Tuesday, February 24, 2009

கவிதைகள்

நீயே ஒளி

பச்சையம் மறந்த இலை...,
பட்டுப்போகுமோ ....!
பச்சை தண்ணீர் பட்டு...,
பசுமையடையுமோ...!
மணித்துளிகள் இல்லாமல்...,
நாட்களா....?-உன் மனதின்
நம்பிக்கை துளிகள் இல்லாமல்...,
வாழ்நாட்களாக....?
கதிரின் ஒளிபொருட்டு...,
உன் நிழல்.....!

நீயே ஒளியனால்...? ??
நம்பிக்கை எனும் ...,
உளி கொண்டு ...,
உனை செதுக்கி .....,
ஒளியோடு வா தோழா......!-
நாளை நிழல் இல்லா
நிஜம் உன்னோடு....!


ஏனோ தெரியவில்லை
வரும் காலங்களில் ....,
வடுக்களாகும் என தெரிந்தும்
காயமாக்கி கொண்டிருக்கிறேன்
எனது நினைவுகளை..
உன் மனக்கண்ணாடியில்..!
எல்லைகலற்று விரிந்த நீ
ஏனோ என்னை கூண்டிலடைத்தாய் .....!
சொல்லி சொல்லி உணரா முடிவு
சொல்லாமல் உணர்த்த காத்துக்கொண்டிருக்கிறது..!
ஏனோ தெரியவில்லை...,
என்னை விட்டு நீ
விலகிக்கொண்டே இருக்கிறாய் ...!

13 comments:

இராகவன் நைஜிரியா said...

// நீயே ஒளியனால்...? ??
நம்பிக்கை எனும் ...,
உளி கொண்டு ...,
உனை செதுக்கி .....,
ஒளியோடு வா தோழா......!- //

ஒளி படைத்த கண்ணினாய் வா.. வா..

இராகவன் நைஜிரியா said...

// வரும் காலங்களில் ....,
வடுக்களாகும் என தெரிந்தும்
காயமாக்கி கொண்டிருக்கிறேன்
எனது நினைவுகளை..
உன் மனக்கண்ணாடியில்..! //

அருமை... ரொம்ப ரசிச்சேன்

Rajeswari said...

நன்றி ராகவன் சார் !

புதுகை.அப்துல்லா said...

:)

தமிழ் said...

/நீயே ஒளியனால்...? ??
நம்பிக்கை எனும் ...,
உளி கொண்டு ...,
உனை செதுக்கி .....,
ஒளியோடு வா தோழா......!-
நாளை நிழல் இல்லா
நிஜம் உன்னோடு....!
/

அருமை

தமிழ் அமுதன் said...

//நீயே ஒளியனால்...? ??
நம்பிக்கை எனும் ...,
உளி கொண்டு ...,
உனை செதுக்கி .....,
ஒளியோடு வா தோழா......!-
நாளை நிழல் இல்லா
நிஜம் உன்னோடு....!///

அருமை,,,,,,,

Gokul said...

//மணித்துளிகள் இல்லாமல்...,
நாட்களா....?-உன் மனதின்
நம்பிக்கை துளிகள் இல்லாமல்...,
வாழ்நாட்களாக....?//

அற்புதமான வரிகள் ரசித்தேன்

Gokul said...

//எல்லைகலற்று விரிந்த நீ
ஏனோ என்னை கூண்டிலடைத்தாய் .....!//

இரண்டே வரிகளில் எத்தனை அர்த்தங்களை / எண்ணங்களை தூண்டி விட்டுவிட்டீர்

ஆதவா said...

இரு கவிதைகளும் அருமைங்க...

priyamudanprabu said...

// நீயே ஒளியனால்...? ??
நம்பிக்கை எனும் ...,
உளி கொண்டு ...,
உனை செதுக்கி .....,
ஒளியோடு வா தோழா......!- //

நல்லாயிருக்கு

தேவன் மாயம் said...

பச்சையம் மறந்த இலை...,
பட்டுப்போகுமோ ....!
பச்சை தண்ணீர் பட்டு...,
பசுமையடையுமோ...!
மணித்துளிகள் இல்லாமல்...,
நாட்களா....?-உன் மனதின்
நம்பிக்கை துளிகள் இல்லாமல்...,
வாழ்நாட்களாக....?
கதிரின் ஒளிபொருட்டு...,
உன் நிழல்.....!///

நல்ல அருமையான வரிகள்!!

தேவன் மாயம் said...

வரும் காலங்களில்
வடுக்களாகும்////

உண்மை உணர்ந்து எழுதியுள்ளீர் ராஜேஸ்!!!

நிலாரசிகன் said...

/எல்லைகலற்று விரிந்த நீ
ஏனோ என்னை கூண்டிலடைத்தாய் .....!//

எல்லைகளற்று.

இவ்வரிகள் அதிகம் கவர்கிறது மனதை. நேற்று உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் வலைத்தளத்தின் பெயருக்காகவே பாலோயர் ஆகலாம் :) (மூடுபனி)