Thursday, March 12, 2009

நினைவில் நின்றவன்-சிறுகதை(முதல் முயற்சி)

கொடைக்கானல் மலைப்பாதையில் எங்களது டாட்டா சுமோ மெல்ல ஏறத்துவங்கியது. எனது இதயத்துடிப்பும் கூடவே.கடினமான பனிப்பொழிவு ,உடலை குளிர்வித்தாலும்,எனது முகத்தில் அரும்பிய வியர்வையை நான் உணர தவறவில்லை.

"கடவுளே! என்ன சோதனை இது..ஏன் எனக்கு மட்டும் ஞாபகமறதியை கொடுக்க மறந்து விட்டாய்"..மனதுக்குள்ளேயே கடவுளை சாடினேன்.

க்ரீச் .....

"என்னம்மா ,முகமெல்லாம் வேர்த்திருக்கு! "- எனது கணவர் அசோக்"

ஒன்னுமில்லைங்க,மலைப்பாதைனா எனக்கு கொஞ்சம் அலர்ஜி .அதான்..."

OK relax.. இன்னும் ஒன் ஹவர்ல நம்ம "பாலஸ் வுட்லாண்டு " க்கு போய்விடலாம்"-தேனிலவிற்கு செல்லும் குதுகூலம் என்னவரிடம் இருந்தது.

வண்டி சில்வர் பால்சை (silver Falls) தாண்டிக்கொண்டிருந்தது..மனதில் சாரல் அடிக்க தொடங்கியது.

"இதோ இந்த இடத்தில தானே ,நானும் கணேசும் குரங்குகளிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்பட்டோம். பிறகு கணேஷ் கம்பை ஓங்க,பதிலுக்கு குரங்குகளும் ஓங்க ,பின்பு நாங்கள் தப்பித்தால் போதும் என ஓடி,..அப்பப்பா .எவ்வளவு மகிழ்ச்சியான தருணங்கள்.

சாரல் இப்பொழுது என்னுள் தணலாய் மாறத்துவங்கியது.

"தீபா..ஸ்நாக்ஸ் ஏதும் சாப்பிடுறியா?"-கனவை கலைத்தார் கணவர்.

"இல்லைங்க ..வேண்டாம். ரூமுக்கு போயிட்டு சாப்பிட்டுக்கிறேன் "

கனவை தொடர்ந்தேன்.

வண்டி இப்பொழுது ஏரியின் அருகே உள்ள வளைவான பாதையில் சென்று கொண்டிருந்தது.
மறுபடியும் மனம் கணேஷை நோக்கி விரைந்து சென்று பற்றி கொண்டது.

டோக்கன் கொடுக்கும் இடத்தில ,அனைத்து போட்டுக்கும் (boat) பணம் கொடுத்துவிட்டு ,ஒரு மணி நேரம் ,தனியாய் ஏரியில் உலாவியது ,நினைவை தழுவி சென்றது.எவ்வளவு ரம்யமான நாட்கள் அவை.அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ,நான் நாணத்துடன் கணேஷின் அருகில் அமர்ந்து கொஞ்சி கொஞ்சி பேசியது.....கடவுளே எனக்கு ஞாபக மறதியை கொடு!.

"தீபா ..தீபா..எங்க இருக்கே! ஹோட்டல் வந்துடிச்சு .இறங்கு வா!.உன் வரவுக்காக இந்த ஹோட்டல் காத்து கொண்டு இருக்கு.நானும் கூடத்தான்" அசட்டு சிரிப்புடன் கண்சிமிட்டினார் என் கணவர்.

என் ஹாண்ட்பாகை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.

"குட்டிம்மா! இப்போ டைம் 12.30.நாம லன்ச் முடுச்சுட்டு,கொஞ்ச நேரம் வெளியில் சுத்திட்டு ,6.30 போல திரும்பலாம்.O.K வா ? உனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே!

"இல்லைங்க"

அந்த ஹோட்டலிலே லன்ச் முடித்தோம்.வெளியே வந்து டாடா சுமோவில் ஏறினோம்.வண்டி நிதானமாக நகர துவங்கியது.

"தீபா டியர் !நாம இப்ப எங்க போறோம் தெரியுமா?"

ம்ஹும்.தெரியாதுங்க!

சூசைடு பாயிண்ட்! இது எல்லோரும் இங்க வந்தோனே போய் பாக்குற சூசைடு பாயிண்ட் இல்ல.இது வேற.இங்கிருந்து 5 கிலோமீட்டர் மேலே உள்ள மலையில்தான் ரியலான சூசைடு பாயிண்ட் இருக்கு.நீ இதுக்கு முன்னாடி போய் இருப்பியான்னு தெரியல.தடுப்பு சுவர் எதுவுமே கிடையாது ! வித்தியாசமா செம த்ரில்லிங்கா இருக்கும்.நீ ரொம்ப என்ஜாய் பண்ணுவ!......................,...........,

என் கணவர் பேச பேச தலை சுற்ற ஆரம்பித்தது .எந்த இடத்தை வாழ்வில் மறுமுறை பார்க்ககூடாது என்று நினைத்தேனோ ,அந்த இடத்தை என் கணவர் மூலமே!..நெஞ்சை அடைத்தது .

"வா தீபா..இடம் வந்திருச்சு .பாத்து இறங்கு.என் கையை பிடிச்சிக்கோ "

அந்த இடத்தை நெருங்க நெருங்க கணேஷின் அருகாமையை என்னால் உணர முடிந்தது.

தீபா....-கணேஷின் குரல். தீபா...- மறுபடியும் கணேஷின் குரல்.

சந்தேகமே இல்லாமல் கணேஷ் தான்,என் கால்கள் இரண்டும் கட்டையாகிவிட்டதா?அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லையே..ஐயோ ..என்னது இது..எனக்கு பார்வை போய் விட்டது.. சுற்றிலும் கருமையாய் உள்ளதே"..........


"தீபா ..தீபா..என்ன ஆச்சுடா ,,எழுந்திரு..ரியாலி சாரிடா .நீ இப்படி பயப்படுவேனு தெரிஞ்சிருந்தா ,இங்க உன்னைய கூபிட்டே வந்திருக்க மாட்டேன் ..வா போகலாம் "-பிஸ்லேரி பாட்டிலுடன் நின்றிருந்தார் என் கணவர். எழுந்து என்னவருடன் நடக்க ஆரம்பித்தேன்.

இரண்டு வருடங்களுக்கு முன் ---என்ற படத்தில் ,என்னுடன் நடித்து ,ஷூட்டிங்கின் போது இதே இடத்தில தவறி விழுந்து இறந்து போன ,நடிகர் கணேஷின் குரல் என்னை விட்டு தொலைவாக சென்று கொண்டிருந்தது.

33 comments:

நட்புடன் ஜமால் said...

நல்லா எழுதியிருக்கீங்க

கதை என்பதையும் தாண்டி படித்தேன் ...

Rajeswari said...

நன்றி ஜமால்.

ஆ.ஞானசேகரன் said...

நல்லாஆ இருக்கு தொடருங்கள்

Rajeswari said...

நன்றி ஞானசேகரன் அவர்களே ..முதல் முறையா வந்து இருக்கேங்க..வருகைக்கு நன்றி.அடிக்கடி வாங்க.

Unknown said...

முதல் சிறு கதை நல்லா வந்திருக்கு ராஜேஸ்வரி.வாழ்த்துக்கள்.அமெச்சூர்த்தனம் கம்மி.திறமை இருக்கு.

சிறு கதை எழுதுபவர்களுக்கு என் யோசனை:

அறிவுரை/மிகை உணர்ச்சி/பிரச்சாரம்/
தவிருங்கள்.பாத்திரங்களை யதார்த்தமாக உலவ விடுங்கள்.

நான் நிறைய சிறுகதை படிப்ப்வன்.குறைவாய் எழுதுப்வன்.

வாங்க நம்ம வலைக்கு.”சிறு கதை”
லேபிள் கிழ்
”சாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி”


வைஷ்ணவியின் அம்மா ஒரு ஹோம் மேக்கர்”

“சாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு ”

கண்டிப்பா கருத்துச் சொல்லுங்க.ஒரு அனுபவம் கிடைக்கும்.

முடிந்தால் பதிவர் லேபிள் கிழ் வரும்
கட்டுரையையும் படிங்கள்.அதில் சுஜாதா என்ன சொன்னார்?

//சிறு கதை எழுதுவது எப்படி?பதிவர்களே படியுங்கள்//

நன்றி

Rajeswari said...

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ரவிசங்கர் .
//அறிவுரை/மிகை உணர்ச்சி/பிரச்சாரம்/
தவிருங்கள்.பாத்திரங்களை யதார்த்தமாக உலவ விடுங்கள்.//

கண்டிப்பாக follow பண்றேன் ....

அப்துல்மாலிக் said...

சிறுகதை.. முதல் முயற்சியா?

அப்படிஒன்னும் தெரியலியே... நல்லா இருக்கு வாழ்த்துகள்

இன்னும் கொஞ்சம் அதிகமா எதிர்பார்க்கிறேன்...

Ungalranga said...

கதை அருமை...
இரண்டு முறை படிச்சேன்...
நல்லா சுவாரசியமா இருக்கு...

இன்னும் எழுதுங்க..
சித்திரமும் கைப்பழக்கம்..
வாழ்த்துக்கள்..

Rajeswari said...

வாங்க அபுஅப்சர் சார்

Rajeswari said...

//ரங்கன் said...
கதை அருமை...
இரண்டு முறை படிச்சேன்...
நல்லா சுவாரசியமா இருக்கு.
இன்னும் எழுதுங்க..
சித்திரமும் கைப்பழக்கம்..
வாழ்த்துக்கள்
//


வாங்க ரங்கன் .கருத்துக்களுக்கு நன்றி..அடிக்கடி வாங்க

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...

நல்லா எழுதியிருக்கீங்க

கதை என்பதையும் தாண்டி படித்தேன் ... //

எப்படி தாண்டினீங்க தம்பு ஜமாலு...

கம்பூயட்டர நடுவுள வச்சுட்டு தாண்டினீங்களா

இராகவன் நைஜிரியா said...

அருமையா எழுதியிருக்கீங்க...

நிறைய எழுதுங்க...

மிக நன்றாக எழுதுவீர்கள்.

இராகவன் நைஜிரியா said...

// கொடைக்கானல் மலைப்பாதையில் எங்களது டாட்டா சுமோ மெல்ல ஏறத்துவங்கியது. //

மலையில் ஏறும் போது மெதுவாகத்தாங்க ஏறும். இது எங்களுக்குத் தெரியுமே.

Rajeswari said...

//மலையில் ஏறும் போது மெதுவாகத்தாங்க ஏறும். இது எங்களுக்குத் தெரியுமே//.

வாங்க ராகவன் அண்ணா(என்னை சகோதரி என்று சென்ற பினூட்டத்தில் எழுதியிருந்ததால் சார் ,அண்ணாவாக மாறியது என்று அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன் ஹி.. ஹி.. ஹி ..) அசோக்கு வண்டி ஓட்டி பாததிலையே..ரொம்ப ஸ்பீடா இருக்கும்.மலைல கூட ஸ்பீடாதான் ஒட்டுவான் .தீபா சொல்லி இருக்கா

Rajeswari said...

இராகவன் நைஜிரியா said...
// நட்புடன் ஜமால் said...

நல்லா எழுதியிருக்கீங்க

கதை என்பதையும் தாண்டி படித்தேன் ... //

எப்படி தாண்டினீங்க தம்பு ஜமாலு...

கம்பூயட்டர நடுவுள வச்சுட்டு தாண்டினீங்களா///

எனக்கு இருந்த சந்தேகத்த ராகவன் அண்ணாவே கேட்டுட்டாரு..சொல்லுங்க ஜமால்

VIKNESHWARAN ADAKKALAM said...

:) நல்லா இருக்கு மேலும் முயற்சிக்கவும்...

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் முயற்சியே ரொம்ப நல்லா இருக்கு தோழி... வாழ்த்துக்கள்..

Rajeswari said...

//VIKNESHWARAN said...
:) நல்லா இருக்கு மேலும் முயற்சிக்கவும்...//

கண்டிப்பா விக்னேஸ்வரன் ..

தமிழ் அமுதன் said...

முதல் முயற்சியா? குட் நல்லா இருக்கு!
வாழ்த்துக்கள்! உங்களுக்கு இன்னும் நல்லா எழுத வரும்!
கொடைக்கானலை இன்னும் கொஞ்சம் வர்ணிச்சு இருக்கலாம்!!

Rajeswari said...

வாங்க ஜீவன் அண்ணா

ஆதவா said...

முதல் முயற்சியா???

அப்படியொன்றும் தெரியவில்லையே...

கதையில் நான்கூட படிக்கும்போது என்னென்னவோ நினைத்தேன்... ஒருவேளை கணவனே அந்த கணேஷா இருக்குமோன்னு...

அப்படியே யூ டர்ன் அடிச்சு கலக்கிட்டீன்க்க...

சபாஷ்!!

ஆதவா said...

தொடர்ந்து எழுதுங்க விடாதீங்க.... நல்ல எழுத்துக்கள் இவை!!

Unknown said...

நல்லா இருக்கு சிறுகதை.முடிவு புதிதாக இருந்தது தொடருங்கள் உங்கள் முயற்ச்சியை

ராம்.CM said...

ரொம்ப நல்லா இருக்கு ....


முதல் முறையா....

மேலும் முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்..தோழி...

Sanjai Gandhi said...

முதல் முயற்சியா? ஹ்ம்ம்.. நல்லா தான் இருக்கு.. வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..

Mohan said...

கதை நல்லாருக்கு, தொடருங்கள்! வாழ்துக்கள்!

சதங்கா (Sathanga) said...

//முதல் முயற்சியா? ஹ்ம்ம்.. நல்லா தான் இருக்கு.. வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..

//

அதே ! அதே !!

புதியவன் said...

கதை அருமை...யூகிக்க முடியாத முடிவு...தொடருங்கள் வாழ்த்துக்கள்...

coolzkarthi said...

அக்கா நல்ல முயற்சி,வெற்றியும் கூட....

Anonymous said...

nallairuku

தேவன் மாயம் said...

சிறுகதை அருமை..

தேவன் மாயம் said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்!!
தொடர்ந்து எழுதவும்

பட்டாம்பூச்சி said...

நல்ல முயற்சி:)