அனைவருக்கும் இந்த ரசனைக்காரியின் வணக்கங்கள்! ப்ளாகில் எழுவது என்பது இவளுக்கு புதிதல்ல ! ஆனால் ஒவ்வொரு தடவையும் எழுதும்போதும் ,ஒரு குழந்தை ஜனிக்கும் நேரத்தில் ,தாய் உணர்கின்ற பதட்டமும் எதிர்பார்ப்பும் என்னுள் ....!
ஒவ்வொரு மனிதனும் ,எவ்வளவு பெரிய துயரத்தில் இருந்தாலும் ,ஏதாவது ஒரு தருணத்தில் கண்டிப்பாக எதோ ஒன்று அவன் மனதை இதமாய் வருடிச்செல்லும் .இனிமையை அவனுள் பிரசவிக்கும்.. ரயில் பயணத்தின் போது , பிச்சை எடுப்பவர் பாடும் பாடல்...
மழை நேரங்களில் ரோட்டோரக்கடையில் ஒதுங்கி குடிக்கும் தேநீர் ...
தூங்கச்செல்லும் வேளையில் கேட்கும் மெல்லிசை பாடல்கள்..
ஜாக்கிங் போகும்போது உணரும் அதிகாலை ,
அப்பப்பா! எத்தனை விஷயங்கள் இருக்கிறது நாம் ரசிப்பதற்கு!
வார இறுதி நாட்களில் அருகில் இருக்கும் பார்க்குகளுக்கு சென்று பாருங்கள் ....எத்தனை குழந்தைகள் மகிழ்ச்சியாக ஆட்டம் போட்டு விளையாடி சுற்றி இருப்பவர்களையும் சந்தோசப்படுத்தி.. .!
நான் எப்போதெல்லாம் கஷ்டமான மனநிலையில் இருப்பேனோ ,அப்போதெல்லாம் இசை கேட்க ,(குறிப்பாக இளையராஜா சாரின் இசையில் வந்த பாடல்கள் ) ஆரம்பித்து விடுவேன் ..மனம் தெளிவு பெற்று விடும் ..
நீங்களும் வாருங்கள் வாழ்வை ரசிப்போம்..
ரசனைகள் மாறுபடலாம் ....
ஆனால் ரசிப்புத்தன்மை குறையக்கூடாது ..
ஆகவேநம் வாழ்கையின் ஒவ்வொரு துளியையும் முடிந்தவரை ரசிப்போம்
அன்புடன் உங்கள் ரசனைக்காரி!
5 comments:
வாங்கோ... வாங்கோ...
பார்வைகளைவிட பாதங்கள் அதிகம்
மூளையைவிட மனதில் அதிகம்
உங்கள் வரிகளில் உணர்கிறேன்
கவிதைக்காரன்
//அசோக் said...
பார்வைகளைவிட பாதங்கள் அதிகம்
மூளையைவிட மனதில் அதிகம்
உங்கள் வரிகளில் உணர்கிறே//
உதிரும் சிறகுகளின்..
உதிர்க்கமுடியாத...
உணர்வின்
பசுமையை...
உணர்த்த வந்தேன் ..!
வருகைக்கு நன்றி அசோக்
வாங்க ரசனைக்காரி!!! நீங்க தமிழ்மணத்தில இணைந்து பயன் பெறலாமே!!!
உங்க பேர்லயே நீங்க ரசனையானவருன்னு தெரியுது!!!
வரவேற்புகள்
வாழ்த்துகள்.
எல்லா இடுகைகளையும் படித்துவிட்டு பிறகு வருகிறேன்.
Post a Comment