Tuesday, February 17, 2009

கொசுவத்தி ஒன்னு


பால்வாடி பத்தி உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்,,அதாங்க இந்த LKG UKG க்கு பதிலா படிக்கிறது .அங்க தாங்க நானும் பாண்டியும் படிச்சோம் .அங்கல்லாம் காலையில ஒன்பதுல இருந்து பத்துக்குள்ள போனா போதும் . ப்ரெயெர் பாடி முடிச்சுருந்தாலும் சரி ,ப்ரெயெர் பாடிக்கிட்டே இருந்தாலும் சரி ,லேட் கம்மர்னு வெளில நிக்கல்லாம் விடமாட்டாங்க

.பாண்டிக்கு அம்மா அப்பா இல்லாததனால அவன் பால்வாடிக்குள்ளயே இருக்கிற பாய்ஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தான்.நானும் பாண்டியும் ரொம்ப திக் பிரெண்ட்ஸ் .ஒரே வரிசையில் தான் உட்காருவோம் .என்ன மாதிரியே அவனும் ரொம்ப நல்லா படிப்பான்.நாங்க ரெண்டு பேரும் நல்லா படிக்கிறதால ,எங்க நாகா டீச்சர் எங்களுக்கு மட்டும் ரெண்டுரவுண்டு மால்டோ தருவாங்க . .சூப்பரா இருக்கும் ..(அதுக்காகவே அடம் புடிக்காம ஸ்கூலுக்கு போய்டுவேன் )  

லஞ்சுக்கு சத்து மாவோ ,கீரைகுழம்பு சோறோ தருவாங்க ..லஞ்சு முடிஞ்சதுமேதான் நல்லா இருக்கும் ..ஒவ்வொருத்தரையா எந்துருச்சு ரைம்ஸ் பாட சொல்லுவாங்க..என் டேர்ன் எப்ப வரும்னு ரொம்ப ஈகரா வெயிட் பண்ணிட்டு இருப்பேன் .ஏனா என் குரல் நல்லா இருக்குன்னு பாண்டி சொல்லிருக்கான் .என்னோட பேவேரிட் பாட்டு என்னனு தெரியுமா ? இதோ.. 

  "குத்தடி குத்தடி ஜெயினக்கா
குனிஞ்சு குத்தடி ஜெயினக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி டோலக்கு
பையன் வரான் பாத்துக்கோ
பணம் கொடுத்தா வாங்கிக்கோ
சில்லறைய மாத்திக்கோ 
சிலுக்கு பையில போட்டுக்கோ 
சிலுக்கு சிலுக்கு ஆட்டிக்கோ "

அப்பறம் நல்ல ஓடி ஆடி விளையாண்டதுக்கு அப்பறம் ரெண்டு மணிப்போல தூங்க சொல்லுவாங்க ..மூணு மணிப்போல எங்க அக்கா என்ன கூப்பிட வரும்போது ,ரெண்டு கைகளையும் பைசா ரொட்டி (குட்டி குட்டி பிஸ்கட் )வச்சு எங்க டீச்சர் அனுப்பி விடுவாங்க ..இப்படியே நல்லா போயிட்டு இருந்துதுங்க ..ஒருநாள் எங்க டீச்சர் எனக்கு புது ப்ளூ பாவடையும் வெள்ளை சட்டையும் கொடுத்து ,கலெக்டர் ஆபிஸ் போகப்போறதால நாளைக்கி வரும்போது நான் போட்டுட்டு வரணும்னு எங்க அக்காகிட்ட சொல்லி அனுப்பிச்சாங்க .. நானும் பக்கவா கிளம்பி போய் நின்னா ..அட பாண்டியா அது புது டவுசர் சட்டை போட்டு ..அப்பறம் ஜாலியா ஜீப்ல ஏறி கிளம்பினோம் .

 முதல் தடவையா ஜீப் ட்ராவல் ..கலெக்டர் ஆபிஸ் போனதுக்கு அப்பறமா ,உள்ள எதோ ஒரு ரூமுக்கு என்னையும் பாண்டியையும் கூப்பிட்டு போனாங்க ..எங்கள மாதிரியே அங்க நிறைய பசங்க ..கொஞ்ச நேரம் கலுச்சு ஒரு பெரிய அம்மா கிப்பி வச்சுக்கிட்டு ,நாங்க இருந்த ரூமுக்குள்ள நொலஞ்சாங்க ..எனக்கு அவங்கள எங்கேயோ பாத்த மாதிரி இருக்குதேனு
யோசிகிறதுக்குள்ள எனக்கு நியூட்ரின் சாக்லட் கொடுத்து என்னை தூக்கி வச்சுகிட்டாங்க ..அப்பறம் தான் எனக்கு ஞாபகம் வந்தது ..அவங்க எங்க வீட்ல ஒரு போட்டோல இருக்கிற ஒரு அம்மானு...  

 .சிறிது நேரத்திற்கு அப்பறம் மறுபடியும் ஜீப் ட்ராவல் டூ வீடு.ஜீப் விட்டு இறங்கினவுடனே பாண்டிக்கு ஒரு பை சொல்லிட்டு வீட்ல போய் எங்க அப்பாகிட்ட யாருப்பா அந்த அம்மானு கேட்டேன் ,போட்டோவ காண்பிச்சு ..அவங்கதான் நம்ம பிரதமர் இந்திரா காந்தினு சொன்னாரு,அப்படியானுட்டு விளையாடப்போயிட்டேன் .

அப்படியே எப்போவும் போல ஜாலியா ஸ்கூலுக்கு போயிட்டு இருந்தேன் ..ஆனா ஒருநாள்
நானும் எங்க அக்காவும் போனப்ப பாண்டி யார்கூடயோ ,பெரிய பையெல்லாம் வச்சு நின்னுக்கிட்டு இருந்தான் ..என்னடா கிளாஸ்க்கு போகாம இங்க நிக்கிறேன்னு கேட்டேன் ..நான் வேற ஊருக்கு போறேன் .,டாட்டா அப்படின்னு சொல்லிக்கிட்டே அழுக ஆரம்பிச்சுட்டான் ..எனக்கும் அழுக அழுகையா வந்துடுச்சு ..போகாத பாண்டி ,போகாத பாண்டின்னு சொல்லி ,தரயில பொரண்டு அழுதேன் .எங்க டீச்சர்லாம் வந்து என்னைய தூக்கி விட்டாங்க .பாண்டி திரும்ப வந்துடுவான்னு சொன்னாங்க ..பாண்டியும் சொன்னான் ,நான் கண்டிப்பா வந்து உன்னை பார்பேன்னு ...ஆனா இன்னும் வரல .

நீங்க யாராவது பாண்டியா ????
..
10 comments:

இராகவன் நைஜிரியா said...

மிக அருமையாக கோர்வையாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

உங்களிடம் நல்ல எழுத்து திறமை உள்ளது.

நிறைய படியுங்கள், எழுதுங்க.

Rajeswari said...

ரொம்ப நன்றி ராகவன் சார் ..

Jenbond said...

இது உண்மை கதையா இல்லை உண்மை கதையில உங்க கற்பனையோட எழுதினீங்களா.

பாண்டி இல்லைங்க ஜென்பாண்ட்

Rajeswari said...

பாண்டு சார் ......உண்மையிலே நடந்ததுதான் ...ஆனா அவன் பேரு வெறும் பாண்டி தான்...எப்படியாவது கண்டு புடுச்சு தாங்க சார்

coolzkarthi said...

சரள நடை....பாண்டி கிடைக்க வாழ்த்துக்கள்....அருமையான ஞ்யாபக சிதறல்கள்....

coolzkarthi said...

என்னது அண்ணன்னா?ராஜேஸ்வரி அக்கா உண்மையில் நான் சின்ன பையன்.....
16 yrs old with seven yrs of experience....

Rajeswari said...

தேங்க்ஸ் கார்த்தி தம்பி (ம்ம் எனக்கு எத்தன தம்பிதான் கிடைப்பாங்களோ )

SurveySan said...

மெய்யா? இல்ல உடான்ஸா?

நல்லாருக்கு மேட்டரு. ;)

என் கொசுவத்தி மாதிரி இது இல்லியே?
http://surveysan.blogspot.com/2007/06/blog-post_21.html

Rajeswari said...

சர்வேசன் எல்லாருக்கும் குழந்தை பருவம் உண்டு தானே ....இது உடான்ஸ் இல்ல ..மேலும் உங்க பதிவு அருமையா இருக்கு ...வாழ்த்துக்கள்

Vani said...

romba arumaiyana niyabaga thoguppunga. Chinna chinnatha nirya vishayangala tholanchu porathu vaazhkaiyila iyalbaana onnu... athoda baathippu evalonnngrathu tholyama irukra ithu pondra ninaivugal thaan sollum. Romba nall pathivu. Oru chinna santhegam... "kosuvathi Onnu" ???? avalo anubavam illeenga puriara alavuku... :)