Saturday, March 7, 2009

மகளிர் தினச்செய்தி மார்ச் 8,2009


அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். 

சமுதாயத்தின் வளர்ச்சிக்கும்,முன்னேற்றத்திற்கும் , பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது மட்டுமன்றி தவிர்க்கமுடியாதது என்ற நிலைப்பாடு வளர்ந்து வரும் இவ்வேளையில் ,காலத்தின் சக்கரத்தை பின்னோக்கி ஓட்டி விடுகிறேன். மக்களாட்சி காலத்திற்கு முன் மன்னராட்சி யுகத்திற்கு சென்றோமானால் ,
பெண்களின் நிலை என்ன?
அவர்கள் எவ்வாறு மதிக்கப்பட்டார்கள்? என்ற கேள்விற்கு விடை சற்று புரியலாம்.


அக்காலகட்டத்தில் , அரசியல் கொள்கைகளிலும், வளர்ச்சி யுக்திகளிலும், போர் திறன்களிலும் , பெண்களின் பங்கு அளப்பரியது என்று கல்வெட்டுக்களின் மூலம் நாம் அறிய வருகிறோம், தேவரடியார்கள் என்று சொல்லப்படும் பெண்கள் கூட , அரசியலில் சில முக்கிய பணிகளில் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குரிய மரியாதையும் , மதிப்பும், சுதந்திரமும் வன்மம் இன்றி இருந்தது எனலாம்.


நமது நூற்றாண்டை எடுத்துக்கொண்டோமானால் , சுதந்திரப்போராட்டங்களோடு ஆரம்பித்த நூற்றாண்டு , பெண்களின் பங்களிப்போடுதான் நிறைவுற்றது. வேலுநாச்சியார், ஜான்சிராணி போன்ற வீரப்பெண்மணிகளின் குருதிபடிந்த நாட்டில்தான் நாம் நடமாடிக்கொண்டிருக்கிறோம்.

பிறகு ஏன் பெண் சுதந்திரம் என்ற வேள்வி தோன்றியது ? எப்பொழுது தோன்றியது ? யார் காரணம்? முதலில்,பெண் சுதந்திரத்திற்காக "மகளிர் தினம்" கொண்டாடப்படவில்லை என்ற தெளிவு வேண்டும்.

முதன் முதலில் 1908 ஆம் ஆண்டு, பெப்ரவரி திங்கள் 28 ஆம் நாள் , நியூயார்க் நகரில், நெசவுத்தொழில் ஈடுபட்ட பெண்கள் ,தங்களுடைய ,தகுந்த ஊதியம் குறித்தும், சரியான வேலை நேரம் அதாவது ஒரு நாளில் எட்டு மணி நேரமே வேலை என்ற நிலைப்பாடுகளை குறித்தும் ,வலியுறுத்தவே பேரணி நடத்தினர். அது சுதந்திர போராட்டமன்று. உரிமை போராட்டம். ஆகவே இந்த நாளே பெண்கள் நாளாக அவர்களுக்குள்ளே கொண்டாடினர்.

பிறகு ஆங்காங்கே ,உலகின் பல இடங்களில், இவ்வாறான கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்கள் பெண்களால் நடத்தப்பட்டது.. அதன் பிறகு 1911 ஆம் ஆண்டு ,மார்ச் 19, உலக மகளிர் தினமாக ,ஜெர்மனி ,ஆஸ்ட்ரியா ,டென்மார்க் ,மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடப்பட்டது .இதற்க்கு காரணமாக பெரும் பங்கெடுத்தவர் ,ரஷ்ய புரட்சியாளரும், பெண்ணியவாதியும் ஆன Alexandra Kollontai என்பவரே.



இதன் விளைவாக ,1929 ஆம் ஆண்டும் ,1931 ஆம் ஆண்டும் இதே போல், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியின் Belmore Park எனும் இடத்தில , மர வேளையில் ஈடுபட்டிருந்த பெண்கள் ,தங்களுடைய உரிமைக்காக பெரும் பேரணி ஒன்றை கூட்டினர்




இவ்வாறு பல இடங்களில் ,பெண்கள் தனி தனி குழுக்களாக உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுது ,இரண்டாம் உலகப்போரும்,பொருளாதார வீழ்ச்சியும் அவர்களை ஒன்றுபடுத்தியது.அதன்படி,1937 இல் இருந்து ,நாம் இன்று கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த மார்ச் 8 என்பதே உலக பெண்கள் அனைவருக்கும், "உலக மகளிர் தினமாக " அறிவிக்கப்பட்டது.

ஆகவே மகளிர் தினம் என்பது பெண் உரிமையை வலியுறுத்தி கொண்டாடும் நாள் அன்றி பெண் சுதந்திரத்தை மற்றவர்களிடம் கேட்கும் நாள் அன்று.பெண் சுதந்திரம்
என்று ஏன் நாம் பிதற்றி கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை.

எந்த ஒரு தேவைக்கும் ,பிறரை சார்ந்திருக்கும் நிலை உருவாகும்போது ,தன்னுடைய சுயத்தை விட்டோழிக்கத்தான் வேண்டி இருக்கிறது.பெண்களும் அவ்வாறே.. பிறந்து வளர்ந்து வாழ்நாள் முடிகின்ற வரை ,பிறரை சார்ந்தே இருக்கிறார்கள்.அவர்களால் தன்னுடைய "சுயம்" என்ற சுய உரிமையை ஏந்த முடியாமல் போய்விட்டது.

ஆனால் ,இப்பொழுது அந்த நிலை ,நிறைய மாறியிருக்கிறது.வேலைக்கு செல்கின்றனர்.தொழில் புரிகின்றனர்.இருப்பினும் ஒரு பெண் வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதிப்பதால் மட்டுமே,பெண் சுதந்திரம் வந்து விட்டது என் எண்ணலாகாது.எத்தனை பேர் ,அந்த பணத்தை வீட்டில் கொடுத்துவிட்டு,தன் செலவிற்கு, கையேந்தி நிற்கிறார்கள்?

வேலைக்கு செல்வது என்பது ஒரு பெண் சுதந்திரத்தின் சிறு வெளிப்பாடாக வைத்துக்கொள்ளலாமே தவிர ,அதுவே உரிமையையும்,இன்ன பிற தேவைகளையும் நிறைவேற்றாது.

பணிக்கு சென்றாலும்,செல்லாவிட்டாலும்,தொழில் செய்தாலும் செய்யாவிட்டாலும்,அவரவர்க்கென்று தனிமனித உரிமை ,பொறுப்பு,திறமை,பங்களிப்பு இருக்கிறது. அந்த ஒரு சிந்தனை மட்டுமே ,எங்கிருந்தாலும் பெண்களை சுதந்திரமாக வாழ வைக்கும், 

மற்றபடி,பெண் சுதந்திரம் இல்லை என்று அப்பட்டமாக ஆண் சமுதாயத்தை சாடுவது , நம் அறிவிலிதனத்தையே காட்டுகிறது. ஆண்கள்,தான் சம்பாதித்தால் தான் , தன்னுடைய வாழ்க்கை சக்கரம் ஓடும் என்பதை உணர்ந்து உழைக்கிறான். பெண்களுக்கு அப்படி இல்லையே ! "எப்படியாவது அப்பா பீஸ் கட்டி படிக்க வட்சுடுவார், எப்படியாவது,கணவன் சம்பாதித்து குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விடுவான் என்ற OPTION ,பல பெண்களிடம், அடிமனதில், ஒரு சிறு இடத்தில புதைந்து கிடப்பதால்தான் , அவளால் வெளி வர முடியவில்லை.

இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் விழிப்புணர்வோடும், சுய சிந்தனையோடும் உலா வர வேண்டும். அப்படிப்பட்ட சமுதாயத்தில்தான் "பெண் சுதந்திரம்" வேண்டும் என்ற பேச்சே பொருளற்று போய்விடும்.


இதை படித்து கொண்டிருக்கும் சிலர் மனதில் இவ்வாறு தோன்றலாம், "இவங்க ஈசியா சொல்லிட்டாங்க, பெண் சுதந்திரம் நம்ம கிட்டதான் இருக்குன்னு. ஆனா அந்தந்த சூழ்நிலைகள்ல இருந்தாதான் தெரியும் " என்று.

அவர்களுக்கு பின்வரும் கதையை கூறுகிறேன். அனைவருக்கும் பரிச்சியமான கதைதான். எதோ ஒரு காரணத்திற்காக , கழுகின் முட்டை, கோழியின் முட்டைகளோடு கலந்து விடுகிறது. கோழிகளின் முட்டைகளோடு சேர்ந்து, கழுகின் முட்டையும் குஞ்சு பொரிக்கிறது. கோழிகளோடே வளர்ந்ததால், தன்னால் உயர பறக்க முடியும் என்ற விழிப்புணர்வும் உண்மையும் தெரியாமல் போய்விடுகிறது. கடைசிவரை,அதுகளுடனே காலத்தையும் கழித்து விடுகிறது.

இதுவே, கழுகிற்கு "உன்னால் பறக்க முடியும் "என்று யாராவது கூறியிருந்தால், விழிப்பூட்டி இருந்தால், கண்டிப்பாக பறந்திருக்கும். கழுகின் நிலைதான் ,பெண் நிலையும் . இருக்கும் இடத்தில இருந்து கொண்டு, பல காரணங்களை துணைக்கு அழைத்து , நான் சுதந்திரமற்று இருக்கிறேன் என்று கூறினால் யார் தவறு?



ஆகவே,பெண்களே ,விழிப்புணர்வோடு செயல்படுங்கள். சுதந்திரத்தின் கருவறை உங்களிடமே.அதை வெளியே எதிர்பார்க்காதிர்கள்.

மறுபடியம் எனது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

15 comments:

ராம்.CM said...

ஆகவே,பெண்களே ,விழிப்புணர்வோடு செயல்படுங்கள். சுதந்திரத்தின் கருவறை உங்களிடமே.அதை வெளியே எதிர்பார்க்காதிர்கள்./// ச‌ரியாக‌ சொன்னீர்க‌ள்...



எனது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.





நான்தான் ப்ப‌ஸ்ட்டு,...

Rajeswari said...

நான்தான் ப்ப‌ஸ்ட்டு,...///

கண்டிப்பாக நீங்கள் தான் முதல் ....
நன்றி ராம்

நட்புடன் ஜமால் said...

\\ஆகவே,பெண்களே ,விழிப்புணர்வோடு செயல்படுங்கள். சுதந்திரத்தின் கருவறை உங்களிடமே.அதை வெளியே எதிர்பார்க்காதிர்கள்.

\\

மிக அழகா சொன்னீங்க.

மகளீர் தின நல் வாழ்த்துகள் அனைவருக்கும்.

ஆதவா said...

நீங்க வேணும்னா பாருங்க... இந்த பதிவு விகடன்ல வரப்போவுது!!!

அத்தனை அம்சமா இருக்கு...

பெருமையா சொல்றேங்க...

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

அப்துல்மாலிக் said...

மகளிர்தினம் பற்றி விளக்கம் தந்ததிற்கு நன்றி

என் மனமார்ந்த மகளிர்தின் நல்வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

// அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். //

அனைத்து சகோதரிகளுக்கும், தோழிகளுக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள்.

(Very sorry for the belated wishes... பதிவை சரியாக கவனிக்காததால் எந்த பின்னூட்டமும் இடவில்லை)

இராகவன் நைஜிரியா said...

// ஆகவே மகளிர் தினம் என்பது பெண் உரிமையை வலியுறுத்தி கொண்டாடும் நாள் அன்றி பெண் சுதந்திரத்தை மற்றவர்களிடம் கேட்கும் நாள் அன்று //

சரியாகச் சொன்னீர்கள். உரிமைக்கும் .. சுதந்திரதிற்கும் உள்ள வேறு பாடு தெரியவேண்டும்

Rajeswari said...

வாங்க ராகவன் சார், உங்களுக்கு ஆயிசு நூறு, எங்கே கானவில்லையே என்று நினைத்து கொண்டிருந்தேன் .உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும், என் சார்பாக மகளிர் வாழ்த்தை தெரிவிக்கவும்

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு!!

தமிழர் நேசன் said...

மகளிர் தினத்திற்கு ஒரு நல்ல பதிவை பதிக்க வேண்டும் என்று இருந்தேன். அதை என் சகூதறி செய்து விட்டார், இதை விட அருமையாக என்னால் பதிவு செய்திருக்க முடியாது. நல்ல வேலை முயற்சி செய்ய வில்லை.

ஊருக்கு சென்று திரும்பியதால் தாமதம்.
ஒவ்வொரு நாளும் மகளிரின் உரிமையை நினைவில் வைத்து காக்கவேண்டும் என்பதால். ஒவ்வொரு நாளும் மகளிர் தினம் தானே...
வாழ்த்துக்கள்..

Rajeswari said...

//மகளிர் தினத்திற்கு ஒரு நல்ல பதிவை பதிக்க வேண்டும் என்று இருந்தேன். அதை என் மகளிர் தினத்திற்கு ஒரு நல்ல பதிவை பதிக்க வேண்டும் என்று இருந்தேன். அதை என் சகூதறி செய்து விட்டார், செய்து விட்டார், //
நன்றி தமிழர் நேசன் அவர்களே..சகோதரியை குதறி "சகூதறி " ஆக்கிவிட்டீரே ...

S.A. நவாஸுதீன் said...

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

Rajeswari said...

//Syed Ahamed Navasudeen said...
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்//

வாங்க அஹ்மது சார்..முதன் முறையா வந்து இருக்கீங்க.. அடிக்கடி வாங்க.

S.A. நவாஸுதீன் said...

கண்டிப்பாக, இப்பதான் ஜமால் மூலமாக உங்கள் அறிமுகம் கிடைத்தது

Rajeswari said...

ஜமால் சாருக்கு ஒரு சல்யுட்