சரி விசயத்திற்க்கு வருவோம்..எனக்கு ஒரு பெரிய சந்தேகம்.நான் யாருக்கு வோட்டு போடுறது? (தமிழிஷ்ல இல்லப்பா)எந்த காரணத்துக்காக அவங்களுக்கு வோட்டு போடணும்?
இது மட்டும் தான்ப்பா....
போன தடவை நான் வோட்டு போடுரப்பவே ,வீட்டுல ஒரு கலவரம் நடக்காத குறைதான் போங்க.அப்பா,எம்.ஜி.யார் விசிறிங்கறதால,”நான் ஆணை இட்டால் ”ஷ்டைலில் ”அந்த” கட்சிக்கு வோட்டு போடச்சொன்னார்.எங்க அம்மா தியாகி மக்ள்ங்கறதால,”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்குன்னு சொல்லி “இந்த” கட்சிக்கு வோட்டு போடச்சொன்னார்.சரி ,சரின்னு தலையை ஆட்டிட்டு போய் ஒரு பட்டனையும் அமுக்கிட்டு வந்துட்டேன்.(ஆ..அசுக்கு புசுக்கு எந்த பட்டனை அமுக்கினேன்னு சொல்லமாட்டேன்)
இப்பதான் நான் வளந்துட்டேன்ல,சரி சுயமா யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம்னு நினைக்கிரப்பவே,நிறைய கட்சிகள்...ஒரே குழப்பமா இருக்கு..சரி நம்ம தோழர்கள் உன்ககிட்ட ஒரு ஐடியா கேட்கலாமுனுதான் இங்கே வந்தேன்.
ஆனா,ஒன்னு மட்டும் புரியுதுப்பா..எப்பவுமே ரெண்டு பேருக்கு போட்டி நடக்கும்.அவங்களுக்கு நிறைய ஹெல்ப்பிங் டெண்டன்சி உள்ள கூட்டணி ஃப்ரண்ட்ஷ் வேற..இது இப்ப மூணாவுதா கப்பல் ஓட்டுனர் வந்து இருக்காரு.அவரு இப்ப வரைக்கும் தனியாத்தான் கப்பல் விட்டுகிட்டு இருக்காரு..எப்ப புயலடிச்சு,அடுத்த கப்பலோட மோதப்போகுதோ தெரியல..இதுல சரத்து சாரி சரக்கு கப்பல் வேர,ஒரே கஷ்டமப்பா..
இதுல ,இலங்கை பிரச்சனையை வைத்து தேர்தல் முடிவு வரும்னு பயந்து டயட்ல இருக்கரவங்க எல்லாம் உண்ணாவிரதம் இருக்கிராங்க..ஒண்ணும் சொல்லுரதுக்கு இல்ல..
சரி,என் பிரச்சனைக்கு வாங்க..நான் வோட்டு போடப்போகிர தலைவராகட்டும்,அந்த் கட்சி உறுப்பினர்களாகட்டும் ,they should have the following qualifications..(என்ன ரொம்ப ஓவரா இருக்கா? என்ன பண்றது.எனக்கு வரப்போர தலைவன் எப்படி இருக்கனும்னு எனக்கு ஒரு கனவு இருக்க கூடாதா? இந்த இடத்தில யாராவது கமல நினைச்சிங்கன்னா ஐ அம் வெரி சாரி)
தகுதிகள்:
1)ஊழல் பண்ணி இருக்க கூடாது.பண்ணவும் கூடாது.
2)இளைஞர்களின் முக்கியத்துவம் உணர்ந்தவரா இருக்கணும்,atleast 45 வயசுக்கு கம்மியானவரா இருந்தா நல்லது.
3)பொது திட்டங்கள் உருவாக்கிட்டு ,சும்மா தேமேன்னு உட்காராம,அமுல் படுத்தணும்.
4)மக்கள் நலனுக்காக (அட பொது மக்கள்ப்பா) ,ஒவ்வொரு நிமிசம் எல்லாம் வேணாம்,ஒரு நாளைல எட்டு மணி நேரம் உழைச்சா போதும்.
5)அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி,எதாவது ஒரு துறையில வல்லுனராகவும், சமூக சேவகரா வும் இருந்திருந்தாங்கன்னா,ரொம்ப நல்லது.
இந்த மாதிரி இன்னும் பெரிய பட்டியல் இருக்கு..முதலில் இந்த 5ம் satisfy ஆகுர தலைவர் யர்ருன்னு எனக்கு சொல்லுங்க..நான் வோட்டு போடுரதுக்கு ஹெல்ப் பண்ணுங்க..
ஏ..சைலன்ஷ்..பதிவு எழுதிட்டு இருக்கேன்ல..டிஷ்டர்ஃப் பண்ணிட்டு..(ஒண்ணுமில்லைங்கண்ணா...அண்ணன் பசங்க வந்து கைய தட்டி விட்டுகிட்டே இருக்காங்க)
டிஷ்கி::தேர்தலுக்கு உபயோகமான ஒரு லிங்க் போய் பாருங்க http:// www.jaagore.com
61 comments:
நானா முதல் ஆளு???
ஆமா நீங்கதான்
என்னங்க நீங்க வேற???
அரசியல்வாதிகள்கிட்ட போய் இப்பிடி எல்லாம் எதிர்ப்பாத்துகிட்டி...
ஊழல் இல்லாம ஒரு அரசியலா???
அரசியல்ல அதெல்லாம் சாதாரணமப்பா...
:-)
எல்லாம் ஓகே...
இதுல இந்த பன்ச் தாங்க ஹைலைட்...
ஏ..சைலன்ஷ்..பதிவு எழுதிட்டு இருக்கேன்ல..டிஷ்டர்ஃப் பண்ணிட்டு..
இது ரொம்ப ரொம்ப சூப்பர்...
தாயுள்ளம் கொண்டவரான நகைச்சுவை நடிகர் விஜய் பாத்தா அழுதுடுவார் போங்க...
:-)
என் கனவு பலிக்காதா?
இந்த தகுதிகள் உள்ளவங்களுக்குதான் ஓட்டா? அப்போ நாந்தான் தேர்தல்ல நிக்கணும்!!!
//ஜீவன் said...
இந்த தகுதிகள் உள்ளவங்களுக்குதான் ஓட்டா? அப்போ நாந்தான் தேர்தல்ல நிக்கணும்!!!///
இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்.
1)ஊழல் பண்ணி இருக்க கூடாது.பண்ணவும் கூடாது.
2)இளைஞர்களின் முக்கியத்துவம் உணர்ந்தவரா இருக்கணும்,atleast 45 வயசுக்கு கம்மியானவரா இருந்தா நல்லது.
3)பொது திட்டங்கள் உருவாக்கிட்டு ,சும்மா தேமேன்னு உட்காராம,அமுல் படுத்தணும்.
4)மக்கள் நலனுக்காக (அட பொது மக்கள்ப்பா) ,ஒவ்வொரு நிமிசம் எல்லாம் வேணாம்,ஒரு நாளைல எட்டு மணி நேரம் உழைச்சா போதும்.
5)அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி,எதாவது ஒரு துறையில வல்லுனராகவும், சமூக சேவகரா வும் இருந்திருந்தாங்கன்னா,ரொம்ப நல்லது.//
அப்ப நான் தான் தேர்தலில் உங்க தொகுதில நிக்கணும்.
//எங்க அம்மா தியாகி மக்ள்ங்கறதால,”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்குன்னு சொல்லி //
தியாகி - தமிழ் ஏதோ இடிக்குதே?
//they should have the following qualifications//
அப்ப ஓட்டு போடமாட்டீங்க, அப்படித்தான.,
// அப்பாவி முரு said...அப்ப நான் தான் தேர்தலில் உங்க தொகுதில நிக்கணும்.//
அதுக்குள்ள ரெண்டு போட்டியாளரா?
// Rajeswari said...
// அப்பாவி முரு said...அப்ப நான் தான் தேர்தலில் உங்க தொகுதில நிக்கணும்.//
அதுக்குள்ள ரெண்டு போட்டியாளரா?//
இது ஜனநாயக நாடு மற்றும் மக்கள் தொகைக்கு குறைவில்லாத நாடு.
கெட்டவங்க அளவுக்கு இல்லைன்னாலும், நல்லவங்க கொஞ்ச பேராச்சும் இருக்கோம்ல.
//ஏ..சைலன்ஷ்..பதிவு எழுதிட்டு இருக்கேன்ல..டிஷ்டர்ஃப் பண்ணிட்டு..//
ஷ்... அப்பா கண்ணைக்கட்டுதே..
//இப்பதான் நான் வளந்துட்டேன்ல//
ஹே..ஹே..
அப்பாவி முரு said...கெட்டவங்க அளவுக்கு இல்லைன்னாலும், நல்லவங்க கொஞ்ச பேராச்சும் இருக்கோம்ல//
கண்டிப்பாக
நல்லபதிவு. அனேகமா இப்படி தகுதியிருக்கிற வேட்பாளருக்குதான் வோட்டு போடணும்னா இந்தத் தேர்தல்ல நடக்காது. இந்தியா பூராம் இருக்குற கோயிலுக்கு இன்னோரு அரை நூற்றாண்டு நடந்து சிவபெருமானை வேண்டிக்குங்கோ...
அவருக்கும் முடியாது. ஆனா என்ன அதுக்குள்ள வயசாயிரும். அப்புறமா உங்க ஓட்டை யாராவது போடுருவாங்க.
மதிபாலா said...
நல்லபதிவு. அனேகமா இப்படி தகுதியிருக்கிற வேட்பாளருக்குதான் வோட்டு போடணும்னா இந்தத் தேர்தல்ல நடக்காது. இந்தியா பூராம் இருக்குற கோயிலுக்கு இன்னோரு அரை நூற்றாண்டு நடந்து சிவபெருமானை வேண்டிக்குங்கோ...
அவருக்கும் முடியாது. ஆனா என்ன அதுக்குள்ள வயசாயிரும். அப்புறமா உங்க ஓட்டை யாராவது போடுருவாங்க//
வாங்க மதிபாலா..சரியா சொன்னீங்க..
நடக்காத விஷயத்த சொல்லிட்டு இப்படி இருந்தாத்தான் நான் ஓட்டு போடுவேன்னா எப்படி மேடம்.. ஆனா நாங்க உங்களுக்கு ஓட்டு போடுவோம்ல..
கார்த்திகைப் பாண்டியன் said...
நடக்காத விஷயத்த சொல்லிட்டு இப்படி இருந்தாத்தான் நான் ஓட்டு போடுவேன்னா எப்படி மேடம்.. ஆனா நாங்க உங்களுக்கு ஓட்டு போடுவோம்ல..///
வாங்க பொன்னியின் செல்வரே..எப்படினாலும் ஓட்டு போட்டுதான் ஆகணும்.இல்லாட்டி நம்ம ஓட்ட யாராவது போட்டுருவாங்களே
என் ஒட்டு 49o க்குதான்
see my http://syednavas.blogspot.com/
உங்கள் பொன்னான வாக்குகளைன்னு ஒரு பதிவு (சும்மா) போட்டு இருக்கேன்
நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க மேடம்
ஜீவன் அண்ணாவுக்கே என் ஓட்டு.
//தேர்தல் வரப்போகுதுங்கரதால,//
தேர்தல் திருவிழா வரப் போகுதா?
//ஒரு பதிவு அரசியல் சம்பந்தம்மா போடலாமுனு நினைச்சேன். //
போடுங்க.. போடுங்க...
எனக்கு அரசியல் அறிவு கொஞசம் கம்மிதான்.
அப்படி ஏதும் தெரியலையே!!!!!
தேர்தல் திருவிழா + எங்க ஊர்லயும் திருவிழா வரப்போகுது
ஆதவா said...
எனக்கு அரசியல் அறிவு கொஞசம் கம்மிதான்.
அப்படி ஏதும் தெரியலையே!!!!!//
நன்றி ஆதவா...
ஆ..அசுக்கு புசுக்கு எந்த பட்டனை அமுக்கினேன்னு சொல்லமாட்டேன்)
ஆக மொத்தம் நீங்க கண்ணமூடிட்டு அமுக்கி இருக்கீங்கன்னு தெரியுது!!1
ஒரே குழப்பமா இருக்கு..சரி நம்ம தோழர்கள் உன்ககிட்ட ஒரு ஐடியா கேட்கலாமுனுதான் இங்கே வந்தேன்.
நீங்க கேட்கும் தகுதிகளுக்கு ஆட்களே இல்லை.. பேசாம ஜனநாயக உரிமையை நீங்கள் தூக்கி எறிந்துவிடலாம்..
நான் யாருக்கு ஓட்டு போட்டேன்?
பா.ம.தே.ஆ.தி.மு.க. (புரியலீங்களா??? ) ஹிஹி
ஆதவா said...
ஒரே குழப்பமா இருக்கு..சரி நம்ம தோழர்கள் உன்ககிட்ட ஒரு ஐடியா கேட்கலாமுனுதான் இங்கே வந்தேன்.
நீங்க கேட்கும் தகுதிகளுக்கு ஆட்களே இல்லை.. பேசாம ஜனநாயக உரிமையை நீங்கள் தூக்கி எறிந்துவிடலாம்..
நான் யாருக்கு ஓட்டு போட்டேன்?
பா.ம.தே.ஆ.தி.மு.க. (புரியலீங்களா??? ) ஹிஹி//
யாரு அது??
//4)மக்கள் நலனுக்காக (அட பொது மக்கள்ப்பா) ,ஒவ்வொரு நிமிசம் எல்லாம் வேணாம்,ஒரு நாளைல எட்டு மணி நேரம் உழைச்சா போதும்///
ஒவ்வொருநாளும் ஒவொருதருடைய வேலை (மம்மட்டி எடுத்துக்கிட்டு வயலுக்கு) செய்யனுமா
//போன தடவை நான் வோட்டு போடுரப்பவே ,வீட்டுல ஒரு கலவரம் நடக்காத குறைதான் போங்க.அப்பா,எம்.ஜி.யார் விசிறிங்கறதால,”நான் ஆணை இட்டால் ”ஷ்டைலில் ”அந்த” கட்சிக்கு வோட்டு போடச்சொன்னார்.எங்க அம்மா தியாகி மக்ள்ங்கறதால,”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்குன்னு சொல்லி “இந்த” கட்சிக்கு வோட்டு போடச்சொன்னார்.சரி ,சரின்னு தலையை ஆட்டிட்டு போய் ஒரு பட்டனையும் அமுக்கிட்டு வந்துட்டேன்//
உங்க வீட்டுக்குள்ளேயே குழப்பம் இருக்கும்போது தமிழ்நாட்டு எம்மாம்பெரிய தொகுதி, எத்தனை மக்கள் குழப்பம் இருக்காதா???
//சரி நம்ம தோழர்கள் உன்ககிட்ட ஒரு ஐடியா கேட்கலாமுனுதான் இங்கே வந்தேன்.
//
தோழர்கிட்டே அய்டியா? ஹய்யோ ஹயோ
வாங்க அபு சார்
ஏதோ மறுப்பு பாரம் அப்படின்னு B51 அது இதுன்னு இருக்காமே?
உண்மையில் நல்ல பதிவு....
//4)மக்கள் நலனுக்காக (அட பொது மக்கள்ப்பா) ,ஒவ்வொரு நிமிசம் எல்லாம் வேணாம்,ஒரு நாளைல எட்டு மணி நேரம் உழைச்சா போதும்.//
யப்பா!
இந்த நுண்ணரசியலை நினைச்சு சிரிச்சேன்!!
அருமை!!!
போன தடவை நான் வோட்டு போடுரப்பவே ,வீட்டுல ஒரு கலவரம் நடக்காத குறைதான் போங்க.அப்பா,எம்.ஜி.யார் விசிறிங்கறதால,”நான் ஆணை இட்டால் ”ஷ்டைலில் ”அந்த” கட்சிக்கு வோட்டு போடச்சொன்னார்.எங்க அம்மா தியாகி மக்ள்ங்கறதால,”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்குன்னு சொல்லி “இந்த” கட்சிக்கு வோட்டு போடச்சொன்னார்.சரி ,சரின்னு தலையை ஆட்டிட்டு போய் ஒரு பட்டனையும் அமுக்கிட்டு வந்துட்டேன்.(ஆ..அசுக்கு புசுக்கு எந்த பட்டனை அமுக்கினேன்னு சொல்லமாட்டேன்)////
ரகசியமா சொல்லுங்க!
யாருகிட்டேயும் சொல்லமாட்டேன்!
1)ஊழல் பண்ணி இருக்க கூடாது.பண்ணவும் கூடாது.
2)இளைஞர்களின் முக்கியத்துவம் உணர்ந்தவரா இருக்கணும்,atleast 45 வயசுக்கு கம்மியானவரா இருந்தா நல்லது.
3)பொது திட்டங்கள் உருவாக்கிட்டு ,சும்மா தேமேன்னு உட்காராம,அமுல் படுத்தணும்.
4)மக்கள் நலனுக்காக (அட பொது மக்கள்ப்பா) ,ஒவ்வொரு நிமிசம் எல்லாம் வேணாம்,ஒரு நாளைல எட்டு மணி நேரம் உழைச்சா போதும்.
5)அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி,எதாவது ஒரு துறையில வல்லுனராகவும், சமூக சேவகரா வும் இருந்திருந்தாங்கன்னா,ரொம்ப நல்லது.
இந்த மாதிரி இன்னும் பெரிய பட்டியல் இருக்கு..முதலில் இந்த 5ம் satisfy ஆகுர தலைவர் யர்ருன்னு எனக்கு சொல்லுங்க..நான் வோட்டு போடுரதுக்கு ஹெல்ப் பண்ணுங்க..
////
இது எல்லாத்துக்கும் பொருத்தமான தலை!!!!
ம்! ம்! ம்!
என் தலைதான்!!!
வருங்கால முதல்வி வாழ்க
உங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே!!!
பா.ம.தே.ஆ.தி.மு.க. (புரியலீங்களா??? ) ஹிஹி//
யாரு அது??
ஆ... நெடிலாப் போச்சே!!!
அதில எல்லா கட்சியும் வருது பாருங்க.. எல்லாமே நம்ம கழகங்கள் தான்
me too. எனக்கும் தான்..
//எனக்கு அரசியல் அறிவு கொஞசம் கம்மிதான்.
//உண்மைய சொல்லப் போனா ,எனக்கு அரசியல் அறிவு கொஞசம் கம்மிதான்//
பதிவின் ஆழத்தை பார்த்தா அப்படித்தோணலை...
ஆனா கடைசியிலே கொடுத்த எதிர்பார்ப்பை பார்த்தா அது உண்மையோனு தோணுது...
உங்க profileல் உள்ள புகைப்படம் யாருங்க...? அழகுங்க...
good post
கீழை ராஸா said...
//உண்மைய சொல்லப் போனா ,எனக்கு அரசியல் அறிவு கொஞசம் கம்மிதான்//
பதிவின் ஆழத்தை பார்த்தா அப்படித்தோணலை...
ஆனா கடைசியிலே கொடுத்த எதிர்பார்ப்பை பார்த்தா அது உண்மையோனு தோணுது...///
என்ன பண்றது சார்..எப்போழுதும் இல்லாத்திற்க்கு தானே மனம் ஏங்கும்
நசரேயன் said...
வருங்கால முதல்வி வாழ்க//
என் மேல எதும் கோபம் இருந்தா பேசி தீர்த்துக்கல்லாம்..அதுக்காக இப்படியா??
Dr.Rudhran said...
good post//
வாங்க ருத்ரன் சார்...சில வருடங்கலுக்கு முன்னால் நீங்கள் ராஜ் டீவியில் வழங்கிய நிகழ்ச்சிக்கு நான் விசிரி..
ithukku neenga oottu podamaateennu solli irukkalam:-))
இயற்கை said...
ithukku neenga oottu podamaateennu solli irukkalam:-))//
வாங்க இயற்கை...அப்படியெல்லாம் போக முடியுமா...அப்பறம் நம்ம உரிமை என்ன ஆகுரது.
பள்ளி அனுபவ தொடர் என்ன ஆச்சு மேடம்.. வெயிட்டிங் நாங்க எல்லாம்.. :)
)ஊழல் பண்ணி இருக்க கூடாது.பண்ணவும் கூடாது.
2)இளைஞர்களின் முக்கியத்துவம் உணர்ந்தவரா இருக்கணும்,atleast 45 வயசுக்கு கம்மியானவரா இருந்தா நல்லது.
3)பொது திட்டங்கள் உருவாக்கிட்டு ,சும்மா தேமேன்னு உட்காராம,அமுல் படுத்தணும்.
4)மக்கள் நலனுக்காக (அட பொது மக்கள்ப்பா) ,ஒவ்வொரு நிமிசம் எல்லாம் வேணாம்,ஒரு நாளைல எட்டு மணி நேரம் உழைச்சா போதும்.
5)அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி,எதாவது ஒரு துறையில வல்லுனராகவும், சமூக சேவகரா வும் இருந்திருந்தாங்கன்னா,ரொம்ப நல்லது.//
இப்பிடி யாருமே இருக்க மாட்டாங்கள்???
ஆதலால் நீங்கல் வோட்டுப் போடத் தேவையில்லை என்று நினைக்கிறேன்?
நீங்கள் எதிர்பார்க்கும் தகமைகள் கொண்ட அரசியல் வாதி வர இன்னும் பல காலம் எடுக்கலாம்???
//கமல் said... இப்பிடி யாருமே இருக்க மாட்டாங்கள்???
ஆதலால் நீங்கல் வோட்டுப் போடத் தேவையில்லை என்று நினைக்கிறேன்?
நீங்கள் எதிர்பார்க்கும் தகமைகள் கொண்ட அரசியல் வாதி வர இன்னும் பல காலம் எடுக்கலாம்???//
வாங்க கமல்..எல்லாம் ஒரு நப்பாசைதான்..ஆனாலும் வோட்டு போட்டுருவேன்ல...கடமை தவறக்கூடாதுல
SK said...
பள்ளி அனுபவ தொடர் என்ன ஆச்சு மேடம்.. வெயிட்டிங் நாங்க எல்லாம்.. :)//
ஆகா..யாராவது கேட்க மாட்டார்களா? என்று நினைத்துக்கொண்டிருந்தேன்..நன்றி SK அவர்களே..கண்டிப்பாக தொடருகிரேன்
இது உங்கள் கனவு மட்டுமல்ல... இந்தியர் அனைவரின் கனவும் கூட...ஆனால்
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!...
nice
//ஊழல் பண்ணி இருக்க கூடாது.பண்ணவும் கூடாது.
2)இளைஞர்களின் முக்கியத்துவம் உணர்ந்தவரா இருக்கணும்,atleast 45 வயசுக்கு கம்மியானவரா இருந்தா நல்லது.
3)பொது திட்டங்கள் உருவாக்கிட்டு ,சும்மா தேமேன்னு உட்காராம,அமுல் படுத்தணும்.
4)மக்கள் நலனுக்காக (அட பொது மக்கள்ப்பா) ,ஒவ்வொரு நிமிசம் எல்லாம் வேணாம்,ஒரு நாளைல எட்டு மணி நேரம் உழைச்சா போதும்.
5)அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி,எதாவது ஒரு துறையில வல்லுனராகவும், சமூக சேவகரா வும் இருந்திருந்தாங்கன்னா,ரொம்ப நல்லது.//
எச்சுஸ்மி...நீங்க இந்தியாவுல தான இருக்கீங்க...
இப்படியெல்லாம் கேக்கப்படாது.
கவிதை பிடிக்குமுன்னு சொல்றீங்க. இத போய் பாருங்க.
மணிவேல்
KRISHMANIVEL said...
கவிதை பிடிக்குமுன்னு சொல்றீங்க. இத போய் பாருங்க.
மணிவேல்
Link missing Manivel
//1)ஊழல் பண்ணி இருக்க கூடாது.பண்ணவும் கூடாது.
ஊழல் செய்யவில்லை.. செய்யவும் மாட்டார்.
2)இளைஞர்களின் முக்கியத்துவம் உணர்ந்தவரா இருக்கணும்,atleast 45 வயசுக்கு கம்மியானவரா இருந்தா நல்லது.
- 38 வயசு தான். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கட்சியில் வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்.
3)பொது திட்டங்கள் உருவாக்கிட்டு ,சும்மா தேமேன்னு உட்காராம,அமுல் படுத்தணும்.
- தனது தொகுதியில் சில பல நலத் திட்டங்களை அமல் படுத்தி இருக்கிறார். நட்சத்திட ஓட்டல்களில் டிவி விவாதங்களில் பொழுதைக் கழிக்காமல் வறுமையில் வாடும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் வீட்டில் தங்கி அவர்கள் குறைகளை அனுபவித்து பாராளுமன்றத்தில் அவர்களுக்காக பேசி அவர்கள் வாழ்க்கையை வளமாக்கி இருக்கிறார்.
4)மக்கள் நலனுக்காக (அட பொது மக்கள்ப்பா) ,ஒவ்வொரு நிமிசம் எல்லாம் வேணாம்,ஒரு நாளைல எட்டு மணி நேரம் உழைச்சா போதும்.
- அதை விட அதிக நேரமே உழைக்கிறார். தனக்கென மக்கள் யாரும் இல்லை. ஆகவே பொதுமக்களுக்காகத் தான் உழைக்கிறார்.
5)அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி,எதாவது ஒரு துறையில வல்லுனராகவும், சமூக சேவகரா வும் இருந்திருந்தாங்கன்னா,ரொம்ப நல்லது.
- லண்டனில் மானிட்டர் என்னும் நிறுவனத்தில் நிதித் துறை நுபுணராக பணி புரிந்திருக்கிறார். மும்பையில் ஒரு ஐடி நிறுவனத்தை நிர்வகித்திருக்கிறார். பொருளாதாரத்தில் எம்ஃபில் வரை படித்திருக்கிறார்.
..... இவருக்கு நேரடியாக வாக்களிக்க அமேதி போகனும். இவர் தலைமையை கொண்டு வர ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்கனும். இவர் பெயர் : ராகுல்காந்தி.
... அப்பாடா.. என் தலைவனுக்கு சின்னதா ஒரு பிரச்சாரம் செஞ்சாச்சி. ;))
வாங்க சஞ்சய்காந்தி அவர்களே...
தங்களது கருத்துக்களை பரப்ப ,எனது பதிவும் பயனளித்திருக்கிறது என்பதை நினைத்து சந்தோசமாக இருக்கிறது..
அடிக்கடி வாங்க சார்...
Post a Comment