Wednesday, December 9, 2009

க.மு.....க.பி....

கி.மு..கி.பி.. தெரியும். அது என்ன க.மு..க.பி..என்று யோசித்து பதட்டப்பட வேண்டாம்.மேலே தொடர்ந்து படிங்க..புரியும்.

சென்ற வாரத்தில் ஒருநாள்,என் தோழிகளை சந்திக்க,நான் முன்பு தங்கியிருந்த விடுதிக்கு சென்றிருந்தேன்.மூன்று மாதங்களுக்கு முன்பு நான் வெளியே கிளம்பியதற்கும்,அன்று நான் விடுதிக்கு கிளம்பியதற்கும் வேறுபாடு இருக்கிறதே...அப்பப்பா வித்தியாசங்கள் 6 என்ன அறுபதையும் தொடும்.அதனாலதான் நிறைய பேருக்கு கல்யாணம்னா அலர்ஜியாகிடுது போல..
இப்போ தலைப்பு புரியும்னு நினைக்கிறேன்.இன்னும் புரியலைனா, உங்களுக்கு வெள்ளேந்தி மனசுதான் போங்க..

சரி விசயத்திற்கு வர்ரேன்.க.மு எல்லாம், ஒரு இடத்திற்கு கிளம்புகிறேன் என்றால், நான் என்னை மட்டுமே கவனித்து அழகு படுத்தி கொண்டு, ஒரு பில்டப் போட கிளம்புவேன்.இருக்கும் அறையை பற்றிய அக்கறை சிறிதும் இருக்காது.போட்டது போட்ட மாதிரியே கிடக்கும்.வெளியே போய்விட்டு வந்துதான் அறையை ஒழுங்குபடுத்துவேன்(அட..நம்புங்கப்பா!!)

ஆனா, இப்ப அப்படி இருக்க முடியுதா என்ன..ஜன்னல் சாத்தியாச்சா?,கேஸ் ஆஃப் பண்ணியாச்சா?,பைப் எல்லாம் சரியா பூட்டி இருக்கா?,காயப்போட்ட துணிய எடுத்தாச்சா..வெளில போயிட்டு வந்ததும் சாப்பிடுறதுக்கு செஞ்சாச்சா? ..இப்படி நிறைய..(இதெல்லாம் தங்கராசாக்கல்லாம் யோசிக்கமாட்டாங்க போல)

அந்தா இந்தான்னு யோசிச்சு ஒரு 11 மணி போல விடுதிக்கு கிளம்புனேன்.தங்கராசுக்கும் ஒரு மீட்டிங் இருந்ததால,மதியம் வெளிலேயே சாப்பிட்டுகிறதா சொல்லி, காலைல கிளம்பிட்டாப்புல.”ரொம்ப சந்தோசம் மதிய சமையல் செய்யவேண்டாம்” அப்படின்னு பஜ்ஜி மட்டும் செய்து எடுத்துக்கொண்டு, விடுதிக்குள் போய் காலை வைக்கிறேன் ஒரு போன்கால்.வேற யாரு தங்கராசுதான்.

“எங்கப்பா இருக்குற”

“இப்பதான் ஹாஸ்டலுக்குள்ள நுழையிறேன்.ஏங்க என்ன விசயம்?”

“ஒண்ணுமில்லை..சரி..நான் அப்புறம் கூப்புடுறேன்”

அடப்பாவிமக்கா..அப்புறம் கூப்புடுறேன்னு சொல்றதுக்கு ஒரு போன்காலா...
சரின்னு வார்டன் கிட்ட பெர்மிசன் வாங்கிட்டு,என்னுடைய பழைய அறையை நோக்கி மெல்ல நகர்ந்தேன்.இந்த இடத்துல “ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..” பாட்ட நீங்க ஹம் பண்ணிக்கணும்..

அது என்னவோ தெரியல,என்ன மாயமோ தெரியல, ஃப்ரண்ட்ஸ்ஸ பார்த்தா மட்டும் அரட்டை அருவி மாதிரி கொட்டுது.இந்த “கடலை”,”மொக்கை” போன்ற வார்த்தைகளுக்கான அர்த்தங்களை எல்லாம் அன்றுதான்(ஹி ஹி அன்றும்னே வச்சுக்கோங்க)மெய்பித்தோம் ,அரட்டை மூலமாக.சிறிது நேரம் கழித்து, படம் ஏதாவது பார்க்கலாம் என்று முடிவு செய்து “மின்னலே” போட்டுவிட்டோம் லேப்டாப்பில்.


மறுபடியும் போன்.மறுபடியும் தங்கராசு.
“என்னங்க?”

“மீட்டிங் முடிஞ்சிடுச்சு ..நான் வந்துகிட்டே இருக்கேன்.உன்ன ஹாஸ்டல்ல வந்து பிக்கப் பண்ணிக்கரட்டா?”

“இல்ல..நான் அப்புறமா வர்ரேன் .நீங்க வீட்டுக்கு போயிடுங்க”

“சரி..வீட்டுல சாப்பாடு இருக்குல லஞ்சுக்கு?”

“அய்யோ .இல்லியே..வெளில சாப்பிட்டுகிறதா சொன்னீங்க”

“ப்ளான் மாறிடுச்சு.சரி நான் செய்து சாப்பிட்டுக்றேன்..நீ அங்க மறக்காம சாப்பிட்டுக்கோ...பை”

இதுக்கு அப்புறமும் படம் பார்க்க முடியுமா சொல்லுங்க..அவசர அவசரமாய் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானேன்.கண்டிப்பாக சாப்பிட்டுதான் போகணும்னு தோழிகள் கூற(பழி வாங்கனும்னா வேற வழியே தெரியல போல),வேறு வழி இன்றி சாப்பிட ஆரம்பித்தேன்.கடவுளே...போஸ்டருக்கு ஒட்டுற மாதிரி இருந்த வெண்டைக்காய் மோர்க்கொழம்பை ஒரு கவளம் கூட வாயில் வைக்க முடியவில்லை.கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்து ,அனைவருக்கும் ஒரு பை சொல்லிவிட்டு,விடுவிடு வென்று வீட்டிற்கு வந்தால் ..ஆஹா கம கம வென்று ஆம்லெட் வாசம்.தயிர் தாளித்து, ஆனியன் போட்டு ஆம்லெட் செய்து, சாப்பிட தயாராகிக்கொண்டிருந்தார் தங்கு.ஆயிரம் தான் சொல்லுங்க..வெளில எவ்வளவோ சாப்பிட்டாலும், வீட்டுல சாப்பிடுற சாதம் ஒரு தனி ருசிதான் போங்க(ஹி ஹி..நாம சமைக்காம இருந்தா!)

34 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

ரசனை ரொம்ப நல்லாத்தான் இருக்கு!

ஆனா, நீங்க வால்பையனுக்கு ஜோசியம் சொன்ன மாதிரி, நம்ம ரசனைக்கேத்த மாதிரி எல்லாமே அமைஞ்சுடும்னு சொல்ல முடியாது!

ஆக நல்ல ரசனை என்பது கையில் கிடைத்த கிளாக்கை, எங்கோ பழுத்துத் தொங்குகிற பலாக்காயை விட மேல்!

சரிதானா!

Rajeswari said...

கிருஷ்ணமூர்த்தி said...
ரசனை ரொம்ப நல்லாத்தான் இருக்கு!

ஆனா, நீங்க வால்பையனுக்கு ஜோசியம் சொன்ன மாதிரி, நம்ம ரசனைக்கேத்த மாதிரி எல்லாமே அமைஞ்சுடும்னு சொல்ல முடியாது!

ஆக நல்ல ரசனை என்பது கையில் கிடைத்த கிளாக்கை, எங்கோ பழுத்துத் தொங்குகிற பலாக்காயை விட மேல்!

சரிதானா!///

எதாவது திட்டி இருக்கீங்களோ..???ஒண்ணும் புரியலையே..

ஜோசப் பால்ராஜ் said...

சென்னையில தண்ணி கஷ்டம்னு கேள்வி பட்ருக்கேன், ஆனா பைப்ப எல்லாம் பூட்டு போட்டு பூட்டி வைக்கிற அளவுக்கா கஷ்டம் இருக்கு?

ஜோசப் பால்ராஜ் said...

அப்பறம் உங்களுக்கு ஒழுங்கா ஆம்லேட் போட்டுக்குடுத்தாரா ?

( ஆனியன் எல்லாம் போட்டாத்தான் அது ஆம்லெட்)

தயிர் தாளிச்சு, ஆம்லெட் போட்டு சாப்பிட்டாரா? பரவாயில்லங்க, உங்க வீட்டுக்காரருக்கு சமையல் எல்லாம் பயங்கரமா தெரியும் போல இருக்கு.

அப்பாவி முரு said...

//நாம சமைக்காம இருந்தா//

ஆமா, சுவையா இருந்தாலும், ஏதாவதொரு குறையைச் சொல்லி எழும்போது இருக்கும் சுகமே, சுகம்.

அப்பாவி முரு said...

//எதாவது திட்டி இருக்கீங்களோ..???ஒண்ணும் புரியலையே//

அய்யா திட்டவெல்லாம் இல்லை., களாக்காயையும் ரசிக்கும் மனநிலை வேண்டுமென வேண்டுகிறார். அவ்வளவே.

வால்பையன் said...

//.போஸ்டருக்கு ஒட்டுற மாதிரி இருந்த வெண்டைக்காய் மோர்க்கொழம்பை ஒரு கவளம் கூட வாயில் வைக்க முடியவில்லை.//

உங்க சமையலை பற்றி பதிவு வராமலாப் போயிரும்!

VISA said...

நல்லா எழுதியிருக்கீங்க....

அ.மு.செய்யது said...

// “ப்ளான் மாறிடுச்சு.சரி நான் செய்து சாப்பிட்டுக்றேன்..நீ அங்க மறக்காம சாப்பிட்டுக்கோ...பை” //

என்ன தவம் செய்தனை...ய‌சோதா ஆஆஆ...

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப நல்லா சமைக்கின்றார் போலிருக்கு..

நட்புடன் ஜமால் said...

ஏனுங்க நீங்க இம்பூட்டு நல்லவங்களா

\\வீட்டுல சாப்பிடுற சாதம் ஒரு தனி ருசிதான் போங்க(ஹி ஹி..நாம சமைக்காம இருந்தா!)\\

நட்புடன் ஜமால் said...

ஆனாலும் தங்கராசாவை பற்றி எழுதியிருக்கீங்க.

இதுக்கு எதிர்பதிவு நிச்சியம் வரும், வரனும் ...

sathishsangkavi.blogspot.com said...

ஆபீஸ்க்கும் போகனும், வீட்லயும் சமைக்கனும் பாவங்க தங்கராசு....

ஆனா நீங்க கொடுத்துவெச்சவங்க.......
(சமையல் செய்யம் கணவன் கிடைத்தால் அணைத்து பெண்களும் பாக்கியசாலிதான்)

என்னங்க ரசனைக்காரி சரியா?..........

Rajeswari said...

நன்றி

கிருஷ்ணமூர்த்தி சார்,

சிபி,

பால்ராஜ்,

வால்பையன்,

முரு,

விசா,

செய்யது,

ராகவன் அண்ணா,

ஜமால்.

Rajeswari said...

// Sangkavi said...
ஆபீஸ்க்கும் போகனும், வீட்லயும் சமைக்கனும் பாவங்க தங்கராசு....

ஆனா நீங்க கொடுத்துவெச்சவங்க.......
(சமையல் செய்யம் கணவன் கிடைத்தால் அணைத்து பெண்களும் பாக்கியசாலிதான்)

என்னங்க ரசனைக்காரி சரியா?..........

December 9, 2009 8:47 PM//

இது ஒரு நாள் நடந்ததுங்க...அதனால தான் சந்தோசமா எழுதியிருக்கேன்..தினமும் நடந்தா நல்லாவா இருக்கும்.எங்க வூட்டுல நாந்தாங்க சமையல் ....

malar said...

பதிவு நல்ல இருந்தது .


'''ஆஹா கம கம வென்று ஆம்லெட் வாசம்.தயிர் தாளித்து, ஆனியன் போட்டு ஆம்லெட் செய்து, ''''

plz அந்த குறிப்பு சொல்லுங்களேன்

அப்துல்மாலிக் said...

//சரி விசயத்திற்கு வர்ரேன்.க.மு எல்லாம், ஒரு இடத்திற்கு கிளம்புகிறேன் என்றால், நான் என்னை மட்டுமே கவனித்து அழகு படுத்தி கொண்டு//

இப்போ இரண்டு குழந்தை இருக்கிறதா கற்பனை பண்ணிப்பாருங்க, எல்லோருக்கும் ஒப்பனைசெய்து கிளம்புவதர்குள்...........................

அப்துல்மாலிக் said...

//..(இதெல்லாம் தங்கராசாக்கல்லாம் யோசிக்கமாட்டாங்க போல)
//

நாங்க செய்யமாட்டோம், ஆனால் ஞாபகப்படுத்துவோம்லே...

Unknown said...

//ஆஹா கம கம வென்று ஆம்லெட் வாசம்.தயிர் தாளித்து, ஆனியன் போட்டு ஆம்லெட் செய்து, சாப்பிட தயாராகிக்கொண்டிருந்தார் தங்கு.//

அன்னிக்கு ஒரு நாள் மட்டும் தான..,

எம்.எம்.அப்துல்லா said...

:)

எம்.எம்.அப்துல்லா said...

:)

அண்ணாமலையான் said...

”படம் ஏதாவது பார்க்கலாம் என்று முடிவு செய்து “மின்னலே” போட்டுவிட்டோம் லேப்டாப்பில்.” உண்மையிலே மாதவன சைட் அடிக்கத்தானே மின்னலே போட்டீங்க? (எத்தனாவது தடவையா பாக்குறீங்க?)

கார்க்கிபவா said...

:))

creativemani said...

அடடா... அந்த தங்கராசா அவர்தான்னு நேத்தே தெரியாம போச்சே..
அவருக்கு வாழ்த்துக்கள்... :)

ஹேமா said...

//ஆஹா கம கம வென்று ஆம்லெட் வாசம்.தயிர் தாளித்து, ஆனியன் போட்டு ஆம்லெட் செய்து, //

இப்போதான் வேலையால வந்திருக்கேன்.பசிக்குது.ஆம்லெட்,
தயிர்சாதம் இந்தா இப்பவே ...!

butterfly Surya said...

நல்ல ரசனைதான் சந்தோஷமாக வாழ வைக்கும்.

தங்கராசுக்கு வாழ்த்துகள்.

பித்தனின் வாக்கு said...

எங்க வூட்டுல நாந்தாங்க சமையல் ....
வழக்கம் போல ஒரு கலகல பதிவு. உங்க வீட்டுல நீங்கதான் சமையலா. நல்லவேளை அவரு பிளாக் எழுதலை. எழுதிருந்தார்னா டயட் எப்படி இருப்பது என்று பதிவு போட்டு இருப்பார். இருந்தாலும் அவருக்கு பொறுமை அதிகம்.தினமும் கஷ்டப்பட்டு சாப்பிடுகிறார் அல்லவா. நன்றி.

saravan said...

பாவம் வெறும் தயிர் சாதத்திற்கு ஆம்லெட் போட்டு சாபிட்டுகிட்டு இருந்தார்னு தானே சொல்ல வந்திங்க !!

நல்ல தான் எழுதி இருக்கீங்க !ஏன் எல்லோரும் கிண்டல் பண்றாங்க ??

Ms.Chitchat said...

Romba interesting a irundhuthu, enjoy panninein. innum nirayya ezhudhanum neenga. ungalai follow panrein :):)

Chitchat
http://chitchatcrossroads.blogspot.com/

இராஜ ப்ரியன் said...

//சரி நான் செய்து சாப்பிட்டுக்றேன்..நீ அங்க மறக்காம சாப்பிட்டுக்கோ ...பை”//
அடடா என்ன ஒரு மனிதர்...! உங்களுக்கு வாழ்த்துகள் மேடம் ................ சாரை பாத்திரமா பாத்துக்குங்க நீங்க ரொம்ப அதிஷ்டம் பண்ணி இருக்கீங்க இல்லறம் நல்லறமாக எப்பொழுதும் சிறக்கட்டும் .....

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

Anonymous said...

ரொம்ப காமெடி பண்ணுவிங்களோ...இல்ல ரம்பமா...
உறவுகளின் பிடிப்பு படிக்க சுகமாகவே இருக்கு...

Sakthi said...
This comment has been removed by a blog administrator.
கண்ணகி said...

:}}-