Wednesday, March 18, 2009

பிரசன்னாவும் தெய்வீகமும்


சலனமற்று சென்று கொண்டிருக்கும் ஆறு, மேலே இருந்து கீழே விழும் நேரத்தில், அருவியாய் ஏற்றுக்கொள்கின்ற மாற்றம் ,நம்முள் சில சிந்தனைகளையும், பெரும் ஆனந்தத்தையும் அள்ளி தருகிறது என்றால் மிகையில்லை. அது போல,கடந்த சில தினங்களாக, வேலை ,ப்ராஜெக்ட் என்று ஒரே வட்டத்தை விட்டு, வெளியே வாராமல் இருந்த என்னை,தன்னுடைய பாடலின் மூலம் , எங்கோ கொண்டு சென்று உன்னதமான தெய்வீக உணர்வுகளை கொடுத்துவிட்டார் பிரசன்னா.இதோ இந்த பதிவையும் எழுத வைத்து விட்டார்சென்ற வாரத்தில் நடந்த, ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை காண,நேற்றுத்தான் நேரம் கிடைத்தது.(அந்த நிகழ்ச்சியை நெட்டில் பார்ப்பதுதான் என் வழக்கம்.) இந்நிகழ்ச்சியில் தேர்வாகி இருக்கின்ற ஏழு போட்டியாளர்களில் ,ஆறு பேர் முறையாக சங்கீதம் பயின்றவர்கள்.நம் பிரசன்னாவை தவிர...


அவருடைய பல பாடல்களை ,போட்டிகளின் போது கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.எந்த ஒரு பாடலை பாடினாலும் மனுஷன் பிச்சு உதறிடுராருப்ப...நல்ல effort மற்றும் presentation அவருடைய பாடல்களில்உண்டு.


ஆனால்,அவரை ஒப்பேத்தி ,போட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற துடிப்பு, நடுவர்களுகிடையே உள்ளதை ,சில வாரங்களாய் காண முடிகின்றது.(ஏன் இப்படியெல்லாம் ??)
நேற்று நான் பார்த்த நிகழ்ச்சி கர்நாடக சங்கீத சுற்று. பாடகி சுதா ரகுநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.அனைத்து போட்டியாளர்களும் நன்றாக பாடினார்கள்.ஆனால் ,பிரசன்னா "வேங்கடாசல" என்ற பாடலை மிக அருமையாக பாடினார்.கிட்டத்தட்ட,நான்கு ஐந்து முறை ,கண்களை மூடி ரசித்து கேட்டேன் .மனதில் உள்ள குழப்பங்கள் விலகி, எதோ ஒரு தெய்வீக உணர்வு என்னை ஆட்கொண்டதாக உணர்ந்தேன்.


நீங்களும் ஒருமுறை கேட்டு பாருங்கள் .
பாடல் முடிந்ததும் ,சுதா ரகுநாதன் அவர்கள் கொடுத்த கமென்ட் ,நமக்கும் சரி, பிரசன்னாவுக்கும் சரி ஒரு பூஸ்ட்.அவருடைய கமெண்டின் போது நனைந்தது பிரசன்னாவின் கண்கள் மட்டுமல்ல..என்னுடைய கண்களும்தான்.


"முறையாக எனக்கு சங்கீதம் தெரியாது" என்று குழந்தையாய் பிரசன்னா கூறியதும்,அதற்க்கு சுதா ரகுநாதன் அவர்கள்,"நீங்கள் சொன்னால் ஒழிய ,உங்கள் பாடலின் மூலம் கண்டுபிடிக்க முடியாது "என்றது பிரசன்னாவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.சுதா ரகுநாதன் அவர்களின் நேர்மையான ,கமெண்டிற்கு நான் தலை வணங்குகிறேன்.


எந்த ஒரு சங்கீத பின்புலமோ, முறையான பயிற்சியோ இல்லாமல்,வெறும் 48 மணிநேர பயிற்சியால் மட்டுமே இந்த பாடலை பாடினார் என்றால்,அவரை என்ன சொல்லி பாராட்டுவது.பிரசன்னா, உங்களுக்கு இந்த பதிவின் மூலம் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.


"வேங்கடாசல"என்றபாடலைஉண்மையில்பாடியஉன்னிக்ரிஷ்ணனுக்கும்,நேற்று பாடிய பிரசன்னாவிற்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.


19 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா! சுதா!

ம்ம்ம் நல்ல பாடல்களும்

குரல் வலமும்

நட்புடன் ஜமால் said...

\\பிரசன்னா, உங்களுக்கு இந்த பதிவின் மூலம் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.\\

வாழ்த்துகள்ப்பா!

Rajeswari said...

வாங்க ஜமால் சார்

muru said...

//மனதில் உள்ள குழப்பங்கள் விலகி, எதோ ஒரு தெய்வீக உணர்வு என்னை ஆட்கொண்டதாக உணர்ந்தேன்.//

அதான் நாங்க வந்துட்டோமல, திரும்ப கொண்டுவந்திட வேண்டியது தான்.

Rajeswari said...

வாங்க முரு ..

ஜீவன் said...

ம்ம்ம்ம்ம்ம்ம் ... இசைஞானி யின் இசையில் மயங்கி கிடந்தாலும்
கர்நாடக கீர்த்தனைகளை ரசிக்கும் அளவிற்கு எனக்கு ஞானம் கிடையாது!

டீச்சரம்மா சொல்லுறீங்களேன்னு அந்த பாடலை கேட்டேன் பெருசா ஒன்னும்
தோணல!!!
ஆனா! பாடல் முடிஞ்ச பிறகு சுதா ரகுநாதன், ஸ்ரீநிவாஸ்,சுஜாதா,உன்னி கிருஸ்ணன்
ஆகியோரது விமர்சனமும், பிரசன்னாவின் உணர்சிமயமும் பாடலைவிட
பிடித்திருந்தது!

இப்போ மறுபடி பாடலை கேட்கிறேன்!
இப்போ பாடல் ரொம்ப அருமையா தோணுது!!

நல்ல பதிவு ராஜேஸ்வரி!! இந்தமாதிரி பதிவு போடவும் ஒரு ''இது''
வேணும்!!

Rajeswari said...

நல்ல பதிவு ராஜேஸ்வரி!! இந்தமாதிரி பதிவு போடவும் ஒரு ''இது''
வேணும்//

எது?

அகநாழிகை said...

நானும் நிகழ்ச்சியைப் பார்த்தேன். இசையை முறையாக கற்றுக் கொண்டால் மட்டுமே பாட முடியும் என்பது நடுவர்களாக வரும் சிலர் கொண்டிருக்கும் தவறான எண்ணம். நல்ல பதிவு.
(ஒரு சிறு சந்தேகம், ‘பாடலை கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள்‘ என்று லிங்க் எப்படி செய்வது ?)

Rajeswari said...

வாங்க அகநாழிகை சார்

புது பதிவு போடும் பொழுது எந்த எழுத்துக்களுக்கு link கொடுக்க வேண்டுமோ அதை செலக்ட் செய்துவிட்டு ,insertlink என்று ஒரு குட்டி ஆந்தை மாதிரி பொம்மையை கிளிக் செய்யுங்கள் .பிறகு எந்த பக்கத்தை இணைக்க வேண்டுமோ அதன் முகவரியை (url) அதில் கொடுங்கள் ..அவளவுதான்.

ராம்.CM said...

பாடல் மிக அருமை ! ரசிக்க முடிந்தது! அழகான பதிவு. வாழ்த்துக்கள்.

அபுஅஃப்ஸர் said...

திங்கள் முதல் புதன் நான் தவறாமல் பார்க்கும் ஒன்று இந்த நிகழ்ச்சி மட்டும்தான்

நானும் பார்த்து நெகிழ்ந்தேன்

Anonymous said...

ரசனைமிகுந்த பாடல்

Rajeswari said...

வாங்க கவின்.

coolzkarthi said...

ஆஹா உண்மையில் நீங்கள் நல்ல ரசனைக்காரி தான் அக்கா.....

நசரேயன் said...

எனக்கும் சங்கீதம் தெரியாது,ஆனா பாட்டு கேட்பேன்

ஆதவா said...

யப்பா ரொம்ப நாளைக்கு அப்பறமா வந்தமாதிரி இருக்குங்க டீச்சர்... (ஹி ஹி சும்மா டீச்சர்னு கூப்பிட்டு ரொம்ப நாளாச்சுல்ல.. அதான்..)

மிகவும் மன்னிக்கவும்.... நான் இந்தமாதிரி இசை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை..

இருப்பினும்... ஒரு நல்ல பாடகராகும் முயல்வில் இருப்பதால்.. பிரச்சன்னாவை வாழ்த்துவதில் நானும் கலந்து கொள்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துக்கள் பிரசன்னா..

நன்றி ராஜேஸ்வரி..

கார்த்திகைப் பாண்டியன் said...

நான் கர்நாடக சங்கீதம் அவ்வளவாக கேட்பதில்லை தோழி.. ஆனால் நீங்கள் ரொம்ப சிலாகித்து எழுதி இருக்கீங்க.. பிரசன்னாவுக்கு வாழ்த்துக்கள்..

Rajeswari said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
நான் கர்நாடக சங்கீதம் அவ்வளவாக கேட்பதில்லை தோழி.. ஆனால் நீங்கள் ரொம்ப சிலாகித்து எழுதி இருக்கீங்க.. பிரசன்னாவுக்கு வாழ்த்துக்கள்.//


வாங்க பொன்னியின் செல்வரே ..