+1ல் இருந்து ஆரம்பித்த எங்கள் நட்பு,இளங்கலையில் ஒரே பெஞ்ச்சில் பயணித்த எங்கள் நட்பு,மாதம் ஒருமுறை திரையரங்குகளில் விரிந்த எங்கள் நட்பு,இதோ நாளையுடன் எல்லைகளுக்குள் அடங்கிவிடும்,என்று நினைக்கையில்,மனது எதிலும் லயிக்கவில்லை..
அவளுடைய நினைவுகளை சுமந்தபடி மதுரையை அடைந்தேன்.அன்பொழுக ,அம்மா கொடுத்த அடை தோசை கூட கசந்தது..
அடுத்த நாள்,எனது அம்மா,அப்பா,அண்ணா,நந்து(நந்தினி,எங்க வீட்டு அறுந்த வால் --அண்ணன் மகள்)ஆகியோருடன்,வனிதாவின் திருமணத்திற்கு கிளம்பினேன்.எங்கள் நட்பு மிகவும் ஆழமானதாலும்(எவ்வளோ என்றெல்லாம் கேட்க கூடாது),நாங்கள் பழகும் காலத்திலிருந்தே,இருவர் வீட்டிற்கும் ,நாங்கள் செல்ல பிள்ளை என்பதாலும், எங்கள் அண்ணனுக்கும்,அவளது அப்பாவிற்கும் அரசியல் ரீதியாக பழக்கம் உள்ளதாலும், இந்த ”குழு” பயணம் அவசியமாய் போய்விட்டது..
வனிதா,எங்கள் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ வின் கடைசி புதல்வி ஆதலால்,”ராஜா சர் முத்தையா” மன்றத்தில் திருமணம் ஏற்பாடாகியிருந்தது.அலங்கார வளைவுகளும்,மேடை அலங்காரமும் கண்ணை கவர்வதாய் இருந்தது.அரசியல் புள்ளி மகளின் கல்யாணம் ஆதலால்,என்னால் அவ்வளவு சீக்கிரம் மணப்பெண்ணின் அறையை அடைய முடியவில்லை.பல முயற்சிகளுக்கு பிறகு அவளை சந்தித்தேன்.என்னை பார்த்ததும் எழுந்து வந்து கட்டிக்கொண்டாள்.எங்கள் இருவராலும் ஏதும் பேசமுடியவில்லை.பிறகு அவளிடம் விடைபெற்றுகொண்டு,மணமேடையின் எதிரே அமைந்திருந்த இருக்கைகளில் அமர்ந்தோம்.
முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டதாக கூறி,வனிதாவை அழைத்து வந்து,மாப்பிள்ளை அருகில் அமர வைத்தனர்.தோழியை விட்டு பிரியப்போகிறோம் என்ற வருத்தமும்,அவளுக்கு இப்பொழுது திருமணம் என்ற சந்தோசமும் ,கலந்த கலவையாய் என் மனம் சிலாகித்துக்கொண்டிருந்தது.
திடீரென ,கூட்டத்தில் ஒரே பேச்சும் சலசலப்பும். “என்ன ஆச்சு அண்ணா?” என்று எனது அண்ணனை கேட்க திரும்பினால்,அவரை காணோம்.
நானும் எனது தலையை வலப்பக்கம் 90டிகிரி இடப்பக்கம் 90 டிகிரி என திருப்பி ,அண்ணனை தேடிக்கொண்டிருந்தேன்.சில நிமிடங்களுக்கு பிறகு ,அரக்க பரக்க ஓடி வந்து,எங்கள் நால்வரையும் அழைத்துக்கொண்டு,ஒரு சிறு கும்பலை நோக்கி சென்றார்.
அங்கு சென்று பார்த்தால்,அட! சிறப்பு விருந்தினர் மு.க.அழகிரியும்,அவரது துணைவியார் காந்தி அழகிரியும் நின்று அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தனர்.எனது அண்ணன் அவர்களது பேரவையில்(பெயர் குறிப்பிட விரும்பவிலை)செயலாளராய் இருப்பதால்,எங்களை அறிமுகப்படுத்திவைத்தார்.
எனக்கு “ஹலோ” சொல்லி கைகுலுக்குவதா?இல்லை “வணக்கம்” சொல்வதா என்று தடுமாறிக்கொண்டிருக்கையில்,அழகிரி அவர்களே “வணக்கம் வாங்க” என்று கூறி எனது தடுமாற்றத்திலிருந்து என்னை காப்பாற்றினார்.
அப்பா,அவரிடம் ஏதும் பேசவில்லை.எனது அம்மாதான்,”நீங்க,ஏதாவது ஒரு தொகுதியில நிற்க வேண்டும்” என்று கூறினார்.
ஏதோ ”அந்த அம்மாவே ”கூறிவிட்ட மகிழ்ச்சியில் அவரும் ,எனது அம்மாவை நோக்கி, “ கவலைப்படாதிங்கம்மா! தேர்தல் முடியட்டும்.வடக்கே ஸ்டாலினும்,இங்கே நானும்னு பிரிச்சு தமிழகத்தை சீர்படுத்திடுவோம்”னு சொல்லி அழகாக புன்னகைத்தார்.
பிறகு,முகூர்த்த நேரம் நெருங்கி விட்டதால்,தாலி எடுத்து கொடுக்க அவர் மணமேடையை நெருங்கினார்.அவரது தலைமையில் வனிதாவின் திருமணம் சிறப்பாய் நடந்தது.விருந்து முடித்து விட்டு வீடு திரும்புகையில்,வனிதா மனதில் இல்லை....பிளவுப்படப் போகின்ற தமிழகமே கண்ணில் ஆடியது....இந்த நிகழ்வை “உண்மை” என்று நம்பி படித்த அனைவருக்கும் ஏப்ரல் ஃபூல் வாழ்த்துக்கள்”...ஹா ஹா ஹா...
60 comments:
ராஜேஷ்வரி நல்லாஇருக்கும்மா உன்னோட ஏப்ரல்பூல் ஏமாற்று வேலை ரொம்ப ஏமாந்திட்டேன். நன்று
வாழ்த்துக்கள் தொடரட்டும் எழுத்துப்பணி
நாந்தான் பர்ஸ்டு
chae! nanum kooda eamanditaen....
sari sari ignore panninidukanga...
summa vilayatuku...
வாங்க வடிவேலன் சார்.
நீங்கதான் ஃப்ர்ஸ்ட்
nithya said...
chae! nanum kooda eamanditaen....
sari sari ignore panninidukanga...
summa vilayatuku...//
வாங்க நித்யா..முதல் தடவையா வந்து இருக்கீங்க...அடிக்கடி வாங்க
நீங்க என்ன சொல்றது ஏப்ரல் fool! நானே சொல்லிகிறேன் - நான் ஒரு முட்டாளுங்கோ!
இந்த பதிவ படுச்ச பிறகு இப்படி ஆயிட்டேன்!
ஷங்கர் Shankar said...
நீங்க என்ன சொல்றது ஏப்ரல் fool! நானே சொல்லிகிறேன் - நான் ஒரு முட்டாளுங்கோ!
இந்த பதிவ படுச்ச பிறகு இப்படி ஆயிட்டேன்!//
வாங்க ஷங்கர்...சரி விடுங்க..ஏமாற்றம் எல்லோருக்கும் இருக்கிரதுதான்...அடிக்கடி வாங்க
//ஏதோ ”அந்த அம்மாவே ”கூறிவிட்ட மகிழ்ச்சியில் அவரும் ,எனது அம்மாவை நோக்கி, “ கவலைப்படாதிங்கம்மா! தேர்தல் முடியட்டும்.வடக்கே ஸ்டாலினும்,இங்கே நானும்னு பிரிச்சு தமிழகத்தை சீர்படுத்திடுவோம்”னு சொல்லி அழகாக புன்னகைத்தார்.//
ரசிக்க முடிந்தது.
யம்மாடீஇ...நல்ல ரசனை.
நம்பிட்டொமுல்லெ:-)))
ஹா.... ஹா .... சூப்பர் நிஜமாவே ஏமாந்து போயிட்டேன்!
இரசனைக்காரவோ தான் நீங்க
ஹி... ஹி... சாதாரணமாவே பதிவுகளில் வரும் இடுகைகளை நம்பற வழக்கமில்லை. இரண்டு நாளைக்கு முன்னாலேயே ஒரு பதிவர் அட்வான்ஸ் ஏப்ரல் பூல் இடுகை போட்டு இருந்தார்.
மேலும் அரசியல் பற்றிய இடுகை, அதுவும் ரசனைக்காரி பதிவில். சாத்தியமே இல்லாத ஒன்று என்பதால் நான் ஏப்ரல் ஃபூல் ஆகவில்லை.
(அப்பாடா ஒரு வழியா ஏப்ரல் ஃபூல் ஆகதமாதிரி சமாளிச்சாச்சு)
ஆஹா சாச்சுப்புட்டீங்களே தாயீ....
என்னவோ உண்மைன்னு நம்பி படிக்கையில சட்டுனு போட்டு உடைச்சுட்டீங்க...
நல்ல கற்பனை..
ஆமா எதுக்கோ வாழ்த்து சொல்லியிருக்கீங்க போல...
உங்களுக்கும் அந்த வாழ்த்துகள்..
அப்பாட, ஒருமாதிரி சமாளிச்சாச்சு...
உஸ்ஸ்ஸ்ஸ்....
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவன்
உலவு.காம்
ஆகா கிளம்பிட்டாங்ககையா கிளம்பிட்டாங்க
ஆமா எனக்கு ஒரு சந்தேகம்
ஏப்ரல் ஃபூல் வாழ்த்துக்கள்னு சொன்னீங்க அப்போ நீங்களும் கொண்டாடுறீங்க.. அப்போ..?????
ஹி ஹி சும்மா டிஸ்கி
நல்லாவே ஏமாத்திருக்கீங்க போங்க
Valthukkal rajeswari :-) pattam puchi viruthukku
Suresh said...
Valthukkal rajeswari :-) pattam puchi viruthukku//
ஏப்ரல் ஃபூல் ஆக்குரீங்களோனு நினைச்சேன்...தகவலுக்கு நன்றி சுரேஷ்
என்ன கிண்டலா?
வாழ்த்துக்கள்.
அய்யோ நீங்க ரொம்ப புத்திசாலி
பட்டாம்பூச்சி விருது கிடைச்சிருக்கு...
வாழ்த்துகள்...
ஜோதிபாரதி said...
//ஏதோ ”அந்த அம்மாவே ”கூறிவிட்ட மகிழ்ச்சியில் அவரும் ,எனது அம்மாவை நோக்கி, “ கவலைப்படாதிங்கம்மா! தேர்தல் முடியட்டும்.வடக்கே ஸ்டாலினும்,இங்கே நானும்னு பிரிச்சு தமிழகத்தை சீர்படுத்திடுவோம்”னு சொல்லி அழகாக புன்னகைத்தார்.//
ரசிக்க முடிந்தது.//
வாங்க ஜோதிபாரதி,,,,ஏதோ எனக்கும் அப்பப்ப கொஞ்சம் அரசியலும் வரும்..
துளசி கோபால் said...
யம்மாடீஇ...நல்ல ரசனை.
நம்பிட்டொமுல்லெ:-)))//
ஏதொ..ஏப்ரலுக்கு என்னால முடிஞ்சது...
ஜீவன் said...
ஹா.... ஹா .... சூப்பர் நிஜமாவே ஏமாந்து போயிட்டேன்!//
என்ன அண்ணா...நீங்களுமா...??
இராகவன் நைஜிரியா said...
(அப்பாடா ஒரு வழியா ஏப்ரல் ஃபூல் ஆகதமாதிரி சமாளிச்சாச்சு)//
சரி சரி விடுங்க அண்ணா....அரசியல்ல இதெல்லாம் சகஜம்..
வேத்தியன் said...
ஆஹா சாச்சுப்புட்டீங்களே தாயீ....
என்னவோ உண்மைன்னு நம்பி படிக்கையில சட்டுனு போட்டு உடைச்சுட்டீங்க...
நல்ல கற்பனை..
ஆமா எதுக்கோ வாழ்த்து சொல்லியிருக்கீங்க போல...
உங்களுக்கும் அந்த வாழ்த்துகள்..
அப்பாட, ஒருமாதிரி சமாளிச்சாச்சு...
உஸ்ஸ்ஸ்ஸ்..//
வாழ்துக்களுக்கும் நன்றி...ஏமாந்ததுக்கும் நன்றி....
ஷ் ஷ் ஷ் ஷ் யப்பா இப்பவே கண்ண கட்டுதே.....முடியல....
அபுஅஃப்ஸர் said...
ஆகா கிளம்பிட்டாங்ககையா கிளம்பிட்டாங்க
ஆமா எனக்கு ஒரு சந்தேகம்
ஏப்ரல் ஃபூல் வாழ்த்துக்கள்னு சொன்னீங்க அப்போ நீங்களும் கொண்டாடுறீங்க.. அப்போ..?????
ஹி ஹி சும்மா டிஸ்கி
நல்லாவே ஏமாத்திருக்கீங்க போங்க//
ஏமாந்திட்டீங்களா.....ஹை ஜாலி ஜாலி,,,
podhigai thendral said...
வாழ்த்துக்கள்.
அய்யோ நீங்க ரொம்ப புத்திசாலி//
வருகைக்கு நன்றி பொதிகை அவர்களே..அடிக்கடி வாங்க்..
அழகிரி அண்ணன் அப்படின்னு சொன்னதும் நான் புரிஞ்சுகிட்டேன்.....ஏன்னா அன்னைக்கு என்னோட friend கல்யாணத்துக்கு இல்ல அவரு வந்து இருந்தாரு....
(ஹப்பாடி ஏதோ என்னால முடிஞ்சது )
தீப்பெட்டி said...
என்ன கிண்டலா?//
சும்மா விளையாட்டுக்கு தான்...கோபிச்சுக்காதீங்க
வேத்தியன் said...
பட்டாம்பூச்சி விருது கிடைச்சிருக்கு...
வாழ்த்துகள்..//
நன்றி வேத்தியன்
coolzkarthi said...
அழகிரி அண்ணன் அப்படின்னு சொன்னதும் நான் புரிஞ்சுகிட்டேன்.....ஏன்னா அன்னைக்கு என்னோட friend கல்யாணத்துக்கு இல்ல அவரு வந்து இருந்தாரு....
(ஹப்பாடி ஏதோ என்னால முடிஞ்சது )//
ஹை ..எப்படியோ ,இந்த அக்கா கிட்ட ஏமாந்துட்டேல கார்த்தி...
நீலத்துல முட்டைக்கண்ணு எழுத்துக்கு அப்புறம் பின்னூட்டத்துக்கு கை பர பர!நாளைக்கு யார் பதிவையும் படிப்பதில்லையென்று இன்றைக்கு விரதம்.
வாங்க ராஜநடராஜன்...
//எங்க வீட்டு அறுந்த வால்//
எல்லோருடய வீட்டிலும் ஒன்னு இப்படி! எப்படி?
//வடக்கே ஸ்டாலினும்,இங்கே நானும்னு பிரிச்சு தமிழகத்தை சீர்படுத்திடுவோம்//
என்ன அன்பு பாருங்களேன்!
என்ன கொடுமை சார் இது!
ஏப்ரல்ஃபுலாம்ல!
ரசனையுடன் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள்!!!
நீங்க என்ன சொல்றது ஏப்ரல் fool! நானே சொல்லிகிறேன் - நான் ஒரு முட்டாளுங்கோ!
இந்த பதிவ படுச்ச பிறகு இப்படி ஆயிட்டேன்!///
நானும் கூவிக்கிறேன்!!
வால்பையன் said...
என்ன கொடுமை சார் இது!
ஏப்ரல்ஃபுலாம்ல!///
தெளிவா ஏமாந்து இருக்கீங்க போல..
thevanmayam said...
நீங்க என்ன சொல்றது ஏப்ரல் fool! நானே சொல்லிகிறேன் - நான் ஒரு முட்டாளுங்கோ!
இந்த பதிவ படுச்ச பிறகு இப்படி ஆயிட்டேன்!///
நானும் கூவிக்கிறேன்!!//
வாங்க வாங்க ! நல்லா ஏமாந்தீங்களா!!
கடைசி வரை உண்மைன்னு நம்பி படிச்சேன் தோழி.. ஆனா அழகிரி சொன்னதா நீங்க எழுதினத பார்த்ததுமே இது உட்டாலக்கடி வேலைன்னு புரிஞ்சு போச்சு.. அப்புறம் பட்டாம்பூச்சி விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள்..
இது கதை அல்ல நிஜம்!
நாங்க முதலில் பின்னூட்டம் படித்துவிட்டுதான் இடுகையைப் படிப்போம்.
அட எல்லாருக்கும் பதில் சொல்லியிருக்காவோ!
நம்மள விட்டுப்போட்டியளே
ஏதும் வருத்தமா!
இப்படி எத்தனி பேரு கிளம்பி இருக்கீங்க
\\.இந்த நிகழ்வை “உண்மை” என்று நம்பி படித்த அனைவருக்கும் ஏப்ரல் ஃபூல் வாழ்த்துக்கள்”...ஹா ஹா ஹா...\\
வருங்காலத்தில் நடக்கக் கூடிய
உண்மையே. அதனால் தங்களது
தூரதரிசனத்தை பாராட்டுகிறேன்...
ஹாஹா..... அழகிரி வந்த வரைக்கும் நம்பினேன்.... அவரா வந்து பேசினதா சொல்லி கொஞ்சம் ஓவரா போயிட்டீங்க... அதான் ஏப்ரல் 1 ஏமாற்றுனு தெரிஞ்சு போச்சு!!!
எழுத்து நடையில் நல்ல அனுபவப் பகிர்வைப் பார்த்தேன்....
நட்புடன் ஜமால் said...
அட எல்லாருக்கும் பதில் சொல்லியிருக்காவோ!
நம்மள விட்டுப்போட்டியளே
ஏதும் வருத்தமா!//
அட ஆமாம்... விட்டுதான் போச்சு...
//இரசனைக்காரவோ தான் நீங்க//
ரொம்ப நன்றி ஜமால்..
எம்புட்டு நாளா இப்படி ஆசை! ஆசை!
எனக்கு என்னவோ ஏப்ரல்ஃபூல்னு சொன்ன கடைசி வரி மட்டும் தான் பொய்யோனு தோனுது! :)!!!
அப்புறம் பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துக்கள் ரசனைக்காரி!!
ஷீ-நிசி said...
எம்புட்டு நாளா இப்படி ஆசை! ஆசை!
//
சும்மா ஒரு நாளைக்கு மட்டும் தான்...
//ஷீ-நிசி said.எனக்கு என்னவோ ஏப்ரல்ஃபூல்னு சொன்ன கடைசி வரி மட்டும் தான் பொய்யோனு தோனுது! :)!!!//
அய்யயோ!! என்னய எதிலயும் மாட்டி விட்டுறாதிங்கப்பா!!
என்னாது சின்னபுள்ள தனமா?.. விளையாண்டுகிட்டு .. ஏமாத்திகிட்டு... வேணா...வேணா... கோவம் வராது...கோவம் வராது... அதான் வராதுங்கிறம்லா... பிரகு ஏன் பயப்புட்டுகிட்டு.
\\“உண்மை” என்று நம்பி படித்த அனைவருக்கும் ஏப்ரல் ஃபூல் வாழ்த்துக்கள்”...ஹா ஹா ஹா...\\
இது என்ன சின்ன புள்ள தனமா இருக்கு. டீச்சரே இப்படி ஏமாத்தலமா?.
//இந்த நிகழ்வை “உண்மை” என்று நம்பி படித்த அனைவருக்கும் ஏப்ரல் ஃபூல் வாழ்த்துக்கள்”...ஹா ஹா ஹா...//
இப்ப சந்தோஷமா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//இந்த நிகழ்வை “உண்மை” என்று நம்பி படித்த அனைவருக்கும் ஏப்ரல் ஃபூல் வாழ்த்துக்கள்”...ஹா ஹா ஹா...//
என்னா வில்லத்தனம்...
ராம்.CM said...
என்னாது சின்னபுள்ள தனமா?.. விளையாண்டுகிட்டு .. ஏமாத்திகிட்டு... வேணா...வேணா... கோவம் வராது...கோவம் வராது... அதான் வராதுங்கிறம்லா... பிரகு ஏன் பயப்புட்டுகிட்டு//
கோபம் வரலையா....அப்ப ராம் நீங்க ரொம்ப நல்லவருதான்..
Jenbond said...
\\“உண்மை” என்று நம்பி படித்த அனைவருக்கும் ஏப்ரல் ஃபூல் வாழ்த்துக்கள்”...ஹா ஹா ஹா...\\
இது என்ன சின்ன புள்ள தனமா இருக்கு. டீச்சரே இப்படி ஏமாத்தலமா?//
ஹை நாந்தான் இப்போ டீச்சர் இல்லையே...ஏமாத்தலாமே....
கீழை ராஸா said...
//இந்த நிகழ்வை “உண்மை” என்று நம்பி படித்த அனைவருக்கும் ஏப்ரல் ஃபூல் வாழ்த்துக்கள்”...ஹா ஹா ஹா...//
இப்ப சந்தோஷமா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
சரி சரி விடுங்க பாஸ்..இதுக்கெல்லாம் போய்கிட்டு...
you too Raji..??
Post a Comment