அது ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் ...
சுதந்திர தின லீவிற்க்காக சொந்த ஊர் மதுரை சென்றிருந்தேன்.எவ்வளவுதான் சென்னையில் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் ,உறவுகளோடு சொந்த ஊரில் இருப்பதே ஒரு தனி சுகந்தாங்க ...! நேரத்திற்கு சுவையா அம்மா கையாள சாப்பிட்டு ,கோவில் குளம்னு சுத்திட்டு,லோக்கல் தியேட்டருக்கு போயி ,ஓடாத படத்த பாத்துட்டு ,............ம்ம்ம்ம் ...சரி விடுங்க ! சொல்ல வந்த விசயத்த விட்டுட்டு எங்கோ போயிட்டேன் ..லீவ் முடிஞ்சு சென்னை திரும்புறதுக்காக ,நிம்மதியா வரலாமுன்னு KPN ல AC கோச்ல பெர்த் புக் பண்ணியிருந்தேன்..அது என்னனு தெரியல, இங்கருந்து அங்க போகுரதுக்கும் சரி ,அங்க இருந்து இங்க வரதுக்கும் சரி , ரயிலில் டிக்கெட்டே கிடைக்க மாட்டேங்குது சாமி ...நான் புக் பண்ணுனா மட்டும் வெய்ட்டிங் லிஸ்ட்ல இருக்கா ..இல்ல என்னோட லாகின் நேமுக்கு மட்டும் டிக்கெட் தரமாட்டான்களோ என்னமோ தெரியல ..
எட்டரைக்கு பஸ் பெரியாரில் இருந்து கிளம்புச்சு ...கிளம்பும்போது நல்லா எலுமிச்சம்பழம்,பத்திலாம் வச்சு ,ஒரு பூசைய போட்டு தாம்ப்பா கிளப்புனாங்க ..வண்டில ஏறுனதுமே என்னோட பெர்த்ல போய் படுத்துக்கிட்டேன் ..ஒரு ரெண்டு நிமிஷம் போயிருக்கும் ,ஏதோ மிஸ் ஆகுற மாதிரியே இருந்தது ..எனக்கு மட்டும் இல்ல ..பஸ்ல இருந்த எல்லோருக்குமே ...என்னனு பாத்த பஸ்ல AC இல்ல ..இதுல இன்னொரு கொடுமை என்னன்னா கீழ இருக்கவங்களுக்காவது ஜன்னல் இருந்தது ..மேல பெர்த்ல முழுசா கண்ணாடி போட்டு மூடிவச்சுனுட்டானுங்க ..ஒரு அரைமணி நேரம் உள்ள உட்கார்ந்திருந்தோம் ,அடுத்த நாள் குளிக்கிற வேலை குறைஞ்சிருக்கும் . சரின்னு டிரைவர் அங்கிள் கிட்ட போய் ,அங்கிள் அங்கிள் AC வொர்க் ஆக மாட்டேன்குதுனு சொல்ல ,அது அப்படிதான்னு அவர் சொல்ல, அப்பறம் நாங்களே வண்டிய போலீஸ் நிலையத்திருக்கு விட்டோம்.வேற பஸ் அரேன்ச் பண்ணி தரச்சொல்லி கம்ப்ளைன் கொடுக்க ஆச்சு மணி 10 . ஆனா வண்டி இன்னும் மாட்டுதாவனியவே டச் பண்ணல ...இது சில பேர் வீட்டுக்கே போறோம்னு சொல்லி நடைய கட்டிடாங்க..என்னடா செய்யிறதுன்னு பேந்த பேந்த போலீஸ் ஸ்டேசன் வாசலிலே ஒரு மணிநேரமா வெயிட் பண்ணினோம் ..வந்ததுங்க ஒரு வண்டி (வேன் )..பழைய இய்யம் பித்தாளைக்கு பேரிச்சம்பழம் கணக்கா ! சரி ஜன்னல் இருக்கு ,காத்தாவது வரும்னு சொல்லி ஏறி உக்காந்து "போவோமா ஊர்கோலம்னு" கிளம்பினோம். மாட்டுத்தாவணி வந்து சேர மணி ஆச்சு 11.30....ஒன் போரவங்கல்லாம் போயிட்டு வாங்கன்னு டிரைவர் அங்கிள் சொன்னாரு..சரின்னு போயிட்டு வந்துட்டு வண்டில ஏறி உட்கார்ந்தா ,வண்டி கிளம்பவே இல்ல ..என்னனு விசாரிச்சா ,டிக்கெட்( புதுசாஆள் ) போட்டுட்டு தான் கிளப்புவங்கலாம்..சரி வண்டி கொஞ்சம் ப்ரியாத்தானே இருக்குன்னு வெயிட் பண்ணோம் . பண்ணோம் ....பண்ணோம் 12.15 வரை. அப்புறம் பொறுமை தாங்க முடியாம டிரைவர் அங்கிள் கிட்ட போய் கேட்டா ,போட்டாரு பாருங்க ஒரு குண்ட ! "வண்டி சென்னை போகதுன்னு" ..அடப்பாவிகளா AC பஸ்னு சொல்லி ஏமாத்தி , 450 ரூபாயை ஓட்ட வண்டிக்கு அழுது,எப்படியாவது அடுத்த நாள் வேலைக்கு போயீரலமுனு நெனச்சா ,இப்புடி கவுத்து விடுவாங்கன்னு நினைக்கவே இல்லேங்க,,காரணம் கேட்டா ,டிக்கெட் (ஆள் )ஏதும் புதுசா ஏறல ,அதான் என்றார் பாருங்க ...காதுக்குள்ள சொஈங் ......சத்தந்தாங்க கேட்டுச்சு ..."சரி நாங்க எப்படி போறது?" என்று கேட்டா, "வேற வண்டி புடிச்சு போங்கன்னு" சொல்லிடாரு ரொம்ப கூலா ...உங்க மேல கேஸ் போடுவோம் அது இதுனு சொல்லியும் ம்ம்ஹும்...எதும் நடக்கல ..
ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணி இருந்ததாலே டிக்கெட் காசும் கிடைக்கல ..கையில அப்பா அம்மா ஆசிர்வாதம் பண்ணி கொடுத்த 200 ரூபாய்தான் இருந்தது. (நமகெல்லாம் டெபிட் கார்டு தானே ஸ்டைல் ) ஒரே குழப்பம் வீட்டுக்கே போய்டுவோமா அல்லது எதாவது பஸ்ல அடுச்சு புதுசு போய்டலாம்னு ..அப்புறம் தெய்வமா ஒரு டெம்போ வேன் டெலிவரிக்காக (TCS )சென்னை புறப்பட்டுச்சு ..அவங்ககிட்ட பேசி ,வண்டில ஏறி உட்கார்ந்தேன் ..சே எப்படிலாம் நிம்மதியா வரணும்னு நினைச்சு AC ல புக் பண்ணி இப்போ இப்படி டிராவல் பன்ன்றோமேனு நெனச்சுகிட்டே தூங்கிட்டேன். சும்மா சொல்லக்கூடாதுங்க .சரியா காலை 10 மணிக்கெல்லாம் சென்னை வந்துட்டேன்,, அப்பறம் என்ன நடந்திருக்குமுன்னு உங்களுக்கே தெரியுமே ..ஒரு ஹாப் டே லீவ் போட்டுட்டு நிம்மதியா தூங்கினேன் ..
15 comments:
யெக்கேவ்வ் பத்தி பிறிச்சி போட்டு எழுதுங்க... நன்னா எழுதி இருக்கிங்க.... பத்தி இல்லாம பாக்க மலைப்பா இருக்கு... கலக்குங்க....
நீங்க ஏறி வந்த வண்டிதாங்க அங்க அங்க நின்னு வந்துடுச்சு ஆனா உங்க எழுத்து ச்சும்மா சர்ர்ர்ர்ன்னு நிக்காம வந்துடுச்சு.. நல்லா எழுதுறீங்க.. இன்னும் எழுதுங்க. வாழ்த்துக்கள்
KPN பஸ் கொஞ்சம் சரியாக செய்வார்கள் என்று பெயர். அவர்களே இப்படின்னா.. ஒன்னும் செய்வதற்கு இல்ல.
திரு. விக்னேஸ்வரன் அவர்கள் சொல்லிய மாதிரி பத்தி பிரித்து எழுதினால் படிப்பதற்கு இன்னும் வசதியாக இருக்கும்.
இந்த word verification - ஐ எடுத்து விடுங்க.. அதுக்கு பதிலா, கமெண்ட் மாடரேஷன் போட்டுகுங்க..
தமிழில் தட்டச்சுவிட்டு, ஆங்கிலம் மாற்றி செய்வது ரொம்ப லொல்ளுங்க...
the credit goes to K.N.Nehru
//VIKNESHWARAN said...
யெக்கேவ்வ் பத்தி பிறிச்சி போட்டு எழுதுங்க... நன்னா எழுதி இருக்கிங்க.... பத்தி இல்லாம பாக்க மலைப்பா இருக்கு... கலக்குங்க....//
வருகைக்கு நன்றி விக்னேஸ்வரன் அவர்களே ..இனி அடுத்த பதிவுகள்ல பத்திய பிரிச்சிடலாம்
//மடல்காரன்_MadalKaran said... நீங்க ஏறி வந்த வண்டிதாங்க அங்க அங்க நின்னு வந்துடுச்சு ஆனா உங்க எழுத்து ச்சும்மா சர்ர்ர்ர்ன்னு நிக்காம வந்துடுச்சு.. நல்லா எழுதுறீங்க.. இன்னும் எழுதுங்க. வாழ்த்துக்கள்///
மடல்காரரின் வருகைக்கிற்கு இந்த ரசனைக்காரியின் நன்றிகள் பல பல.உங்கள் வரவை எப்பொழுதும் விரும்பும் -ரசனைக்காரி
//இராகவன் நைஜிரியா said...
இந்த word verification - ஐ எடுத்து விடுங்க.. அதுக்கு பதிலா, கமெண்ட் மாடரேஷன் போட்டுகுங்க..
தமிழில் தட்டச்சுவிட்டு, ஆங்கிலம் மாற்றி செய்வது ரொம்ப லொல்ளுங்க//
ராகவன் சார் ...உங்கள் வருகை என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது ....
நீங்க சொல்லியிருக்கிற சிற்சில கரைக்சனுக்கு ரொம்ப நன்றி சார் ...அடுத்த பதிவின் போது இந்த கஷ்டம் இருக்காது என்று நினைக்கிறேன் ...அடிக்கடி வாங்க சார்.. உங்கள் ஆதரவை என்றும் நாடும் ரசனைக்காரி
//nellai ram said...the credit goes to K.N.Nehru///
வருகைக்கு நன்றி நெல்லை ராம் அவர்களே ......
அமைச்சர்கிட்ட இருந்து போன் வர வச்சுட்டீங்களே (ஹா ஹா ஹா)
உங்கள் அனுபவம் நிதர்சனமே.
உங்கள் ப்ரோபைல் படம் கொள்ளை அழகு :-)).
//Pattaampoochi said...உங்கள் அனுபவம் நிதர்சனமே.
உங்கள் ப்ரோபைல் படம் கொள்ளை அழகு :-)).///
வருகைக்கு மிகவும் நன்றி பட்டாம்பூச்சி மேடம்! அடிக்கடி பறந்து இந்த பக்கம் வாங்க
நன்னா எழுதி இருக்கேள்
நல்லாத்தான் இருக்குது. அப்ப அடுத்த முறை ஊருக்கு போயிட்டு SETC அனுபுவத்தை எழுதுங்க.
\\Rajeswari said...
nellai ram said...the credit goes to K.N.நேரு
வருகைக்கு நன்றி நெல்லை ராம் அவர்களே ......
அமைச்சர்கிட்ட இருந்து போன் வர வச்சுட்டீங்களே (ஹா ஹா ஹா)\\
K.P.N க்கும் K.N.நேருவுக்கும் என்னங்க சம்மந்தம்?
வணக்கம் - கேபிஎன் ஆம்னி பஸ்களில் பேர் பெற்றது - இது மாதிரி சம்பவங்கள் சாதாரணமாக நடப்பதில்லை -
நிற்க, மதுரையா - அடுத்த தடவை வரும் போது சந்திக்கலாமே - நான் மதுரையில் தான் இருக்கிறேன்.
http://cheenakay.blogspot.com
Hi rajeshwari,
ungal anubavan arumaiyaga elutha pattirundhathu thodarattum ungal padaippukal
vazhthukkal
Post a Comment