மனிதரில் பல வகை என்பது நாம் அறிந்ததே ....ஆனாலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் நாம் எந்த வகை, நம்முடைய குண நலன்கள் என்ன என்று தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறோம் ..சரி நீங்கள் எந்த வகை என்று ,கீழே உள்ளதை வாசித்து முடிவு செய்யுங்கள் ..
"முடிந்த செயலை நினைத்து வருந்திக்கொண்டு இருப்பவன் முழுமூடன் ..
முடிந்த செயலின் மூலம் அனுபவத்தை பெற்று கொள்பவன் புத்திசாலி...
முடிந்த செயலை முற்றிலும் மறக்க முடிந்தவன் அதிஷ்டசாலி ...
முடிந்த செயலின் முடிவை மாற்ற தகுந்தவன் பொறுமைசாலி ...
முடிவுக்கு தகுந்து தன்னை மாற்றிக்கொள்பவன் சாமர்த்தியசாலி ...
முடிந்ததை முழுவதுமாக ஏற்று கொள்பவன் தைரியசாலி ...."
8 comments:
நான் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வரு மாதிரி இருக்கேனே.. என்ன செய்ய?????
ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி இருந்தது நடந்து முடிந்த செயல் ..
ஆகையால் நடந்து முடிந்ததை நினைத்து.......
அதான் போஸ்ட்ல போட்டு இருக்கேனே படிச்சுக்கோங்க கார்த்தி
sorry kaarki
"தைரியசாலி” இத ஏன் போல்ட் பண்ணாம விட்டுடீங்க...
நாங்கெல்லாம் எந்த செயல் செய்யறமோ அதுக்கு தகுந்தபடி இருப்போமில்ல..
நல்லதா இருந்தா எப்போதும் நினைவில இருக்கும், கெட்டது என்றால் உடனே மறந்து அடுத்து நல்ல விசயத்த பார்க்க ஆரம்பிச்சுடுவோமில்ல
//இராகவன் நைஜிரியா said"தைரியசாலி” இத ஏன் போல்ட் பண்ணாம விட்டுடீங்க...//
வார்த்தையே போல்டா இருக்கும்போது எதுக்கு,தனியா வேறு போல்ட் பண்ணனும் விட்டுடேன் (எதுக்கு ராஜி பொய் சொல்லுற ....)
இதோ பண்ணிட்டேன்
//நல்லதா இருந்தா எப்போதும் நினைவில இருக்கும், கெட்டது என்றால் உடனே மறந்து அடுத்து நல்ல விசயத்த பார்க்க ஆரம்பிச்சுடுவோமில்ல//
கிரேட் சார் ..நானும் அப்படித்தான்
ரசனைக்காரி அப்படின்னும் ஒரு option வெச்சு இருக்கலாம்ல....
அடுத்த பதிவுல தம்பி கார்த்திக்குக்கும் சேர்த்து option வச்சுருவோம்
Post a Comment