Saturday, April 11, 2009

கையறு(ம்) பாவை...


காண்பதும் வெள்ளை
கேட்பதும் வெள்ளை
உணர்தலோ இல்லை
எவ்வாறுரைப்பேன் எனது நிலை..

சுகமான மணம் நான்
சுடும் பாலைவனத்திலே

குளிரான நிறம் நான்
கும்மிருட்டிலே

இதமான வார்த்தை நான்
இதழ் மவுனத்திலே

வாழ்தலில் மீன் நான்
வாட்டும் சுடுநீரிலே

முடிவிலா வார்த்தைகளுடன்
உறவாடிய ஒருகாலம்

மூச்சிலா உணர்வுகளுடன்
முனகலோடு இக்காலம்

“உள்ளிருக்கும் நிலை கூட
உற்ற நேரத்தில்
உரைக்க வேண்டும்”-நீ உரைத்தது.
“உள்ளிருக்கும் நிலை கூட
உற்ற நேரத்தில்
உறைக்க வேண்டும்”-நான் உரைப்பது.
தடம் மாறியது நானா?
பயணமா?
எவ்வாறுரைப்பேன் எனது நிலை.


20 comments:

வேத்தியன் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

அனுபவிச்சேன்..
ஆராயவில்லை...
:-)

Rajeswari said...

வேத்தியன் said...
ரொம்ப நல்லா இருக்குங்க...

அனுபவிச்சேன்..
ஆராயவில்லை...
:-)

நன்றி வேத்தியன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ம்ம்ம்!
நன்று!!

நட்புடன் ஜமால் said...

மிக அருமையாக இருக்குங்க‌

நட்புடன் ஜமால் said...

\\“உள்ளிருக்கும் நிலை கூட
உற்ற நேரத்தில்
உரைக்க வேண்டும்”-நீ உரைத்தது..

“உள்ளிருக்கும் நிலை கூட
உற்ற நேரத்தில்
உறைக்க வேண்டும்”-நான் உரைப்பது...\\


மிகவும் இரசித்தேன்

Rajeswari said...

வாங்க ஜோதிபாரதி..

வாங்க ஜமால்...

கார்த்திகைப் பாண்டியன் said...

என்ன என்று சொல்ல இயலாத நிலை கவிதையில் வெளிப்படுகிறது.. நல்லா இருக்குங்க..

அகநாழிகை said...

ராஜி,
கவிதை நன்றாக இருக்கிறது.
ஆச்சர்யக்குறி, புள்ளி, கமா, அழுத்தப்படுத்தி வார்த்தைகளை போடுதல் இவற்றையெல்லாம் எடுத்துவிடுங்கள் தோழி.

Rajeswari said...

அகநாழிகை said...
ராஜி,
கவிதை நன்றாக இருக்கிறது.
ஆச்சர்யக்குறி, புள்ளி, கமா, அழுத்தப்படுத்தி வார்த்தைகளை போடுதல் இவற்றையெல்லாம் எடுத்துவிடுங்கள் தோழி.//


மேலான கருத்துக்களுக்கு நன்றி அகநாழிகை சார்.(மாற்றங்களும் செய்யப்பட்டது.)

KRISHMANIVEL said...

ஏதோ ஒரு ஏக்கம், ஒரு சோகம் இழையோடுகிறது. வார்த்தைகள் முக்கியமல்ல. உணர்வுகள்தான் முக்கியமாய் தோன்றுகிறது கவிதைகளுக்கு. வாழ்த்துக்கள்.

KRISHMANIVEL said...

வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும் போது கீழ் கண்ட வலைபூவிற்கு சென்று பாருங்கள்.


http://pattikkaattaan.blogspot.com

அப்பாவி முரு said...

வாழ்த்துக்கள் ராஜி.,

நாம யாரு., நம்ம உணர்ச்சி என்ன என்று நம்மாளுகளாலே காணக்கூடாது...

சொன்னதை நீங்க செஞ்சுட்டீங்க., நான் முயற்சிகிறேன்.

தேவன் மாயம் said...

காண்பதும் வெள்ளை
கேட்பதும் வெள்ளை
உணர்தலோ இல்லை
எவ்வாறுரைப்பேன் எனது நிலை///

உணர்வு பூர்வமான வரிகள் ராஜேஸ்!!

தேவன் மாயம் said...

“உள்ளிருக்கும் நிலை கூட
உற்ற நேரத்தில்
உரைக்க வேண்டும்”-நீ உரைத்தது.
“உள்ளிருக்கும் நிலை கூட
உற்ற நேரத்தில்
உறைக்க வேண்டும்”-நான் உரைப்பது.
தடம் மாறியது நானா?
பயணமா?
எவ்வாறுரைப்பேன் எனது நிலை.///

நல்ல ரசனையுடன் எழுதி இருக்கீங்க ராஜேஸ்!!

Sathik Ali said...

அருமை..
//சுகமான மணம் நான்
சுடும் பாலைவனத்திலே

குளிரான நிறம் நான்
கும்மிருட்டிலே//

தமிழ் மதுரம் said...

வாழ்தலில் மீன் நான்
வாட்டும் சுடுநீரிலே//

பெண்ணின் மௌனங்களுக்குள் புதைந்துள்ள கருத்துக்களை வைத்துக் கவிதை படைத்துள்ளீர்கள். கவிதை அருமை. தொடருங்கோ!

தமிழ் மதுரம் said...

வாழ்தலில் மீன் நான்
வாட்டும் சுடுநீரிலே//


பெண் வேதனைகளுக்கு மத்தியிலே வாழ்கின்றாள் என்பதனைக் காட்ட நீங்கள் எடுத்துக் கொண்ட உவமை அருமை.. இது மிகவும் அழகு சேர்க்கிறது கவிதைக்கு!

அப்துல்மாலிக் said...

தன்னிலை மறந்த வரிகள்

அனைத்து வரிகளையும் ரசித்தேன்

ஆதவா said...

உண்மையைச் சொல்லப் போனா,,....


எனக்குப் புரியலைங்க... அதான் முன்னமே வந்து பார்த்துட்டு பதில் எழுதல...

சரி எதுக்கும் இன்னொரு தடவ படிச்சுப்பார்ப்பம்னு இதோட மூணு தடவ படிச்சுட்டேன்!!!

சுகமான மணம்,
குளிரான நிறம்
சுடுநீற்று மீன்

போன்ற சொற்கள் வித்தியாசம்!!!! வாழ்த்துக்கள் டீச்சர்

butterfly Surya said...

நல்லாயிருக்கு.

வாழ்த்துகள்.