Thursday, February 26, 2009

உந்துதலும் வெற்றியும் ...

நம்மில் அனைவருக்கும் பொதுவாக ஒரு ஆசை இருக்கும், ஏதாவது ஒரு சமயத்திலாவது வெற்றியாளனாக திகழ வேண்டும் என்று .தற்சமயம் உலகமே கொண்டாடிக்கொண்டிருக்கும் A.R. ரஹ்மான் , இந்த நிலையை அடைய எவ்வளவு போராடியிருப்பார் .
ஒருவரின் வெற்றி எனும் கோபுரத்தின் அடியில் பல வேதனைகளும் ,உண்மைகளும் ,அஸ்திவாரமாய் புதைந்து கிடக்கின்றன .
ஒருதடவை ,அறிஞர் சாகரடீசை நோக்கி ஒருவன் ,"ஐயா ,நான் செய்யும் வியாபாரத்தில் ,வெற்றி பெற நினைக்கிறேன் .அதன் ரகசியம் என்ன ?" என்று கேட்டான் .அதற்கு அவர் "சரி ,நாளை நீ இந்த ஊரில் இருக்கும் ஆற்றங்கரைக்கு வந்து விடு.அங்கே உனக்கு ,நான் அந்த ரகசியத்தை கூறுகிறேன்" என்றார்.

மறுநாளும் வந்தது.இருவரும் ஆற்றங்கரையில் சந்தித்தனர்.அறிஞர் எதுவும் பேசவில்லை,அமைதியாகவே இருந்தார்.உடனே அவன் அவரை நோக்கி,"ஐயா, அந்த ரகசியம் என்ன என்று கூறுகிறேன் என்று சொல்லியிருந்தீர்களே?" என்றான். "இதோ சொல்கிறேன்" என்று கூறி அவனை தூக்கி கொண்டு சென்று ,ஆற்றில் போட்டு அமுக்கினார். தண்ணீரின் உள்ளே அவன் தினறிக்கொண்டு இருந்தான்.

சில வினாடிகளுக்கு பிறகு, அவனுடைய தலையை மட்டும் மெல்ல உயர்த்தி "நீ தண்ணீருக்குள் இருக்கும் போது என்ன நினைத்தாய்? "என்றார்.
"சுவாசிக்க காற்று வேண்டும் என்ற சிந்தனையை தவிர வேறு ஏதும் நினைக்கவில்லை "என்றான். உடனே அவர் சிரித்துக்கொண்டே "இதுதான் வெற்றியின் ரகசியம்.தண்ணீரின் உள்ளே இருக்கும் போது காற்று வேண்டும் என்ற உந்துதல்(Motivation) தான் உன்னை போராட வைத்தது .அதே போல் ,நீ எந்த துறையில் வெற்றி பெற நினைக்கிறாயோ ,அதற்கான உந்துதலும், கடின உழைப்புமே ,உன்னை கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும் " என்றார்.
நாமும் இதை உணர்வோம் ."High Motivation is the First Step Towards Victory"

14 comments:

அப்துல்மாலிக் said...

//உந்துதலும், கடின உழைப்புமே ,உன்னை கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்/

ம்ம் நல்லா சொன்னீங்க‌

எதிர் நீச்சல் என்று கூட சொல்லாம்

உங்க பதிவை படித்து ஒரு உந்துதல் வந்தது, உந்திப்பார்ப்போம்

Rajeswari said...

வாங்க அபுஅஃப்ஸர்

அன்புடன் அருணா said...

ஏற்கெனவே படிச்சதுதான்....மீண்டும் படிக்கக் கிடைத்ததில் சந்தோஷம்தான்...
அன்புடன் அருணா

? said...

//ஒருவரின் வெற்றி எனும் கோபுரத்தின் அடியில் பல வேதனைகளும் ,உண்மைகளும் ,அஸ்திவாரமாய் புதைந்து கிடக்கின்றன.//

சத்தியமான உண்மை. இதே ரகுமான் வாழ்க்கையையே வெறுத்துப் போய ஒருகாலத்தில் விரக்தியின் உச்சத்தில் இருந்தவர்.இப்போது....

ஆதவா said...

High Motivation is the First Step Towards Victory"

உண்மைதான் சகோதரி.... வெற்றி பெற்றவர்களுக்குப் பின்னாள் உள்ள வாசகம் இதுதான்!!!

ஆதவா said...

High Motivation is the First Step Towards Victory"

உண்மைதான் சகோதரி.... வெற்றி பெற்றவர்களுக்குப் பின்னாள் உள்ள வாசகம் இதுதான்!!!



மன்னிகக்வும் சகோதரி.. தங்கள் தளத்தின் பதிவிடும் முறை மிகவும் சிரமமாக இருக்கிறது.... நான் மாற்றச் சொல்லியிருந்தேன்... அது தங்களுக்கு விருப்பமில்லை என்று அறிந்தென்... சரி... என்னால் சிரமமாகவெல்லாம் பதிவிட முடியாது!!! நான் உங்கள் தளத்தில் இனி படித்துவிட்டு மட்டும் போகிறேன்.... மன்னிக்கவும்!!

நட்புடன் ஜமால் said...

\\நீ எந்த துறையில் வெற்றி பெற நினைக்கிறாயோ ,அதற்கான உந்துதலும், கடின உழைப்புமே ,உன்னை கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்\\

மிக(ச்) சரியாக சொன்னீர்கள்

இராகவன் நைஜிரியா said...

// உந்துதலும் வெற்றியும் ... //

உந்துதல் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும். சும்மா சோம்பி இருந்தால் ஒன்றும் நடக்காது..

இராகவன் நைஜிரியா said...

// நீ எந்த துறையில் வெற்றி பெற நினைக்கிறாயோ ,அதற்கான உந்துதலும், கடின உழைப்புமே ,உன்னை கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும் " //

சரியாகச் சொல்லப்பட்ட வார்த்தைகள்.

Sathik Ali said...

//"சுவாசிக்க காற்று வேண்டும் என்ற சிந்தனையை தவிர வேறு ஏதும் நினைக்கவில்லை "//

நல்ல உதாரணம் நல்ல கட்டுரை சரியாகச்சொன்னீர்கள்

Rajeswari said...

//ஆதவா said...High Motivation is the First Step Towards Victory"

உண்மைதான் சகோதரி.... வெற்றி பெற்றவர்களுக்குப் பின்னாள் உள்ள வாசகம் இதுதான்!!!



மன்னிகக்வும் சகோதரி.. தங்கள் தளத்தின் பதிவிடும் முறை மிகவும் சிரமமாக இருக்கிறது.... நான் மாற்றச் சொல்லியிருந்தேன்... அது தங்களுக்கு விருப்பமில்லை என்று அறிந்தென்... சரி... என்னால் சிரமமாகவெல்லாம் பதிவிட முடியாது!!! நான் உங்கள் தளத்தில் இனி படித்துவிட்டு மட்டும் போகிறேன்.... மன்னிக்கவும்!!//

சகோதரர் ஆதவா அவர்களுக்கு,
பின்னுட்ட முறை கடினமாக உள்ளது என்று முந்தைய பதிவில் எழுதி இருந்தீர்கள்.
எவ்வாறு மாற்ற வேண்டும் என்ற சிறு தடுமாற்றத்தால் ,அதை செய்யாமல் விட்டு விட்டேன் .இப்பொழுது சிறிது மாற்றி இருக்கிறேன், இந்த பின்னூட்ட முறையும் கடினம்மை இருந்தால் , எவ்வாறு settings ஐ மாற்ற வேண்டும் என்று பின்னூட்டம் இடவும்.உங்களுடைய சிரமத்திற்கு வருந்துகிறேன்.

நட்புடன் ஜமால் said...

\\இந்த பின்னூட்ட முறையும் கடினம்மை இருந்தால்\\

இதுவே எளிதான பின்னூட்ட முறை.

தமிழ் அமுதன் said...

///நீ எந்த துறையில் வெற்றி பெற நினைக்கிறாயோ ,அதற்கான உந்துதலும், கடின உழைப்புமே ,உன்னை கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும் " ///


ஆமாங்க டீச்சர்!! நீங்க சொல்லுறது எல்லாமே சரியாதான் இருக்கு!
இன்னும் நெறைய சொல்லுங்க! கேக்க நாங்கல்லாம் ஆர்வமா இருக்கோம்!!!

ஆதவா said...

நன்றி சகோதரி... இம் முறை எளிதாக இருக்கும்..... நான் தொடர்ந்து எழுதுகிறேன்.