Wednesday, October 28, 2009

பிறந்தநாள்- வாழ்த்துக்களும்,முக்கியத்துவமும்


இன்றைய சூழலில் ,பிறந்த நாள் கொண்டாடுவதென்பது ஒரு தவிர்க்க முடியாத சிறு நிகழ்வாகி போய்விடுகிறது. சிறு குழந்தை முதல் முதியவர் வரை, தன்னுடைய பிறந்த நாளை விரும்பாதவர் யாரும் இலர். இதில் சில விதி விலக்குகளும் உண்டு.

பள்ளி பிராயத்திலே, பிறந்த நாள் என்பது புது படம் ரிலீஸ் ஆவது போல.சீருடைக்கு விடுமுறை கொடுத்து ,வண்ண ஆடையை அணிந்து , கையில் ஒரு பெரிய டப்பாவில் அப்பா வாங்கி கொடுத்த நுயுட்ரின் சாக்லேட்டை கொண்டு போய் வகுப்பு ஆசிரியருக்கு கொடுத்து விட்டு , முதல் பீரியடில் பிறந்த நாள் வாழ்த்து பாடலை கேட்டு விட்டு , கோயிலில் பூசாரி பிரசாதம் கொடுப்பது போல் டப்பாவை ஏந்தி கொண்டு அனைவருக்கும் சாக்லெட் கொடுத்தால்தான் , ஒரு தேவதை போன்ற எண்ணம் மனசுக்குள் தோன்றும்.இதில் மற்றொரு சுகம் என்னவென்றால் ,முடிந்த மட்டும் அன்று முழுவதும் எந்த ஆசிரியரும் அடிக்க மாட்டார்கள்.அதற்காகவே இரண்டு தடவை பிறந்த நாள் கொண்டாடுபவர்களும் உண்டு . என்ன வென்று கேட்டால் "அன்று சர்டிபிகேட் படி, இன்று ஜாதகப்படி " என்பர். இதிலும் அன்றைக்கு அம்மாவிடம் அடம்பிடித்து வாங்கி வந்த காசில் தன்னுடைய நெருங்கிய நண்பனுக்கு( எதுக்கு வம்பு நண்பிக்கும்) பை ஸ்டார் சாக்லேட்டோ ,டேய்ரீ மில்க் சாக்லேட்டோ கண்டிப்பாக உண்டு.

கல்லூரி பிறந்த நாள் விழாக்களை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. சாக்லெட் எல்லாம் ஓல்ட் டைப். குரூப் ட்ரீட் என்று, பேக்கரியிலோ, காபி ஷாப்பிலோ , அப்பாவின் பணம் திவால் ஆகும் .பரீட்சை நேரம் பிறந்த நாள் வந்து விட்டால், ஒன்று எக்சாமை போஸ்ட்போண்டு பண்ணுவார்கள் அல்லது பிறந்த நாளையே போஸ்ட்போண்டு பண்ணி விடுவார்கள். ஆக மொத்தம் அன்று மட்டும் ஒரு குட்டி கதாநாயகன் கதாநாயகி ஆகிவிடுவார்கள்.

வேலைக்கு செல்பவர்களை எடுத்துகொண்டோமானால் , பாதி பேர் பிறந்த நாளை மறைத்து விடுவர். "எதுக்கு தேவை இல்லாமல் வெட்டி செலவு" என்று. "ஆனாலும் விடமாட்டோம்" என்று நண்பர்கள் ஊரெல்லாம் தமாரம் அடித்து விடுவதும் உண்டு. ஆனபோதும் ,திருமணத்திற்கு முன்னால் , வேலைக்கு செல்லும் பலருக்கு தத்தம் பிறந்த நாள்களின் போது, சிறு வலி இருக்கும்.குடும்பத்தினருடன் இல்லாமல் இருப்பது, கல்வி கடன், உயர் பதவி மற்றும் வேலைக்களுக்கான அலைச்சல் என்று பல. பள்ளியிலும் கல்லூரியிலும் கொண்ட மகிழ்ச்சி சிறிதாக ,சிலருக்கு பெரிதாக குறைந்திருக்கும்.


இவ்வாறு வருடத்துக்கு ஒரு நாள் மட்டும் வரும் (சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட) பிறந்த நாளின் மகிழ்ச்சி என்பது எப்பொழுதும் நிரந்தரமான ஒரே அளவாய் இருப்பதில்லை.ஆழ்ந்து கவனித்தோம் என்றால் பள்ளியிலும் கல்லூரியிலும் கொண்டாடப்படும் பிறந்த நாள் ,தன்னை முன்னிருத்தியே இருக்கும். அதன் பிறகு வருபவை 80 சதவிகிதம் நண்பருகளுக்காகவோ, குடும்பதினர்களுக்காகவோ இருக்கும்.


பக்குவப்பட்ட சிலர் தான்,தன்னுடைய பிறந்த நாளை,மற்றவர்களுக்காக உபயோகப்படுத்தி கொள்வார்கள்.கண்தானம் செய்வது, அநாதை இல்லம் சென்று உணவு கொடுப்பது , வீட்டில் இருக்கும் முதியவர்களின் ஏதாவது ஒரு ஆசையை நிறைவேற்றுவது என்று பல.அதிலே தனி சுகமும் ஆத்மா திருப்தியும் உண்டு.

நண்பர்களே!! நாமும் நம்முடைய பிறந்த நாளை பயனுள்ள முறையில் கொண்டாடுவோம் ..நம்மை சுற்றி உள்ளவர்களுக்காக.!!!


நாளை பிறந்த நாள் காணும் என் அன்பு கணவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!. எண்ணிய எண்ணம் யாவும் இனிதே துலங்க ,இதயத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துகிறேன் !!.


26 comments:

நாமக்கல் சிபி said...

Maappillaikku en manamaarntha vaazthukkal!

அப்பாவி முரு said...

யாரு நம்ம ரசனைக்காரியின் காரனுக்கா...


வாழ்த்துகள் சார்...


ஏதாவது செய்யணுமே!!!

அப்பாவி முரு said...

யாரு நம்ம ரசனைக்காரியின் காரனுக்கா...


வாழ்த்துகள் சார்...


ஏதாவது செய்யணுமே!!!

வால்பையன் said...

நம் வாழ்த்துக்கள் இல்லாமலா!

பூவா தூவிப்புடலாம் விடுங்க!

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

வாழ்த்துகள் சார்...

தேவன் மாயம் said...

என் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்!

இராகவன் நைஜிரியா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Mrs.Menagasathia said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

பிரியமுடன்...வசந்த் said...

//அதன் பிறகு வருபவை 80 சதவிகிதம் நண்பருகளுக்காகவோ, குடும்பதினர்களுக்காகவோ இருக்கும்.//

உண்மைதான்..

ரசனைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

அ.மு.செய்யது said...

தலைவருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!!

கடைசி இரண்டு மூன்று பத்திகள் யதார்த்தம்.

//வேலைக்கு செல்லும் பலருக்கு தத்தம் பிறந்த நாள்களின் போது, சிறு வலி இருக்கும்.குடும்பத்தினருடன் இல்லாமல் இருப்பது, கல்வி கடன், உயர் பதவி மற்றும் வேலைக்களுக்கான அலைச்சல் என்று பல. பள்ளியிலும் கல்லூரியிலும் கொண்ட மகிழ்ச்சி சிறிதாக ,சிலருக்கு பெரிதாக குறைந்திருக்கும்.
//

மனதுக்கு நெருக்கமானவர்களின் இழப்புகள் பிறந்த நாள் சமயங்களில் ஞாபகம் வந்து தொலைக்கும் !
என்னத்த பர்த் டே வெல்லாம் கொண்டாடி..என்று ஒரு சலிப்பு தட்டிவிட்டு,வேறு வேலை பார்க்க சென்றுவிடுகிறோம்.

அபுஅஃப்ஸர் said...

இந்த வருடத்திலிருந்து ரசனைக்காரனுக்கும் சேர்த்து பிறந்தநால் கொண்டாடனுமா

என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிப்புடுங்க‌

Vani said...

உங்க தொடர்பு எண் கேட்டு இப்போ தான் அனுப்பிட்டு வரேன் :)
நல்ல பதிவு... நல்ல நேரம்...
நீங்க சொன்ன அந்த பள்ளிக்கூட அனுபவம் எனக்கு கிடச்சதே இல்லீங்க...என் பிறந்த நாள் எப்பவும் முழு பரிட்சை விடுமுறைல தான் வரும். காலேஜ்ல்யும் அப்படியே..இருந்தாலும் ஹாஸ்டல்ல கொண்டாடின அனுபவங்கள் மறக்க முடியாதவை. :)
"..பக்குவப்பட்ட சிலர் தான்,தன்னுடைய பிறந்த நாளை,மற்றவர்களுக்காக உபயோகப்படுத்தி கொள்வார்கள்..."
உண்மை தாங்க பிறந்த நாள் என்று இல்லாமல் எப்போ தோனும் போதும் பன்னலாம் இல்லையா..

அபி அப்பா said...

தங்கமச்சானுக்கு நாளை பிறந்த நாளா! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!! ஆமா கல்யாணத்துக்கு பின்ன வரும் முதல் பிறந்தநாள் தானே, என்ன ட்ரீட் எங்களுக்கு????

R.Gopi said...

தலைவருக்கு என் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

உங்களுடன் இணைந்து அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி...

அதெல்லாம் சரி, எங்கே ட்ரீட்??

Rajeswari said...

வாழ்த்துக்களுக்கு நன்றி

நாமக்கல் சிபி,

அப்பாவி முரு,

வால்பையன்,

ஞானப்பித்தன்,

தேவன்மாயம்,

ராகவன் நைஜிரியா,

மேனகசத்யா,

வசந்த்,

செய்யது,

அபுஅப்சர்,


வாணி,

அபி அப்பா,

கோபி.

திகழ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

ஜெஸ்வந்தி said...

என் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்!

பித்தனின் வாக்கு said...

நான் பிறந்த நாள் கொண்டாடும் வழக்கம் இல்லை, ஆனால் வருடம் முழுதும் கோவிலுக்குப் போனால் எங்க அப்பா,அம்மா பெயருக்குத்தான் அர்ச்சனை செய்வேன். ஏன் என்றால் அவர்கள் நல்லா இருந்தா நாம் நல்லா இருப்போன் இல்லையா. ஆனால் பிறந்த நாள்( நட்சசிரத்தபடி) அன்று மட்டும் எனது பெயருக்கு அர்ச்சனைகள் செய்வேன். இப்போது நான் இறக்கும் நாளை கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்துகொண்டுள்ளேன். கண்டுபிடித்தால் கொண்டாடலாம். நன்றி.

பித்தனின் வாக்கு said...

மன்னிக்கவும் நான் கடைசி இரு வரிகளைப் படிக்காமல் கட்டுரை என நினைத்து எதோ சொல்லிவிட்டேன். பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். திருமணத்திற்கு பிறகு இதுதான் முதலா. அவருக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். நிறைய சந்தோசங்களும் மன நிறைவும் பெற்று வாழ வாழ்த்துகின்றேன்.

வேந்தன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்:))

tamiluthayam said...

பிறந்தநாள் முடிந்து வெகுநாட்கள் ஆனதால், இப்போது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல முடியாது. ஆனால் உங்களை பாராட்ட முடியும். பிறந்தநாளுக்கென்று ஒரு இடுகை... அதில் சில மலரும் நினைவுகள்... கடைசியில் கணவருக்கான வாழ்த்து... ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்து இருக்கீறிர்கள்.

பேநா மூடி said...

எனது வாழ்த்துகளையும் சொல்லிவிடுங்கள்...

அன்புடன் அருணா said...

அச்சோ ரொம்ப லேட்டாயிருச்சே!வாழ்த்துக்கள்!

ஜகதீஸ்வரன் said...

நானும் வாழ்த்துகிறேன் !!.

லதானந்த் said...

நானும் லேட்டாயிட்டேன் போல இருக்கே?
எனினும் வாழ்த்துக்கள்.
(எழுத்துப் பிழைகளைக் குறைக்க - தவிர்க்க முயலுங்களேன்?

அன்பரசன் said...

//வேலைக்கு செல்லும் பலருக்கு தத்தம் பிறந்த நாள்களின் போது, சிறு வலி இருக்கும்.குடும்பத்தினருடன் இல்லாமல் இருப்பது, கல்வி கடன், உயர் பதவி மற்றும் வேலைக்களுக்கான அலைச்சல் என்று பல. பள்ளியிலும் கல்லூரியிலும் கொண்ட மகிழ்ச்சி சிறிதாக ,சிலருக்கு பெரிதாக குறைந்திருக்கும். //

மிக சரியாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.