித்தமான டிரெஸ்

Rajeswari said...

அபுஅஃப்ஸர் said...
//,”படிப்பு”,”மதிப்பெண்” என்று குதிரைக்கு மாட்டிய கடிவாளமாய்தான்,என் கல்லூரி வாழ்வு சென்றது.நட்பு எனும் நறுமணத்தை ,சரியாக நுகர மறந்த நாட்கள் அவை//

அச்சச்சோ என்னாங்க இவ்வளவு விளக்கமா விரிவா கல்லூரியை பற்றி சொல்லிவிட்டு கடைசிலே அனுபவிக்கவே இல்லேனு சொல்லிட்டீங்க‌//

என்ன பண்றது அபு சார்...அதான் அடுத்த சான்ஸ்க்காக காத்துக்கிடு இருக்கேன்.

Rajeswari said...

நட்புடன் ஜமால் said...
மருபடியும் பாடம் நடத்தப்போறீங்கன்னு பார்த்தேன் ...


நம்மளையும் மாட்டிவிட்டாச்சா

ஏற்கனவே இதே பதிவுக்கும் பொன்னாத்தா மாட்டி உட்டிருக்காங்க//

யாரது பொன்னாத்தா..

Rajeswari said...

அபுஅஃப்ஸர் said...
Me the First//

yes..you only first

நட்புடன் ஜமால் said...

நட்பு எனும் நறுமணத்தை ,சரியாக நுகர மறந்த நாட்கள் அவை\\

இப்போ எப்படி ...

Rajeswari said...

நட்புடன் ஜமால் said...
நட்பு எனும் நறுமணத்தை ,சரியாக நுகர மறந்த நாட்கள் அவை\\

இப்போ எப்படி ..//

நட்புடன் ஜமாலோட பழக ஆரம்பிச்சாசுல ..அப்பறம் எப்படி இருக்கும்.

நட்புடன் ஜமால் said...

\\இன்றுள்ளது போல் நட்பு வட்டம், அன்று பெரிய பரப்பளவை கொண்டிருக்கவில்லை.\\

பரப்பளவு எவ்வளவு

Rajeswari said...

நட்புடன் ஜமால் said...
\\இன்றுள்ளது போல் நட்பு வட்டம், அன்று பெரிய பரப்பளவை கொண்டிருக்கவில்லை.\\

பரப்பளவு எவ்வளவு

//
3.14*r*r கரெக்டா ஜமால் சார்

SK said...

r = rasanaikaari'ya ??

pichuteenga pOnga. :)

Rajeswari said...

SK said...
r = rasanaikaari'ya ??

pichuteenga pOnga. :)//


வாங்க sk

தேவன் மாயம் said...

இந்த தலைப்பிற்கு,தொடர் பதிவிட அழைத்தமைக்கு தேவன் சாருக்கு முதலில் நன்றியை கூறிக்கொள்கிறேன்.
///
பதிவு போட்டதற்கு நன்றி!!

SK said...

என்ன ஆச்சுன்னு கேக்க வரதுக்குள்ள தூகிபுட்டியலே :) :)

நல்ல இருக்கீயளா டீச்சர் அம்மா.

தேவன் மாயம் said...

தேவையில்லாத தயக்கங்களை வெளியேற்றி,பல திறமைகளை வெளிக்கொணரவும்,உணர்ந்து கொள்ளவும் வாய்ப்பளித்த காலம்.

பரவாயில்லை!! கல்லூரிக்காலம் நன்றாகக் கழிந்து உள்ளது!!

தேவன் மாயம் said...

நானும் எனது கல்லூரி வாழ்வை திரும்பி வாழ நினைக்கிறேன்,அதே நண்பர்களுடன்.ஏனெனில்,”படிப்பு”,”மதிப்பெண்” என்று குதிரைக்கு மாட்டிய கடிவாளமாய்தான்,என் கல்லூரி வாழ்வு சென்றது.நட்பு எனும் நறுமணத்தை ,சரியாக நுகர மறந்த நாட்கள் அவை.இன்றுள்ளது போல் நட்பு வட்டம், அன்று பெரிய பரப்பளவை கொண்டிருக்கவில்லை.?//

நல்ல தெளிவா சொல்லியிருக்கீங்க!!

தேவன் மாயம் said...

கல்லூரி-இந்த வார்த்தை, கல்லூரி படிப்பை முடித்தவருக்கு கிளர்ச்சியையும்,கல்லூரி செல்ல வாய்ப்பில்லாதவருக்கு ஒருவித ஏக்கத்தையும்,கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பவருக்கு துள்ளலையும் தரும் ஒரு மந்திரச்சொல்.///
உண்மைதான்!! ஒருமுறைதான் பூக்கும் மலர் அது!!

வேத்தியன் said...

ஆஹா
என்னையுமா????

வேத்தியன் said...

இப்போ தான் நான் பாடசாலை கல்வி முடிச்சிருக்கேன்...
:-)

பரவாயில்லை...
நான் பள்ளி வாழ்க்கையைப் பத்தி எழுதனும்ன்னு ரொம்ப நாளா நினைச்சுட்டிருந்தேன்...
எழுதிரலாம்...

வேத்தியன் said...

இந்த ஜூலையில தான் நான் கல்லூரி போகப்போறேன்...
:)

அழைத்தமைக்கு நன்றிகள் அக்கா...

இன்னும் 2 நாட்கள்ல பதிவு வரும்...

:)

ஆ.சுதா said...

/கல்லூரி செல்ல வாய்ப்பில்லாதவருக்கு ஒருவித ஏக்கத்தையும்/

ஆமாங்க ஏக்கமாதான் இருக்குங்க

Suresh said...

சூப்பரா இருந்ததுங்க அதிலும் நிங்க சொன்ன ஒரு ஒரு விஷியமும் அழகு

//தேவையில்லாத தயக்கங்களை வெளியேற்றி,பல திறமைகளை வெளிக்கொணரவும்,உணர்ந்து கொள்ளவும் வாய்ப்பளித்த காலம்.//

நான் நிறைய தமிழ் மீடியம் படிச்ச பசங்கள பார்த்து நம்பிக்கை அளித்தது மறக்க முடியாது

//துள்ளலையும் தரும் ஒரு மந்திரச்சொல்/

100/100 உண்மை

இருப்பது அவரவர் கல்லூரி காலங்கள்தான்.
வேதனையான பல நிகழ்வுகள் கூட,நினைக்கையில் இனிப்பாய் மாறுவது,கல்லூரி வாழ்வை மறுபடியும் அசைபோடும் போதுதான்..

அருமை தோழி...

நிங்கள் தொடர்ந்து எழுத அழைத்த ஜமால் மற்றும் வேத்தியன் சிற்ந்த எழுத்தாளர்கள் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள்

எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

Suresh said...

//”படிப்பு”,”மதிப்பெண்” என்று குதிரைக்கு மாட்டிய கடிவாளமாய்தான்,என் கல்லூரி வாழ்வு சென்றது./

நாங்க எல்லாம் அரியர்ஸ் படிப்பு சுத்தம் நித்தம் ஒரு ஒரு நிமிடமும் வாழ்ந்த நாட்கள் ... ஒரு நாளும் வருந்தியது இல்லை காரணம் அவ்வளவு :-) சந்தோசமா அனு அனுவாய் அனுபவிச்சோம்

அப்பாவி முரு said...

//தெளிவாய் அணுகுபவருக்கு,ஏணிப்படிகளாகவும்,நெறிபடுத்தப்படாத எண்ணம் உடையவருக்கு சறுக்கு மரமாகவும் .அமைவது கல்லூரி வாழ்வு.//

aahaa., unmaiyaana vaarththaikal.

vaazththukkkal Rajeshwari...

Jackiesekar said...

ரொம்ப பீல் பண்ணி எழுதி இருக்கிங்க வாழ்த்துக்கள். நீங்கள் ஹேப்பி டேஸ் தெலுங்கு படம் எனக்காக தேடி பிடித்து பாருங்கள் நீங்கள் சொன்னது அத்தனையும் இருக்கும்...

"உழவன்" "Uzhavan" said...

ஏலே மக்கா... அரவிந், வெள்ளதுரை, முத்துக்குமாரு, பாண்டி, ஆறுமுகம், ரஞ்சித், கற்குவேலு..................... (இவங்கெல்லாம் என் கல்லூரி நண்பர்கள்) எல்லோரும் எங்கலா இருக்கீங்க??? தூத்துக்குடி மண்ணே அதிரும் அளவுக்கு நம்ம போட்ட ஆட்டம் இருக்கே.... எங்கடா போனீங்க??
கல்லூரியில் என் காலை இடறிவிட்ட கல்லைக் கூட என்னால் மறக்கமுடியாதபோது, எப்படி உங்களை????
இப்படியெல்லாம் என்ன பீல் பண்ண வச்சிருச்சி உங்க பதிவு..

ராம்.CM said...

ஸாரி ராஜேஸ்ஸி...எனக்கு கல்லுரி அனுபவம் கிடையாது. அதனால் அதை பத்தி கருத்து இல்லை..வருத்தமும் இல்லை.

Sathik Ali said...

//பொங்கல்,தீபாவளிக்கு மட்டுமல்லாமல்,வாரத்தில் ஏழு நாளும் வண்ண வண்ண ஆடைகளை புனைந்து,நித்தமும் வாழ்வை திருவிழாவாக்கி கொண்டிருப்பது ,கல்லூரி காலம்.//
ஞாயித்துக்கிழமை,ஹாலிடேஸ் எல்லாமா கல்லூரிக்கு போவீங்க.
ஞாபகங்களை கிளறி விட்டுட்டீங்களே..

வேத்தியன் said...

http://jsprasu.blogspot.com/2009/04/blog-post_16.html

ஆதவா said...

நான் கல்லூரி செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டேன்... இனி ஒருப்பொழுதும் அதைப் பெறப்போவதில்லை!!!! என் வாழ்க்கையில் அந்த மூன்று வருடங்களின் சுகங்களை எச்சூழ்நிலையிலும் பெறவியலாத துன்பம் தொண்டையில் அடைத்து க்கொண்டே இருக்கிறது..

உங்கள் எழுத்தில் ஒரு ஆறுதல்!!!

ramachandran said...

Hi rajeshvari,
rombe nalla ezhuthi irukeenga vazhthukkal
nyabagangali kilariyathrku nandri
happy days rombe nalla padam tamilil sariyaga pogavillai
rasanaikkari unmaiyil rasaniuyaga iorunthathu
thodarattum
vikatanil parthu padithathu thangalai patri
regards

ramachandran said...

Hi rajeshvari,
rombe nalla ezhuthi irukeenga vazhthukkal
nyabagangali kilariyathrku nandri
happy days rombe nalla padam tamilil sariyaga pogavillai
rasanaikkari unmaiyil rasaniuyaga iorunthathu
thodarattum
vikatanil parthu padithathu thangalai patri
regards

Rajeswari said...

thangalathu vaalththukkallukku mikka nandri ramachandran avargaley!