சென்ற வாரம் " cast away " என்ற ஆங்கில படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது .2000 இல் வெளிவந்த அந்த படத்தின் நாயகன் Tom Hanks(ரொம்ப சீக்கிரமா பாத்துட்டேன்னு நினைகிறேன் ) .சொல்ல போனால் ,சினிமா வரலாற்றில் ,ஒருத்தர் மட்டுமே நடித்த படம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும் (எனக்கு தெரிந்தவரை).
ஒரு இரண்டு நாள் தனியா வீட்டுல இருந்தாலே ,எனக்கு பைத்தியம் புடிச்ச மாதிரி ஆகிடும் .ஆனால் கிட்ட தட்ட நான்கு வருடங்களாக ,நாயகன் (ரித்தீஷ் இல்லப்பா) தனி தீவில் வசிக்கிறான் எந்த ஒரு வசதியும் இல்லாமலேயே .
சரி கதை சொல்லுறேன் கேட்டுக்குங்க !
நாயகன் ஒரு கொரியர் ஆபிசில் வேலை செய்கிறான் .எப்பொழுதும் போலவே அவனுக்கு ஒரு அழகான காதலியும் உண்டு (அடுத்தவருடைய காதலிகள் என்றாலே அழகுதான் ).ஒருநாள் ,கொரியர் கொண்டு போகும் விமானத்தில் அவனும் பயணிக்கிறான் .திடீரென அந்த விமானம் விபத்துக்குள்ளாகிறது . விமானம் பசிபிக் பெருங்கடலுக்குள் விழுந்து சிதறுகிறது .தமிழ் சினிமாவைப்போல ,நாயகன் மட்டும் உயிரோடு ஒரு தீவில் கரை ஒதுங்குகிறான் .
ஆள் அரவமற்ற அந்த தீவில் ,நான்கு வருடங்களாக எவ்வாறு உயிர் வாழ்கிறான் , எந்த எந்த யுக்திஎல்லாம் மேற்க்கொண்டு தப்பிக்கிறான் என்பதே கதை .
அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் மிகவும் ரசிப்பதாக இருக்கும் .
மேலும் அனைவருக்கும் நண்பர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை ,இயக்குனர் ஒரு பந்தின் (foot ball) மூலம் விளக்கியிருப்பார் . அதாவது ,நாயகன் கொரியரில் தன்னுடன் வந்த ஒரு பந்திற்கு ,"wilson" என்று பெயரிட்டு நண்பனாக பாவித்து ,தன்னுடைய சுக துக்கங்களை எல்லாம் பகிர்ந்து கொள்வான் .ஆனால் ,கடைசியில் ,அந்த பந்தை கூடவே கொண்டு வர முடியாத சூழல் ஏற்படும். ரொம்பவும் கஷ்டமா சீன் அது.(பல தத்துவங்கள் இருக்குப்பா அதுல..இதுவே நம்ம ஊருனா ஒரு சோக பாட்டு போட்டு ப்ளாஷ் பாக் எல்லாம் காண்பிப்பாங்க !) ஒரு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிடங்களே ஓடக்கூடிய ,இந்த படத்தை முடிந்தால் நீங்களும் பாருங்களேன்.
22 comments:
கடசீல பந்த கொண்டு வந்தாரா இல்லையா ?
ஜீவன் said..கடசீல பந்த கொண்டு வந்தாரா இல்லையா ?//
இல்ல !மிஸ் பண்ணிட்டாரு
ஆமாங்க.. ரொம்ப நல்ல படம்.
சாப்பிட ஒன்னும் இல்லாம, தேங்காய கல்லுல அடிச்சு ஒடைச்சு சாப்டதும், பச்சையாக மீனை பிடித்து தின்றதும்...
அவ்வளவு கஷ்டத்துக்கு அப்புறமும் அந்த தீவை விட்டு கிளம்பும் போது ஒரு ஏக்கப் பார்வை பார்ப்பாரே,,,
எப்போதாவதுதான் வித்தியாசமான படங்கள் வரும். அதில் இதுவும் ஒன்று.

நீங்க பார்த்து பட்ட கஷ்டத்தை நாங்களும் படனும்னு சொல்றீங்க
சரி உஙளுக்காக பாத்துடுவோம்
ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
ஒரு இரண்டு நாள் தனியா வீட்டுல இருந்தாலே ,எனக்கு பைத்தியம் புடிச்ச மாதிரி ஆகிடும் .ஆனால் கிட்ட தட்ட நான்கு வருடங்களாக ,நாயகன் (ரித்தீஷ் இல்லப்பா) தனி தீவில் வசிக்கிறான் எந்த ஒரு வசதியும் இல்லாமலேயே .
//
நீங்களும் நம்ம செட்டுதான், பரவா இல்லை
நான் இனிமே தைரியமா வெளியே சொல்லிக்கலாம்
நானும் ராஜியோட தோழி என்று சரிதானே??
//
ஆள் அரவமற்ற அந்த தீவில் ,நான்கு வருடங்களாக எவ்வாறு உயிர் வாழ்கிறான் , எந்த எந்த யுக்திஎல்லாம் மேற்க்கொண்டு தப்பிக்கிறான் என்பதே கதை .
அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் மிகவும் ரசிப்பதாக இருக்கும் .
//
கதையை விட நீங்க சொல்லரவிதம்தான் ரொம்ப ரசனையா இருக்கு.
//
ஒரு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிடங்களே ஓடக்கூடிய ,இந்த படத்தை முடிந்தால் நீங்களும் பாருங்களேன்.
//
கண்டிப்பா பாக்கறேன். நீங்க சொன்னப்புறம் பார்க்காவிட்டால் நல்லாவா இருக்கும்!!
எப்படிங்க இதெல்லாம். இங்கிலீசு படம் பார்த்து, அதுக்கு ஒரு விமர்சனம் வேற போட்டு இருக்கீங்க.. டீச்சரம்மான்னா சும்மாவா...
//
ஆள் அரவமற்ற அந்த தீவில் ,நான்கு வருடங்களாக எவ்வாறு உயிர் வாழ்கிறான் , எந்த எந்த யுக்திஎல்லாம் மேற்க்கொண்டு தப்பிக்கிறான் என்பதே கதை .
அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் மிகவும் ரசிப்பதாக இருக்கும் . //
கொடுத்து வைத்த புண்ணியவான்... தனியா போய் மாட்டிகிட்டாரு... கூடவே தங்கமணி இருந்திருக்கணும், படத்தில ஒரு வார்த்தைக் கூட பேசி இருக்க மாட்டாரு...
// அடுத்தவருடைய காதலிகள் என்றாலே அழகுதான் //
இஃகி...இஃகி...
// சென்ற வாரம் " cast away " என்ற ஆங்கில படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது .2000 இல் வெளிவந்த அந்த படத்தின் //
வெரிகுட்... வெரிகுட்... கீப் இட் அப்...
// ஒரு இரண்டு நாள் தனியா வீட்டுல இருந்தாலே ,எனக்கு பைத்தியம் புடிச்ச மாதிரி ஆகிடும் //
இனிமேத்தான் பிடிக்கணுமா....
ரொம்ப அருமையான படங்க அது!!!!! Fedex கொரியர்னு நினைக்கிறேன்...
நாயகனோட காதலி.. இவன் உசுரோட இருக்கிறான்னு தெரிஞ்சதும் போடுவாங்க பாருங்க மயக்கம்.... அடாடா... ஒருசில படங்களில்தான் இப்படி பார்த்திருக்கிறேன்.
நான் கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் பார்த்தேன்.... என் மனதை விட்டு நீங்காத திரைப்படம் இது!!!!
படத்தில் தொண்ணூறு சதம் அவர் ஒருவர் மட்டுமே!!!
டாம் மோட பல படங்கள் நல்லா இருக்கும். வாய்ப்பு கிடைச்சா, டெர்மினல் பாருங்க. உங்களுக்கு நல்ல ஆங்கில சினிமா, என்ன கேட்டகரில வேணும்னாலும் கேளுங்க... நான் சொல்றேன்..
அவசியம் பார்த்திடுவோம் ...
//சரி கதை சொல்லுறேன் கேட்டுக்குங்க !///
எனக்கு தெரியுமே.. பல வருஷம் ஆச்சே பாத்து :)
ஆனாலும், டாம் ஹாங்க்ஸ், தனி ஆளா, படத்தை தலைல தூக்கிக்கிட்டு காப்பாத்தினாரு. அபாரம்.
//சரி கதை சொல்லுறேன் கேட்டுக்குங்க !///
எனக்கு தெரியுமே.. பல வருஷம் ஆச்சே பாத்து :)
ஆனாலும், டாம் ஹாங்க்ஸ், தனி ஆளா, படத்தை தலைல தூக்கிக்கிட்டு காப்பாத்தினாரு. அபாரம்.
அவரு வேல பார்த்தது FedEx கொரியர் தான?...
இந்த படத்திற்காக Tom Hanks ஒருவருடம் உழைத்து 14 கிலோ எடையை குறைத்தார். மிகவும் அருமையான படம்.
வெங்கடேஷ்
http://thiratti.com
எனக்கு பிடித்த படங்களில் ஒன்று....தேங்காயை உடைத்து தண்ணீர் குடிக்கும் போது சிந்த துளையிட்டு,அதில் குடி நீரை சேகரிக்கும் அறிவு,ஹெல்ப் என்று மரங்களால்,குச்சி கொண்டு நெருப்பை உண்டு பண்ணி அடையும் ஆனந்தம்( ஆதி மனிதனும் இப்படி தான் மகிழ்ந்திருப்பானோ)பல விஷயங்கள்...நல்ல படம்...இந்த படங்களை பல வருடங்களுக்கு முன்பே HBO மற்றும் ஸ்டார் மூவிஸ் துவைத்து காய போட்டு விட்டனர்....
//ஒரு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிடங்களே ஓடக்கூடிய ,இந்த படத்தை // ஏங்க படம் 2 மணி நேரம் 20 நிமிஷம்'ங்க நீங்க எதோ கட் எடிஷன் பாத்திருக்கீங்கன்னு நினைக்குறேன்.
Post a Comment