மனிதன் கூட்டமாய் வாழத்தொடங்கிய கால கட்டத்தில்,”சைகை” மொழிபாஷைகள்,அவனுடையதேவைகளையும்,உள்ளக்கிடக்கைகளையும்,
வெளிக்கொணரும் வடிகாலாய் அமைந்திருந்தன.
சிந்து சமவெளி நாகரிகத்தின் உச்சகட்டத்தில், ஒலியின் வடிவம் உருப்பெறத்தொடங்கியது.தங்களது வாழ்வு முறைகளை பறைசாற்றும் வண்ணம்,குகைகளிலும்,கற்பாறைகளிலும் வரிவடிவங்கள்,சித்திரவடிவங்கள் போன்றவற்றை செதுக்கினான்.
படர்ந்து கிளைபிரித்து,பல்வேறு இடங்களில்,தனித்தனி குழுக்களாய் வாழத்தொடங்கினான்.அச்சமயமே,தமக்கான,தத்தம் குழுக்களுக்கான ஒலி பாஷைகள் உருவாக்கப்பட்டது.அவ்வாறான குழு பாஷைகள்,பின்னாட்களில்,
அவரவருக்கான மொழியாய் மாறியது.
இன்று ,அன்றாட நடைமுறைச்செய்தியாகிக் கொண்டிருக்கும் மொழியுணர்வின் பின்புலம் அன்று விதைக்கப்பட்டதுதான்.
பிறப்பின் நோக்கமான பிறப்புவித்தல் முறையே அரங்கேறிகொண்டிருந்த காரணத்தினாலும்,ஆதலால் குழுக்களுக்குள் ஏற்பட்ட இட நெருக்கடியாலும்,தனது தேவைகளை விசாலப்படுத்திக் கொண்ட காரணத்தினாலும்,நாகரிக வளர்ச்சியாக மற்ற இடங்களுக்கும், மற்ற குழுக்களுக்கும் இடம் பெறத்துவங்கினான்.
இவ்வாறாக, பல பாஷைகள் கலக்க தொடங்கின.ஆனபோதும்,தனது பாஷை பேசுபவரிடம் மட்டும் அவனுக்கு அதிக பிடிப்பு ஏற்பட்டது.காரணம் ஒன்றுதான் - அது ”வசதி”(Comfortableness).நம் உணர்வுகளை அப்படியே புரிந்து கொள்ளும் ஆற்றல் ,90% அதே மொழி பேசுபவரால் மட்டுமே உணரமுடியும்.
உதாரணத்திற்கு ஒரு நிகழ்வை கூறுகிறேன்.”யாரடி நீ மோகினி” திரைப்படத்தை முதலில் தெலுங்கில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.தமிழில் ரகுவரன் செய்த பாத்திரத்தை,அங்கே மற்றொருவர் செய்திருந்தார்.பெயர் சரியாக ஞாபகம் இல்லை.ஆனால் அவர் பல தமிழ்படங்களில் சிறந்த வில்லனாய் நடித்திருந்தவர்(”சாமி” பட வில்லன்). அவரை வில்லனாகவே பார்த்து பழக்கப்பட்ட என்னால்,அவருடைய கதாபாத்திரத்தின் வலிமையை முழுதாய் புரிந்து கொள்ள இயலவில்லை.தமிழில் பார்த்த பிறகே அதை நான் உணர்ந்தேன்.
ஆக உணர்வுகளை முறையாக புரியவைக்கவும்,புரிந்துகொள்ளவும் உருவாக்கப்பட்ட,வார்த்தைகளின்கலவையானமொழிஎனும்ஒலியின்சக்தி,
இன்று,பெரும்பாலும் பிறரைவசைபாடுவதற்கும்,புறங்கூறுதலுக்கும்,
ஏமாற்றுவதற்கும் அளப்பரிய உதவி செய்து கொண்டிருக்கிறது.
படைக்கப்பட்டதற்கான பயனை மறந்து ,நாவினால் சுட்ட வடுவாகி பாழுங்கிணற்றடியில் நின்று கொண்டிருக்கிறது அவரவர் பாஷை.
மாறுவோம் நாம்.நம்முடைய மொழி வன்னொலி எழுப்ப அல்ல..இன்னொலியை அலைவரிசையாக்க..நம்முடைய பாஷை அசைவ சொற்களை உபயோகிக்க அல்ல..அன்பு நெறியை வலியுறுத்த..சமூகத்திற்கும்,வரும் சந்ததியருக்கும் நம்மால் முடிந்த உதவி இதுவாகட்டும்.
”அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்”.
28 comments:
நல்ல ஒரு அருமையான பதிவு ராஜேஷ்வரி அவர்களே
நல்ல ஒரு அருமையான பதிவு ராஜேஷ்வரி அவர்களே
//நம்முடைய பாஷை அசைவ சொற்களை உபயோகிக்க அல்ல..நெறியை வலியுறுத்த..//
அனைவருக்கும் தேவையான கருத்து...
மிக நல்ல பதிவு அக்கா...
ரசித்துப் படித்தேன்...
எழுத்துகளில் விஷயத்தைக் கூறிய விதம் நன்றாக உள்ளது...
நன்றி...
அருமையான பதிவு ...
மொழி என்பதே நம்முடைய உணர்ச்சிகளை, தேவைகளை தெரிவிப்பதற்க்காக ஏற்பட்டது. அதில் எந்த விதமான, கடுஞ்சொற்களை உபயோகிக்காமல் இருந்தால், நல்ல நட்பு வட்டம் பெருகும்.
அருமையான இடுகைக்குப் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்.
முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்”.
நல்ல பதிவு ராஜேஷ்வரி
ரசனைக்காரிthan
.
//இன்று வரை,குறைவிலா குன்றொளியாய் திகழ்ந்து வரும் “ஒலி” எனும் ஆற்றல், “பேச்சு”,”உரையாடல்” என்ற மூலப்பூச்சுக்களை அணிந்து,பரிணாமம் அடைந்திருக்கிறது.//
அருமையான துவக்கம், நீங்க ஆசிரியரா.... நல்ல விளக்கவுரை
//படைக்கப்பட்டதற்கான பயனை மறந்து ,நாவினால் சுட்ட வடுவாகி பாழுங்கிணற்றடியில் நின்று கொண்டிருக்கிறது அவரவர் பாஷை.
///
நல்லா சொன்னீங்க பாழுங்கிணற்ரின் வாயிலில்
//நம்முடைய பாஷை அசைவ சொற்களை உபயோகிக்க அல்ல..அன்பு நெறியை வலியுறுத்த..சமூகத்திற்கும்,வரும் சந்ததியருக்கும் நம்மால் முடிந்த உதவி இதுவாகட்டும்//
மற்றுமொறு மொழிப்போர்
வாழ்க உமது தொண்டு
மக்கா பாருங்க... கைகோர்ப்போம்.. மொழிவளர்ப்போம்
நல்ல சிந்தனையில் அருமையான பதிவு.
நல்ல பதிவு
வாழத்துக்கள்
சிறந்த பதிவு. இனிமேலாவது எல்லோரது வார்த்தைகளில் வாசம் வரட்டும்.
வாழ்த்துக்கள்!
அன்புடன்
உழவன்
மொழி சண்டை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பாஸிட்டிவ் அப்ரோச் பதிவு!
சூப்பர்
இந்த கட்டுரையை இன்னும் விளக்கமாகக் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்... முன்னுரையை மட்டும் படிப்பதைப் போன்று இருக்கிறது. சிந்து சமவெளிக்கு முன்னால், அதாவது மெசொபொடாமியாவில் உருளை பதிப்பி (cylinder seal) ஒன்றை பயன்படுத்துவார்கள். அது அரசகட்டளைகளுக்கு உபயோகப்பட்டது. பேச்சின் முதல் வரிவடிவம் அது... அல்லது காகித வடிவம்.. அதற்கும் முன்னர், குகையோவியங்கள் பேச்சுக்களாக ஒலித்தன. லாஸ்காக்ஸ், அல்டமீரா, சாவெட் போன்றவற்றில் காணலாம்...
பேச்சு என்பது மனிதன் கண்டுபிடித்த சொந்த கருவி.. அது சிலரது உருவத்திற்குப் பொருந்தாமல் இருக்கலாம்.. அல்லது பொருந்தாத பார்வை இருக்கலாம்... எல்லாமே நம் அகத்தில் உள்ளது!!!
பதிவு அருமை
//நம்முடைய பாஷை அசைவ சொற்களை உபயோகிக்க அல்ல..நெறியை வலியுறுத்த..//
அருமையான கருத்து ராஜி!!
பதிவு அருமையான பதிவு சூப்பர்!!
படர்ந்து கிளைபிரித்து,பல்வேறு இடங்களில்,தனித்தனி குழுக்களாய் வாழத்தொடங்கினான்.அச்சமயமே,தமக்கான,தத்தம் குழுக்களுக்கான ஒலி பாஷைகள் உருவாக்கப்பட்டது.அவ்வாறான குழு பாஷைகள்,பின்னாட்களில்,
அவரவருக்கான மொழியாய் மாறியது.
//
நல்ல ஆய்வு! சூப்பரா எழுதியிருக்கீங்க!!
நல்ல பதிவு.
//படைக்கப்பட்டதற்கான பயனை மறந்து ,நாவினால் சுட்ட வடுவாகி பாழுங்கிணற்றடியில் நின்று கொண்டிருக்கிறது அவரவர் பாஷை//
ரொம்ப சரியாகச் சொன்னீர்கள் ராஜி!!!!
அன்புடன் அருணா
நல்ல ஒரு அருமையான பதிவு ...
ரசனைக்காரி..
//,தனது பாஷை பேசுபவரிடம் மட்டும் அவனுக்கு அதிக பிடிப்பு ஏற்பட்டது.காரணம் ஒன்றுதான் - அது ”வசதி”(Comfortableness).நம் உணர்வுகளை அப்படியே புரிந்து கொள்ளும் ஆற்றல் ,90% அதே மொழி பேசுபவரால் மட்டுமே உணரமுடியும்.
//
நமது மொழி பேசுபவர்களிடத்திலே நமக்குத் தோன்றும் பாசம், பரிவு, ஈடுபாடு, இணக்கம், அவர்பால்
நம் இதயத்தே எழும் உணர்வுகள் எல்லாவற்றிற்கும் 'வசதி ' மட்டும்தானா எனத் தோன்றவில்லை.
இரண்டாவதாக, உணர்வுகளை ஒருவன் தனது தாய் மொழியில் பகருகையில்தான் அப்படியே அதே மொழிபேசும் இன்னொருவனால் முற்றிலும் புரிந்துகொள்ள இயலும் என்ற வாதத்தையும் முழுமையெனக்
கொள்தலும் கடினம்.
நமது தாய்மொழிதனையே இன்னொருவர் பேசுகையில் நம் மனதிலே ஒரு நெருக்கம் அவர்பால் தோன்றுவதற்குக் காரணம், அவரது வாழ்க்கை நெறிகளும் பண்புகளும் கலாசாரமும் நமதை ஒத்து இருப்பதால் தான் என்றே எனக்குத் தோன்றுகிறது.
நமது இந்திய நாட்டில் பேசப்படும் மொழிகளில் ஒரு ஆறு மொழிகளை நான் சரளமாக அதே மொழி
பேசுபவர் போல் பேசிட இயலும் என்றாலும் அவர்கள் பால் மன நெருக்கம் ஏற்பட்டது பெரும்பாலும் இல்லை. (தொழில் முறை நட்பு வேறு ) தமிழ் நாட்டில் இருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஒரு தமிழ்க்குடும்பத்தில் ஒரு காஃபி சாப்பிடுகையில் ஏற்படும் மன நிறைவு இன்னொரு மொழி பேசுபவர் வீட்டில் அறுசுவை உண்ணுகையில் கூட ஏற்படுவதில்லை.
இதெல்லாம் இருக்கட்டும். சென்ற மாதம் ஒரு நடுவயதுப் பெண்மணியை ந்யூ ஜெர்ஸியில் ஒரு பெரிய
மாலில் சந்தித்தேன். அவள் ஒரு விற்பனை அலுவலர்.நானும் என் மனைவியும் தமிழில் பேசுவதைக்கண்டு, நீங்கள் தமிழ் நாடா, என அவரும் அளவளாவத்துவங்கினார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராம். கணவர்
ஒரு மருத்துவராம்.அவரது குடும்பத்தினம் இன்னும் அங்கே தான் இருக்கிறார்களாம். . ஈழத்தில் தமிழ் மக்கள் இன்றைய நிலை குறித்து அவர் பேசும்போது என் கண்கள் குளமாயின.
அவரோ பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசினார். தொடர்ந்து பேசவேண்டும் என்ற ஈடுபாடு ஏன் ஏற்படுகிறது ?
தமிழ் . தமிழ். அது தான் ந்ம்மை எல்லாம் இணைக்கும் பாலம் என்றே தோன்றுகிறது.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
good blog
all d best
sankarkumar
//நம்முடைய பாஷை அசைவ சொற்களை உபயோகிக்க அல்ல..நெறியை வலியுறுத்த..//
நெத்தி அடி ராஜி அவர்களே.......
நிறைய எழுதுங்கள்....... வாழ்த்துக்கள்............
நேரம் கிடைக்கும் போது, இங்கேயும் விஜயம் செய்யுங்கள். கருத்து பகிருங்கள்.
www.edakumadaku.blogspot.com
www.jokkiri.blogspot.com
தாமததிற்க்கு மன்னிக்கவும், இப்போது டியாஷ் போர்டில் சில பதிவுகள் வர மாடிங்க்குது..
மிக ஆராய்ந்து அருமையாய் எழுதி இருக்கிங்க நல்ல பதிவு பகிர்தல்...
வார்த்தைகள் விளையாடுது ;)
//படைக்கப்பட்டதற்கான பயனை மறந்து ,நாவினால் சுட்ட வடுவாகி பாழுங்கிணற்றடியில் நின்று கொண்டிருக்கிறது அவரவர் பாஷை.
//
இது நச்
என்ன ஆச்சு பதிவு அப்படியே நிக்குது. பள்ளி தொடர் வேற நிக்குது அப்படியே :)
Post a Comment