Saturday, October 24, 2009

புதிதாய் ஓர் ஆரம்பம்...

கடந்த ஒரு மாத காலமாய் , காலையில் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்ற முடிவும் முயற்சியும் ,பல தடங்கலுக்கு பிறகு ,ஒருவழியாய் நேற்றில் இருந்து அமுலுக்கு வந்துவிட்டது. மாசற்ற, காலை காற்றை சுவாசிப்பதென்பதே ஒரு சுகம்தான்.அதிலும் அமைதியான வேளையில் என்கின்றபோது, உடம்போடு சேர்ந்து மனதும் வலுப்படுவது போன்றதொரு எண்ணம்.

தமிழக அரசு ஆங்காங்கே நிறுவி இருக்கும் பூங்காக்கள்,உடற்பயிற்சி, யோகா போன்ற, நல்ல விசயங்களை வலியுறுத்தும் விதமாக விளங்கி வருகிறது என்றே கூறலாம்.அதன் மூலம் பலர் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை.

வீட்டின் அருகில் இருக்கும் சிவன் பூங்கா ( ஞானி மன்னிப்பாராக!! ஜீவா பூங்கா) எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். நல்ல அகலமாய், காற்றோட்ட வசதியுடையதாய்,தியான மண்டபத்தோடு கூடிய இடம் அது.அங்கே வளரும் செடிகளுக்கான நாற்று பண்ணையும், அதனோடு இணைந்துள்ளது. எனக்கு தெரிந்து ,சென்னையில் கழிப்பிட வசதியோடு அமைந்த ஒரே பூங்கா இதுவாய் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.(பராமரிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி தெரியவில்லை).

காலை 5 மணிக்கு தொடங்கும் மக்களின் உடல் மற்றும் நடை பயிற்சி கிட்ட தட்ட 8.30 மணி வரை தொடர்கிறது . உடல் வளமே முக்கியம் என்பதை இது போன்ற இடங்களில் தெரிந்து கொள்ளலாம். 65 வயது வரையிலும் பயிற்சி செய்கிறார்கள்.இறகுப்பந்து விளையாடுவதற்கும் கூட தனி இடம் உள்ளது.சமீப நாட்களாய் இலவச முறையான யோகாசன பயிற்சியும் அங்கே நடந்து வருகிறது.மக்களும் சரியாக அதை உபயோகப்படுத்தி கொள்கிறார்கள்.இதைதவிர மாலை நேரங்களில் குழந்தைகள் விளையாடுவதற்கேற்ற சறுக்கு மைதான வசதியும் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திறந்ததாதலால் ஒட்டு மொத்த பராமரிப்பு நன்றாகவே உள்ளது. தொடர்ந்தும் இதே நிலையில் இருந்தால் மகிழ்ச்சிதான்.

பொதுவாக நடை பயிற்சி செய்யும் போது அனைவரும் ஒரே திசையில்தால் நடந்து செல்வோம்.நேற்று நான் நடந்து சென்று கொண்டிருந்த போது ,எதிர் திசையில் இருவர் சென்று கொண்டிருந்தனர்.என்னவென்று பார்த்தால் தீபாரதனையோடு கூடிய பூஜை செய்து சாமி கும்பிட்டு வலம் வந்து கொண்டிருந்தனர்.பக்கத்தில் "இங்கே வழிபாடு கூடாது " என்ற பலகையும் இருக்கிறது.பூங்காவிற்கு எதிரிலேயே காவல் நிலையமும் இருக்கிறது. பாதுகாப்பிற்கும் பஞ்சமில்லை என்னவோ போங்க ..பூங்கா பூங்காவாய் இருந்தால் சரி. .

13 comments:

வால்பையன் said...

நாம எதுவும் செய்யாம இருந்தாலே போதும், பூங்கா பூங்காவாகவே இருக்கும்!

அப்பாவி முரு said...

இரண்டு மாதங்களில் நடந்த நல்ல விசயங்களை எழுதியுள்ளீர்.

மீண்டும் இரண்டு மாதம் கழித்து உண்மை நிலவரத்தை எழுதுங்கள்!!

:)

தேவன் மாயம் said...

காலை 5 மணிக்கு தொடங்கும் மக்களின் உடல் மற்றும் நடை பயிற்சி கிட்ட தட்ட 8.30 மணி வரை தொடர்கிறது///

நல்ல செயல் தொடருட்டும்!!

ஜீவன் said...

///இரண்டு மாதங்களில் நடந்த நல்ல விசயங்களை எழுதியுள்ளீர்.

மீண்டும் இரண்டு மாதம் கழித்து உண்மை நிலவரத்தை எழுதுங்கள்!!///


repeettu ;;))

Vani said...

romba nalla vishayamnga...nalla aarambam...thodarchiya pannina innum nallathu :)

அ.மு.செய்யது said...

வாக்கிங் ஆஆ ??

கெட்ட‌ ப‌ழ‌க்க‌ங்க‌ !

VISA said...

உங்கள் நடை பயணம் தொடர வாழ்த்துக்கள்

பிரியமுடன்...வசந்த் said...

எங்கே போயிட்டீங்க இத்தனை நாளா?

திருமண வாழ்க்கை பற்றி ஒரு சில வார்த்தைகள்?

பித்தனின் வாக்கு said...

நடைப் பயிற்சி நல்ல பழக்கம்தான். தொடங்குவது முக்கியம் அல்ல தொடர்வதுதான் முக்கியம். தொடந்து நடங்கள். நானும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கின்றேன். ஆனால் முடியவில்லை. உடன் பிறந்த சேம்பேறித்தனம் தினமும் தடுக்கின்றது.

அபுஅஃப்ஸர் said...

வாக்கிங்கா? நானும் இதை பற்றி சிந்திப்பதோடு சரி... செயல்படுத்த பார்க்கும் வேலை ஒத்துவரமாட்டேங்குது.. நல்லது நீங்களாவது தொடருங்க‌

நாம் ஏதும் செய்யாமல் இருந்தாலே பூங்காவில் பூங்காற்று கிடைக்கும்

அன்புடன் அருணா said...

வாங்க...வாங்க!

பின்னோக்கி said...

அடப்பாவமே... நீங்க நடக்க ஆரம்பிச்சீங்க.. சென்னையில மழை பிச்சுகிச்சு..

48 நாள் தொடர்ந்து நடங்க. அதுவே பழக்கமாகிடும்

(மேலே உள்ள இரண்டும் வயித்தெரிச்சல் என நினைத்தால் அது தவறு என்பது தவறு)

பின்னோக்கி said...

அப்புறம் சிவன் பூங்காவுல டாய்லெட் பக்கம் போய்டாதீங்க..அப்புறம் வருத்தப்படாதீங்க.

என் கிட்ட ஒருத்தர் அங்க இருக்குற சிலைக்கு பூஜை பண்ணனும் என்கிற ஆதரவு கடிதத்துல கையெழுத்துக் கேட்டார். எஸ்கேப்