Tuesday, February 24, 2009

மகிழ்ச்சியின் வேர் எங்கே இருக்கிறது ?

நேற்று எனது தோழிகளுடன் உரையாடிக்கொண்டிருந்தேன்.மிகவும் மகிழ்ச்சியாக நேரம் சென்றது.உரையாடலின் போதே நான் அவர்களிடம் "நாம் இவ்வாறு மகிழ்ச்சியாய் இருப்பதற்கு காரணம் என்ன என்று சொல்ல முடியுமா"என்று வினவினேன். பலரும் பல காரணங்கள் கூறினர்.ஒருவர் "ரொம்ப நாள் கழிச்சு இன்றுதான் ஒண்ணா நேரம் செலவழிசிருக்கோம் அதனால் தான்" என்றார்.

உடனே நான் அவரிடம் "நாம் சந்திக்க வருவதற்கு முன் உங்கள் மனதில் கஷ்டம் இருந்திருந்தால் இப்பொழுது இருப்பதை போல மகிழ்ச்சியாய் இருந்திருக்க முடியுமா"என்று கேட்டேன்.யோசிக்க ஆரம்பித்தார்.

சரி உங்களிடம் கேட்கிறேன் ,ஒரு மனிதன் சந்தோசமாய் இருப்பதற்கு என்ன காரணம்? மனிதனுடைய மகிழ்ச்சியின் வேர் எங்கே இருக்கிறது ? கண்டு பிடித்திருக்கிறீர்களா ?

மகிழ்ச்சி என்பது பலருக்கும் பல அர்த்தங்களை கொடுக்கிறது ,உதாரணத்திற்கு ஏழைக்கு பணம் என்றால் மகிழ்ச்சி,நோயாளிக்கு ஆரோகியம் மகிழ்ச்சி பண்டிதனுக்கு அறிவு மகிழ்ச்சி.இப்படி பல்வேறுபட்ட மகிழ்ச்சிகள் மனிதனுக்குள் உறைந்து கிடக்கின்றது .ஆனால் இவையெல்லாம் உண்மையா? நிரந்தரமா?கண்டிப்பாக இல்லை.

"மனதை ஒருவன் வைத்திருக்கும் நிலையை பொறுத்தே ,அவன் அடையும் சந்தோசம் இருக்கிறது" என்றார் ஆபிரகாம் லிங்கன் .இது எவ்வளவு பெரிய உண்மை என்று உணரும்போதுதான் ,அதன் ஆழம் புரியும்,அதைத்தான் "மனதை பக்குவப்படுத்துதல் " என்பர் .

பக்குவப்பட்ட மனிதனுக்கு ,எந்த ஒரு சூழ்நிலையையும் ஒன்றாகவே பாவிக்க தோன்றும்.ஆனால் இந்த பக்குவப்பட்ட மன நிலையை அடைய நிறைய சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் .உதாரணத்திற்கு நாம் அன்றாடம் செய்யும் வேலை.

உங்களில் எத்தனை பேர் நீங்கள் செய்யும் வேலையை விரும்பி செய்கிறீர்கள் ?ஏதோ செய்கிறோம்,மாதம் மாதம் பணம் கிடைக்கிறது என்றிருந்தால் மனம் மகிழ்ச்சியில் திளைக்க முடியாது. நாம் செய்யும் வேலை ,நம்மை பக்குவப்படுத்தவே என்பதை உணர வேண்டும்.இந்த சூழலை நினைத்து பாருங்கள் .அதாவது இவ்வுலகில் உள்ள அனைவரின் வேலையையும் நீக்கி விடுங்கள் .அப்பொழுதுதான் இவ்வுலகம் எவ்வளவு மோசமானதாய் இருக்கும் என்று தெரிய வரும்.

மனம் எப்பொழுதும் ஓடும் நீரோடை போல இருக்க வேண்டும். சோம்பிதிரிந்தால் தேங்கி நின்று விடும்.
"சந்தோசத்தின் ரகசியம் எதையாவது (வேலை)செய்வது தான்" என்பது அறிஞர் ஜான் பரோஸ் அவர்களின் கூற்று .ஆகவே செய்யும் வேலையை விரும்பி மகிழ்ச்சியுடன் தொடருங்கள் அல்லது விரும்பிய வேலையை செய்ய பாருங்கள் .மகிழ்ச்சியின் வேர் உங்கள் கண்களுக்கு தென்படும் .

(lay-off டைம் ல இதை எழுதுறதுக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு)

13 comments:

அன்புடன் அருணா said...

//செய்யும் வேலையை விரும்பி மகிழ்ச்சியுடன் தொடருங்கள் அல்லது விரும்பிய வேலையை செய்ய பாருங்கள் //

100% உண்மை....
அன்புடன் அருணா

இராகவன் நைஜிரியா said...

மகிழ்ச்சி என்பது - மற்றவர்களை மகிழச்சி செய்து பார்ப்பதில்தான் இருக்கின்றது...

அதுதான் அளவு கடந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

இராகவன் நைஜிரியா said...

மேலும் மகிழ்ச்சி என்பது ஒரு உணர்வு... காதல் மாதிரி...

அதை உணரத்தான் முடியுமே தவிர, வார்த்தைகளால் விவரிக்க இயலாது

இராகவன் நைஜிரியா said...

// மனம் எப்பொழுதும் ஓடும் நீரோடை போல இருக்க வேண்டும். சோம்பிதிரிந்தால் தேங்கி நின்று விடும். //

Idle mind is Devil's Workshop.

இராகவன் நைஜிரியா said...

// பக்குவப்பட்ட மனிதனுக்கு ,எந்த ஒரு சூழ்நிலையையும் ஒன்றாகவே பாவிக்க தோன்றும்.ஆனால் இந்த பக்குவப்பட்ட மன நிலையை அடைய நிறைய சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் //

இடுக்கண் வருங்கால் நகுக என்று அதற்க்காகத்தான் சொன்னார்கள் போல் இருக்கின்றது.

Rajeswari said...

//இராகவன் நைஜிரியா said...
Idle mind is Devil's Workshop.
மேலும் மகிழ்ச்சி என்பது ஒரு உணர்வு... காதல் மாதிரி...மகிழ்ச்சி என்பது - மற்றவர்களை மகிழச்சி செய்து பார்ப்பதில்தான் இருக்கின்றது...//

நானும் வழிமொழிகிறேன் சார்

நட்புடன் ஜமால் said...

நல்ல அலசல் ...

அமுதா said...

/*மனதை ஒருவன் வைத்திருக்கும் நிலையை பொறுத்தே ,அவன் அடையும் சந்தோசம் இருக்கிறது*/
ஆமாம்.

/*செய்யும் வேலையை விரும்பி மகிழ்ச்சியுடன் தொடருங்கள் அல்லது விரும்பிய வேலையை செய்ய பாருங்கள் .மகிழ்ச்சியின் வேர் உங்கள் கண்களுக்கு தென்படும் .*/
கண்டிப்பா தென்படும்

ஆதவா said...

நல்ல அகழ்வாராய்வு!!! மகிழ்ச்சியின் வேர், ஒவ்வொரு குழந்தைத்தனத்தினுள்ளும் ஒளிந்திருக்கிறது.

தேவன் மாயம் said...

மனதை ஒருவன் வைத்திருக்கும் நிலையை பொறுத்தே ,அவன் அடையும் சந்தோசம் இருக்கிறது" என்றார் ஆபிரகாம் லிங்கன்///

ரொம்ப சரியா சொன்னார்

தேவன் மாயம் said...

உங்களில் எத்தனை பேர் நீங்கள் செய்யும் வேலையை விரும்பி செய்கிறீர்கள் ?ஏதோ செய்கிறோம்,மாதம் மாதம் பணம் கிடைக்கிறது என்றிருந்தால் மனம் மகிழ்ச்சியில் திளைக்க முடியாது. நாம் செய்யும் வேலை ,நம்மை பக்குவப்படுத்தவே என்பதை உணர வேண்டும்///

நல்ல ஆராய்வு!!!

தேவன் மாயம் said...

நல்ல பதிவு அருமை

பாலராஜன்கீதா said...

//"மனதை ஒருவன் வைத்திருக்கும் நிலையை பொறுத்தே ,அவன் அடையும் சந்தோசம் இருக்கிறது" என்றார் ஆபிரகாம் லிங்கன் .இது எவ்வளவு பெரிய உண்மை என்று உணரும்போதுதான் ,அதன் ஆழம் புரியும்,அதைத்தான் "மனதை பக்குவப்படுத்துதல் " என்பர் .//

ஜெமோ அவர்களின் இணையதளத்தில் http://jeyamohan.in/?p=1569 சுட்டியின் இடுகையை நீங்கள் வாசித்திருக்கலாம். எனினும் அதில் என்னைக் கவர்ந்த இரு வரிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்

மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மகிழ்ச்சிகள் கிடைக்கப்பெற்றவர்கள் அல்ல. மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டவர்கள்தான்.