என் பேரு அபிராமி.எங்க அம்மாவும் அப்பாவும் என்னய அபிராமின்னுதான் கூப்பிடுவாங்க. ஆனா எனக்கு எங்க மீனாட்சி அக்கா கூப்பிடுறதுதான் பிடிக்கும்."அபிக்குட்டி" ,"அபிசெல்லம்" ன்னு அடிக்கடி கொஞ்சுவா.எங்க அக்கா ,உயரமா கொஞ்சம் ஒல்லியா ,ரொம்ப அழகா இருப்பா.பல்லெல்லாம் அடுக்கிவச்ச மாதிரி இருக்கும்.எப்பவும் பாவாடை சட்டைதான் போடுவா.ஏதாவது விசேஷத்துக்கு போனா மட்டும் மஞ்ச தாவணியும் , சிவப்பு பூப்போட்ட பாவாடையும் சட்டையும் போடுவா.அவளுக்கு என்னைய விட பலமடங்கு முடி.இடுப்புக்கு கீழ்தான் தொங்கும்.அவ கண்ணு ரெண்டும் பெரிசா மீனு மாதிரி இருக்கும்.அவ கண்ணுக்காகத்தான் "மீனாட்சி" னு பேர் வச்சேன்னு அப்பா ,வீட்டுக்கு வர்றவங்ககிட்டஎல்லாம் சொல்லுவாரு.
எனக்கு எங்க அக்காவ ரொம்ப பிடிக்கும்தான்.ஆனா சிலநேரம் அவளோட சண்டை போடத்தான் ரொம்ப பிடிக்கும்.இப்படித்தான் ஒரு நாளு,எங்க வீட்டு பக்கமா இருக்குர வேப்பமரத்துல ஊஞ்சல் கட்டி ஆடிக்கிட்டு இருந்தோம்.என்னைய வச்சு கொஞ்ச நேரம்தான் ஆட்டினா.அப்பறம் அவளே ரொம்ப நேரம் விளையாடினா. எனக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு.அப்பாகிட்ட சொல்றேன்னு அவகிட்ட டூ விட்டுட்டு அங்க இருந்து நடக்க ஆரம்பிச்சுட்டேன்.எங்க இருந்து வந்ததுனே தெரியல, ஒரு வெள்ள கலர் கோவில்மாடு என் முன்னால ஓடி வந்துட்டு இருந்துச்சு.எனக்கு பயம் பயமா வந்துடுச்சு.”ஓ” னு அழுதிட்டேன்.எங்க அக்காதான் ஊஞ்சல்ல இருந்து குதிச்சு ஓடிவந்து, என்னைய தூக்கிட்டு வளைஞ்சு வளைஞ்சு ஓடி வீட்டுக்கு வந்துட்டா.
வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம்தான் தெரிஞ்சது அவ உள்ளங்கையிலயும்,கால் மொட்டிலயும் சிராய்ப்பு.பாவம் ஊஞ்சல்ல இருந்து கீழ விழுந்துட்டால அதான்.உடனே அவள கட்டிக்கிட்டேன்.எனக்கு எங்க அக்கானா ரொம்ப பிடிக்கும்.சில நாள்லாம், என்னய தொட்டில போட்டு தாலாட்டியிருக்கா.என் வெயிட்டு தாங்காம ரெண்டு நாள்லேயெ அம்மாவோட சேல கிழிஞ்சிடும். அதனால அம்மாகிட்ட திட்டு எல்லாம் வாங்கிருக்கா. நீங்களே சொல்லுங்க,யாராவது ரெண்டாப்பு படிக்கிர புள்ளய தொட்டில்ல போட்டு ஆட்டுவாங்களா?.ஆனா,எனக்கு பிடிக்கும்னு என்ன போட்டு ஆட்டுவா.அவ நல்லவ.
எங்க அப்பா படுக்குற ஈஸி சேருல படுத்துக்குறதுன்னா,அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.அதுலயும் பச்ச கலர் துணிதான் சேருல கட்டியிருக்கனும்னு, அப்பாகிட்ட அடம் பிடிச்சு ரெண்டு உறை வாங்கிட்டா.வாரத்துக்கு ஒருதடவை ,அத துவைச்சும் மாத்திடுவா.அவ ஈஸி சேருல படுத்துருக்கும் போது, நான் போனேனா என்னைய அதுல படுக்க வச்சிட்டு,கீழே உட்கார்ந்துகிட்டு,நிறைய கத சொல்லுவா.எனக்காக,பக்கத்து வீட்டு ரமேஷோட பாலமித்திரா, அம்புலிமாமால்லாம் படிச்சு கத சொல்லிருக்கா.
கடைக்கெல்லாம் போனா,எனக்கு பிடிச்ச தேன்மிட்டாயெல்லாம் வாங்கித்தருவா.எனக்கு காது குத்துன அன்னிக்கு என்னய ஃபுல்லா தூக்கி வச்சுகிட்டே திரிஞ்சா.நான் ஸ்கூலுக்கு போகும் போது,சைடு வகிடெடுத்து,அழகா படிய சீவி,பச்ச கலர் ரிப்பன் கட்டிவிட்டு,ஏதாவது ஒரு பூ வச்சு விடுவா.
ஒருதடவை,எங்க அப்பா அவரோட ஃப்ரண்ட்ஸோட ராமேஸ்வரம் போனாரு.என்னையும் கூப்பிட்டு போயிருந்தாரு.பெரிய பிள்ளைங்கரதால, அக்காவ வரவேணாமுனுட்டாரு.எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதனால, ராமேஸ்வரத்துல இருந்து வரும்போது,எனக்கும் அவளுக்கும் ஒரே மாதிரி பாசிமணி வாங்கிட்டு வந்தேன்.அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு.உடனே போட்டுகிட்டா.எனக்கும் போட்டுவிட்டா.
தீபாவளிக்கு முத நாளு,எங்க அம்மா இட்லிக்கு,உரல்ல மாவு அரச்சிகிட்டு இருந்தாங்க.அவ சும்மா இருக்கலாமுல்ல, உடனே அம்மாகிட்ட போயி,”குடும்மா.நான் அரைக்கிறேன்” னு ,பாதிலேயெ எங்கூட விளையாடாம போயிட்டா.கோவம் கோவமா வந்துச்சு.கொஞ்ச நேரம் கழிச்சு, அவ அரைக்கிறத நிறுத்திட்டு,ரெண்டு கையையும் இடப்பக்கமா நெஞ்சுல வச்சுகிட்டு, குனியவும் நிமிரவும் செய்தா.அவ கண்ணெல்லாம் கலங்கிருந்துச்சு. எனக்கு பயமா போயிடுச்சு.அவ பக்கத்துல போயி நின்னுகிட்டேன்.அவ உடனே எங்கிட்ட அம்மாவ கூப்பிட சொன்னா.நானும் ,எங்க அம்மாகிட்ட ஓடிப்போயி சொன்னேன்.என் கையில இருந்த பால்கோவாவெல்லாம் கீழ விழுந்துடுச்சு தெரியுமா!
அப்பறம்,எங்க அம்மாவும் அப்பாவும்.என்னய புஷ்பாக்கா வீட்டுல விட்டுட்டு,வெள்ள கலர் அம்பாஸிடருல அக்காவ கூப்பிட்டுகிட்டு போனாங்க.எனக்கு தூக்கமே வரல .எங்க அக்காவ பாக்கணும் போல இருந்துச்சு.பாவம் அவளுக்கு வலிச்சிருக்கும்ல.
அடுத்த நாள்.எங்க அப்பா மட்டும் வந்து,அம்மா பீரோக்குள்ள இருந்து, எனக்கு டிரஸ்ஸும்,மேரி பிஸ்கட்டும்,புது செப்பு சாமானும் வாங்கி கொடுத்துட்டு, புஷ்பாகா வீட்டுலயே விட்டுட்டு போயிட்டாரு.எனக்கு கஷ்டமா இருந்துச்சு.
ரெண்டு நாள் கழிச்சு, எங்க அப்பா மட்டும் சில ஆளுகள கூப்பிட்டு வந்தாரு.அவங்கெல்லாம் எங்க வீட்டு முன்னாடி கொட்டக போட்டுகிட்டு இருந்தாங்க.எங்க அழகம்மா பாட்டி,பசுபதி சித்தப்பா,கலா சித்தி, முத்தையா பெரியப்பா,ராக்காயி பெரியம்மா, பூமி மாமா.புவாயி அத்த,கயலு, சொர்ணா,நாகலிங்கம் எல்லாரும் வந்திருந்தாங்க.ஆனா யாருமே முன்னமாதிரி என்கிட்ட சிரிச்சு பேசவேயில்ல.என்ன தூக்கி கொஞ்சவும் இல்ல.கயலு மட்டும் என்கிட்ட வந்து கண்ணாம்பொத்தி விளையாடலாமான்னு கேட்டா.நான் “மாட்டேன். வரலை” னு சொல்லிட்டேன்.
கொஞ்ச நேரம் கழிச்சு,எங்க வீட்டுக்கு ஒரு கருப்பு கலர் வேனு வந்துச்சு.அதுல இருந்து ,எங்க அம்மா தலைய விரிச்சு போட்டுகிட்டு,நெஞ்சுல அடிச்சிக்கிட்டு ,அழுதுகிட்டே கீழ இறங்குனாங்க.எங்க பெரியம்மா போயி எங்க அம்மாவ பிடிச்சுக்கிட்டாங்க.அப்பறம் எங்க சித்தி,சித்தப்பால்லாம் போயி,வேனுக்குள்ள இருந்து எங்க மீனாட்சி அக்காவ தூக்கிட்டு வந்தாங்க.பிறகு,வெள்ளை துணிபோட்ட சேருல உட்கார வச்சாங்க.
“ஏன் அக்கா நடந்து வரமாட்டேங்குறா??ஏன் யாரையும் பார்க்க மாட்டேங்குறா??ரொம்ப தூங்கிட்டாலோ??”. நான் அவ கைய பிடிச்சு “அக்கா..என்ன ஆச்சு” னு கேட்டேன்.உடனே எங்க சித்தி லூசு என்னய கட்டிபிடிச்சுக்கிட்டு அழ ஆரம்பிச்சுட்டாங்க.ஆனா எனக்கு அழுகையே வரல.நிறைய பேர் வந்து எங்க அக்காவுக்கு ரோஜாப்பூ மாலையெல்லாம் போட்டாங்க.அவளுக்கு ரோஜாப்பூன்னா ரொம்ப பிடிக்கும் தெரியுமா??.
அப்புறம் சொர்ணா எங்கிட்ட வந்து “அபி,இப்பவே உங்க அக்காவ நல்லா பாத்துக்க.அப்பறம் பாக்க முடியாதுன்னு” சொன்னா.எனக்கு உடனே கோவம் வந்துடுச்சு.அவ கைய நல்லா நறுக்குன்னு கிள்ளி வச்சிட்டு,ஓடிப்போயி எங்க அக்காவ கட்டிக்கிட்டேன்.அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு,அவளுக்கு பிடிச்ச கலர் பாயிலேயே தூக்கிகிட்டு போயிட்டாங்க.
சொர்ணா சொன்னது உண்மைதான்.அப்பறம் எங்க அக்காவ பார்க்கவே முடியல.நான் நல்லா படிக்கிறேன்னு எங்க அக்காகிட்ட எப்படி சொல்லுறது.?நான் தேன்மிட்டாய் சாப்பிடுறது இல்லேன்னு எப்படி சொல்லுறது? நான் மட்டும் தனியா ஊஞ்சல்ல ஆடிகிட்டு இருக்கேன்னு எப்படி சொல்லுறது..??
'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
55 comments:
படிச்சிட்டு அப்பாலிக்கா வாரனுங்கோ
\\அவளுக்கு என்னைய விட பலமடங்கு முடி.இடுப்புக்கு கீழ்தான் தொங்கும்\\
ஹா ஹா ஹா
இரசிக்கவச்சிட்டிய இரசனைக்காரவகளே
வாங்க ஜமால்.
அக்கா அழ வச்சுட்டீங்க....
கனத்த இதயத்தோடு படித்து முடித்தேன்...
coolzkarthi said...
அக்கா அழ வச்சுட்டீங்க....///
அந்த பாப்பாவே அழல.நீயும் அழுகாதே...
coolzkarthi said...
கனத்த இதயத்தோடு படித்து முடித்தேன்...//
ரிலாக்ஸ் கார்த்தி
அக்கா சொன்னா சரிதான்.....
kathai padichi mudikkum pothu etho oru sogam pa
rompa pasamana akka thangachi
கதை ரொம்ப நல்லா இருக்கு. வார்த்தைகள் சரளமாக இருக்கின்றன. கதை படிப்பது மாதிரியே இல்லை. ஒரு உண்மைச் சம்பவம் மாதிரியே இருக்கு
gayathri said...
rompa pasamana akka thangachi
வாங்க காயத்ரி.மிகவும் உணர்ந்து படிச்சிருக்கீஙக.அடிக்கடி வாங்க
இராகவன் நைஜிரியா said...
கதை ரொம்ப நல்லா இருக்கு. வார்த்தைகள் சரளமாக இருக்கின்றன. கதை படிப்பது மாதிரியே இல்லை. ஒரு உண்மைச் சம்பவம் மாதிரியே இருக்கு
///
நன்றி அண்ணா
துவக்கத்தில் இருந்த சுகம் முடிவில் சோகமாக மாற்றிவிட்டது
இயல்பாய் இருந்தது கதை போல் அல்லாமல்
சொர்ணா சொன்னது உண்மைதான்.அப்பறம் எங்க அக்காவ பார்க்கவே முடியல.நான் நல்லா படிக்கிறேன்னு எங்க அக்காகிட்ட எப்படி சொல்லுறது.?நான் தேன்மிட்டாய் சாப்பிடுறது இல்லேன்னு எப்படி சொல்லுறது? நான் மட்டும் தனியா ஊஞ்சல்ல ஆடிகிட்டு இருக்கேன்னு எப்படி சொல்லுறது..??//
சோகக கதையை அழகா சொல்லிவிட்டீங்க1!
படித்தேன் இறுதியில் மனதில் ஒரு கனம்கூடியது
ஆரம்பத்தில் உள்ள சந்தோஷம் முடிவில் இறுக்கப்பட்டது
நல்ல எழுத்தோட்டம்
வாழ்த்துக்கள்
ஆரம்பத்தில் இருந்த சந்தோஷம் இறுதியில் இல்லைங்க...
சரளமான நடையில எழுதியிருக்கீங்க...
ரசித்துப் படித்தேன்...
முதல் முதலாய் உங்கள் கதையை படிக்கிறேன் கனத்த இதயத்தோடு செல்கிறேன்
அவளுக்கு என்னைய விட பலமடங்கு முடி.இடுப்புக்கு கீழ்தான் தொங்கும்.அவ கண்ணு ரெண்டும் பெரிசா மீனு மாதிரி இருக்கும்.அவ கண்ணுக்காகத்தான் "மீனாட்சி" னு பேர் வச்சேன்னு அப்பா ,வீட்டுக்கு வர்றவங்ககிட்டஎல்லாம் சொல்லுவாரு.
அழகான பெயர் விளக்கம்
//.நான் நல்லா படிக்கிறேன்னு எங்க அக்காகிட்ட எப்படி சொல்லுறது.?நான் தேன்மிட்டாய் சாப்பிடுறது இல்லேன்னு எப்படி சொல்லுறது? நான் மட்டும் தனியா ஊஞ்சல்ல ஆடிகிட்டு இருக்கேன்னு எப்படி சொல்லுறது..??
//
:(((((((((((((((((((((((((
:(((((((((((((((((((((((((
:(((((((((((((((((((((((((
:(((((((((((((((((((((((((
:(((((((((((((((((((((((((
:(((((((((((((((((((((((((
:(((((((((((((((((((((((((
:(((((((((((((((((((((((((
தேர்ந்தெடுத்த வார்த்தைகள். இதயத்தின் எடையைக் கூட்டும் வரிகள்.
படித்தததும் கண்களில் கண்ணீர் மல்கியது அக்கா..
நீங்கள் உங்கள் கதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுங்கள். எனக்காக அடுத்து ஒரு சந்தோஷ கதை எழுதுங்கள், உங்கள் நடையில் படிக்க ஆவலாக உள்ளது.
கதையின் இறுதி வரி அற்புதம்....
***
பள்ளிகள் ஓர் அனுபவப்பாடத்த எப்பதான் முடிக்கபோரிங்க அம்மணி ?
நெடுந்தொடர் மாதரி போய்கிட்டே இருக்கே... :(
படித்து முடித்ததும் ஏதோ ஒரு சோகம்,கதை நல்லாயிருந்தது.நானும் இப்படிதான் எங்கக்காகிட்ட அடிக்கடி ஏதாவது சண்டை போடுவேன்,பழசெல்லாம் ஞாபகம் வந்துடுச்சு!!
அருமை...
படித்து முடிந்ததும் என்னுள் நீண்ட நிசப்தம்...
"எதாவது பொருள் உடைந்தால் சப்தம் உண்டாகும் மனம் உடைந்தால் நிசப்தமே எஞ்சி நிற்கும்"
என்ற எண்டமூரியின் வரிகள் நினைவிற்கு வந்தது...
ஆம் மனம் உடைந்தது...
அருமை ரசனைக்காரி.....
படித்ததும் ஒருக்கணம் இறந்து போன என் அண்ணன் கண்முன்னே வந்து நின்றான். ஒரு சிறுமியின் உணர்வுகளை எளிமையாகப் படம் பிடித்திருக்கிறீர்கள். கதையின் கனம் மிக அதிகம்...
இக்கதையை சிறுகதைப் போட்டிக்கு அனுப்புங்கள்!!! (தமிழ்மணத்தில் பாருங்களேன்!!!)
நீங்கள் இப்பொழுதுதான் கதை எழுத ஆரம்பித்தீர்கள். ஆனால் அதற்குள் தேர்ந்த கதாசிரியர் போல மாறிவிட்டீர்கள்... வெல்டன்!!!
chinna chinna sambavangalai vaithu romba nerthiyana oru kathaiyai kuduthirukeenga. Thaniye oonjalaadum sirumiyum, pachai urai potta easy-chair m manasula pathinchu iruku. Innum pala padaipukal thodara vaazhthukkal.
//கடைக்கெல்லாம் போனா,எனக்கு பிடிச்ச தேன்மிட்டாயெல்லாம் வாங்கித்தருவா.எனக்கு காது குத்துன அன்னிக்கு என்னய ஃபுல்லா தூக்கி வச்சுகிட்டே திரிஞ்சா.//
என்ன காரணம்னு தெரியல..இத படிக்கும் போது என் கண்ணு கலங்கிருச்சுங்க..
தேன்மிட்டாய் + 23 வயதில் என்னை விட்டு பிரிந்த என் அண்ணன் இதெல்லாம் தானான்னு எனக்கு தெரியல.
R u working in wipro ???
மிக அருமையா எழுதியிருக்கீங்க.
கடைசியில் மெல்லிய சோகம் ததும்பி ஏதோ ஒன்றால் மனம் கனத்தது போலாகிவிடுகின்றது.
இதை போட்டிக்கு எழுதியிருக்கலாம்!
(இடையிலு மூன்று இடத்தில் ஆங்கில வார்த்தை வந்தது அதை தவிர்த்து விடுங்கள் என் ஆசை அவ்வளவே)
//அவளுக்கு ரோஜாப்பூன்னா ரொம்ப பிடிக்கும் தெரியுமா?//
//அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு,அவளுக்கு பிடிச்ச கலர் பாயிலேயே தூக்கிகிட்டு போயிட்டாங்க//
இதுபோன்ற வரிகள்தான் கதைக்கு மேலும் பலத்தைக் கொடுக்கின்றன. வாழ்த்துக்கள்
அழ வச்சுட்டீங்க..
plz visiste my blog
Very Nice....Akka va ethuku Sagadichinganu theyrila....
மனச கரச்சிட்டிங்க
மனதில் கனமான ரசனைப் பதிவு.
// thevanmayam said...
சோகக கதையை அழகா சொல்லிவிட்டீங்க1!//
நன்றி தேவன் சார்
அபுஅஃப்ஸர் said...
படித்தேன் இறுதியில் மனதில் ஒரு கனம்கூடியது
ஆரம்பத்தில் உள்ள சந்தோஷம் முடிவில் இறுக்கப்பட்டது
நல்ல எழுத்தோட்டம்
வாழ்த்துக்கள்//
கருத்துக்களுக்கும் ரசனைக்கும் நன்றி அபு சார்
வேத்தியன் said...
ஆரம்பத்தில் இருந்த சந்தோஷம் இறுதியில் இல்லைங்க...
சரளமான நடையில எழுதியிருக்கீங்க...
ரசித்துப் படித்தேன்...//
நன்றி வேத்தியன்
sakthi said...
முதல் முதலாய் உங்கள் கதையை படிக்கிறேன் கனத்த இதயத்தோடு செல்கிறேன்
//
முதன்முதலாய் வந்தவரை வருத்தத்துடன் அனுப்புகிறேனே!
வருகைக்கும்,ரசனைகளுக்கும் நன்றி சக்தி அவர்களே
நன்றிகள்
சுப்பு,
நர்சிம்..,
அன்பு,
தேனி சுந்தர்,
பித்தன்,
மேனகாசத்யா,
கீழைராசா,
ஆதவா,
செய்யது,
முத்துராமலிங்கம்,
உழவன்,
சங்கர்ஃபில்ம்ஸ்,
பொல்லாதவன்,
சக்கரை மற்றும்
ராம்
பாவம் அந்த குழந்தை!
ரொம்ப நல்லா இருக்குங்க கதை!
அப்பிடியே ஒரு குழந்தையின் பார்வையில் முழுக் கதையும் இயல்பாகப் போகிறது.நல்ல நடை.
நிஜம்மா கண்ணு முன்னாடி நடக்கறா மாதிரி இருக்குங்க
மிகவும் அழகாக எழுதுறிங்க.. படிக்கும் பொழுது ஏதோ மன வருடல் வருகிறது.. நல்லாயிருக்கு..
நல்லா எழுதிருக்கீங்க ராஜேஸ்வரி!
திரும்பவும் படித்தேன்... சிறந்த கதை!!
நினைவில் நின்றவன்-சிறுகதை(முதல் முயற்சி)பதிவுக்குபின் இப்பொதுதான் உங்க பதிவிற்கு வருகிறேன் அருமையான எழுத்துநடை படித்த அனைவரின் மனங்களிலும் ஒரு சிலநொடிகள் கனத்தஅமைதி ஆட்கொள்ள செய்துஇருக்கும்.இதுவே உங்க எழுத்தின் எழச்சிக்கு சான்று.
வாழ்த்துகள்.
இதயத்தை கனக்க செய்தது.நீங்கள் சிறந்த சிறு கதை எழுத்தாளர்.சிறந்த நடை.
உண்மை சம்பவம்னு நினைச்சுதான் படிச்சேன் ! அதனால நல்லா இருக்குன்னு சொல்ல முடியல! கதை தானே அப்படிங்குறதால ஒரு சந்தோசம் ! ஆனா எனக்கு கதை புடிக்கல!!!
அநியாய சோகம்!!!
நல்ல பதிவுங்க..
சொன்ன விதமும் நல்லா இருந்துச்சு..
மனசுதான் கொஞ்சம் கனமா ஆனா மாதிரி இருக்கு
அழுகாச்சியா வருதுங்...
/சொர்ணா சொன்னது உண்மைதான்.அப்பறம் எங்க அக்காவ பார்க்கவே முடியல.நான் நல்லா படிக்கிறேன்னு எங்க அக்காகிட்ட எப்படி சொல்லுறது.?நான் தேன்மிட்டாய் சாப்பிடுறது இல்லேன்னு எப்படி சொல்லுறது? நான் மட்டும் தனியா ஊஞ்சல்ல ஆடிகிட்டு இருக்கேன்னு எப்படி சொல்லுறது..??//
:((
என்ன சொல்ல? இதயம் கனத்து விட்டது!
Post a Comment