Sunday, December 6, 2009

டிசம்பர் 7- கொடிநாள்- ஒரு பார்வை...

டிசம்பர்-7 , கொடிநாள். இந்திய மக்களின் நலனுக்காக, நாட்டின் எல்லையில் காவல் புரியும், ஆயுதம் தாங்கிய முப்படை வீரர்களுக்குமான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கும் நாள்.

சுதந்திர இந்தியாவிலே, 1949 ஆம் வருடம் ஆகஸ்ட் திங்கள் 28 ஆம் தேதி, இந்திய தற்காப்பு பிரிவின் கீழ் , ஒரு கமிட்டி அமையப்பெற்றது. அக்கமிட்டியின் கொள்கைப்படி, நாட்டிற்கு சேவை புரியும் முப்படை வீரர்களுக்கு , அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் பொருட்டும், அவர்களின் சேவையை பாராட்டி நன்றி தெரிவிக்கும் பொருட்டும், ஆண்டுதோறும் டிசம்பர் 7 ஆம் தேதி , பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி இக்கொடிநாள் கொண்டாடப்படுகிறது.

கொடியின் வரலாற்றை நினைவில் நிறுத்தவும், முக்கியமாக நாட்டின் எல்லையை காக்கும் படை வீரர்களின் குடும்பங்களை, பாதுகாப்பது நம் கடமையும் பொறுப்பும் ஆகும், என்பதை பொதுமக்களிடம் வலியுறுத்தவுமே, அவர்களிடம் இருந்து நிதி திரட்டும் முறை உருவாக்கப்பட்டது.

இந்நிதியில் இருந்து வரும் பணத்தை, போர்க்கள புனர்வாழ்விற்கும், படைவீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், ஓய்வுபெற்ற வீரர்களின் ஊதியத்திற்கும், உபயோகப்படுத்தப்படுகிறது.

நாடெங்கும் திரட்டப்படும் நிதியை, நிர்வகிக்கும் பொறுப்பு KSB(Kendriya Sainik Board) ஐ சார்ந்ததாகும். பல தொண்டு நிறுவனங்களும் , பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளனர். டிசம்பர் 7, நாமும் நிதியளிப்போம் நம்மை பாதுகாக்கும் நம் படை வீரர்களுக்காகவும் ,அவர்களின் குடும்பங்களுக்காகவும்.(மறக்காம கொடிய வாங்கிக்கோங்க...)


9 comments:

நட்புடன் ஜமால் said...

அவசியம் இந்தியாவில் இருக்கையில் வாங்குகிறேன் ...

-----------

நல்ல பகிர்வு.

ஜோசப் பால்ராஜ் said...

ராணுவத்தினரும், பாதுகாப்பு படையினரும் போர் காலாங்களில் மட்டுமே எல்லோராலும் கொண்டாடப்படுவார்கள். கார்கில் போர் நடந்தப்ப, எல்லா போர்வீரர்களையும் கொண்டாடுனோம், ஆனா அவங்க என்ன போர்காலங்களில் மட்டுமா உழைக்கிறாங்க? எத்தனை பேரு அவங்கள சாதாரண நாட்கள்ல நினைக்கிறோம்?
ஏதோ ஏதோ நாட்களுக்கு எத்தனையோ பதிவுகள் வருது. ஆனா கொடிநாளுக்கு எனக்கு தெரிஞ்சு உங்க ஒரே ஒரு பதிவு தான் வந்திருக்கு.
உங்க நல்ல முயற்சிய மனமார பாராட்டுகிறேன்.

SUFFIX said...

பள்ளி நாட்களில் கொடி நாளுக்கு இது போல நிதி கொடுத்து இருக்கின்றோம். நண்பர் ஜமால் கூறியது போல இந்தியாவில் இருக்கும்போது இது போன்ற வாய்ப்பு வந்தால் நிச்சயம் பகிர்வோம். தகவலுக்கு நன்றி.

வெற்றி-[க்]-கதிரவன் said...

வடகிழக்கு மாநிலங்களில் தேசத்தின் பெருமையை இரட்டிப்பாக நிலைநாட்டும் இராணுவ வீரர்களுக்கும் சேத்துத்தானே இந்த நிதி ?

S.A. நவாஸுதீன் said...

14 வருட வெளிநாடு வாழ்க்கையில் மறந்தே போய்விட்டது. நல்ல பகிர்வுக்கு நன்றி.

//நட்புடன் ஜமால் said...
அவசியம் இந்தியாவில் இருக்கையில் வாங்குகிறேன் ...//

நானும்.

Unknown said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்..,

அப்துல்மாலிக் said...

பள்ளி/கல்லூரி நாட்களில் நிறைய கொடுத்திருக்கிறேன்.. உள்ளூரில் இருப்பவர்களை வாங்க சொல்லி ஞாபகப்படுத்தினேன், இப்போதைக்கு இதைதான் செய்ய முடிந்தது

malar said...

நல்ல நினை ஊட்டல்.நல்ல பதிவு .இந்தியாவில் இருக்கும்போது இது போன்ற வாய்ப்பு வந்தால் நிச்சயம் பகிர்வோம். தகவலுக்கு நன்றி.

malarvizhi said...

நல்ல பகிர்வு.