Sunday, July 12, 2009

நகைச்சுவை கதம்பம்

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நடந்த நிகழ்வு இது.பள்ளி ஆண்டுவிழாவிற்காக, எங்கள் வகுப்பின் சார்பாக ஒரு குடும்ப நாடகம் நடத்துவதாய் ஏற்பாடு செய்தோம். ஒரு வீட்டில் இரு மருமகள்களும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அமைந்த நாடகம் அது. நான் இளைய மருமகளாயும், எனது தோழி சந்திரலீலா எனது கணவனாகவும் நடித்திருந்தோம். நாடக ஒத்திகையெல்லாம் கூட நன்றாக நடந்தது.

விழா நாளன்று ,எனக்கு பெரிதாய் எந்த பயமும் இல்லை ,சேலை அவிழ்ந்து விடக்கூடாதே என்பதைத் தவிர..ஆனால் லீலா மிகவும் பதட்டமாய் இருந்தாள். பேண்ட்டுக்கு மாட்டுவதற்காக கொண்டு வந்திருந்த அவளது கோபக்கார அண்ணனின் பெல்ட்டை தொலைத்துவிட்டாள்.
நாடகம் வேறு ஆரம்பித்துவிட்டது.ஒரு காட்சியில் நானும் எனது அக்காவும்(மூத்த மருமகள்) சண்டையிடும் போது,எனது கணவனான லீலா வந்து என்னை அதட்டி வீட்டினுள்ளே அழைத்துசெல்வது போல் ஒரு காட்சி. அக்காட்சியும் வந்தது.

நாங்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருந்தோம். வேகமாய்(பதட்டமாய்) அங்கே வந்த லீலா, “ படிச்ச பொண்ணு மாதிரியா நடந்துக்குர. வாடி உள்ள” என்று வசனங்களையெல்லாம் சரியாக கூறி, என்னை அழைத்து செல்வதற்கு பதில் என் அக்காவை அழைத்து சென்று விட்டாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பார்த்துக்கொண்டிருந்தவர்களிடையே சலசலப்பும் சிரிப்பும் ஆரம்பமாகியிருந்தது.

நான் பேந்த பேந்த மேடையிலேயே நின்று கொண்டிருந்தேன். ஏற்கனவே இருந்த குழப்பம் தீர்வதற்குள், அடுத்த காட்சிக்கு வந்த என் அக்காவின் கணவனான , என் தோழி ரோஸ்மேரி, கடகடவென்று வசனங்களை ஒப்பித்துவிட்டு, “ வாடி உள்ளே” என்று என் கையை பிடித்து இழுத்தாள். நான் அழுது விடும் குரலில், “ஏய்...உங்கூட நான் வரக்கூடாதுடி” என்று சொல்ல, அனைவரும் ”ஓ” வென்று கத்தி சிரிக்க, நாடகம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் பிரம்படி காலையும் முதுகையும் பதம்பார்க்க,
இனிதே நிறைவடைந்தது நாடகம்.
.........................................................................................................
நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது நடந்த நிகழ்வு இது. ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்மொழிவழி கற்றலில் படித்துவிட்டு , ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலமொழிவழி கற்றலில் , புதுப்பள்ளி ஒன்றில் சேர்ந்தேன்.ஆகவே, அப்போதைய என்னுடைய ஆங்கில அறிவு எப்படி இருக்கும் என்று சொல்ல தேவையில்லை. கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியாக வினாடி வினா ஏற்பாடு ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள்.
கேள்வியும் பதிலும் முன்னமே கொடுக்கபட்டுவிட்டது.யார் கேள்வி கேட்பார், யார் அதற்கு பதில் சொல்லவேண்டும் என்பதையும் ஒத்திகை பார்த்தாயிற்று. நல்ல்வேளையாக நான் ஒரு கேள்விக்கு மட்டும் விடை சொல்வதாய் அமைந்திருந்தது அவ்வினாடி வினா. ஒத்திகை சமயங்களில் எல்லாம் அனைவரும் வட்டமாக அமர்ந்திருந்து பயிற்சி எடுத்தோம். விழா நாளும் வந்தது.

மேடையில் இருபுறமும் இருக்கைகள் போட்டு வினாடி வினா ஆரம்பமானது.மைக்கை என்னிடமிருந்து எட்டு இருக்கைகள் தள்ளி நிறுத்தியிருந்தார்கள். அவ்வளவு தூரம் நடந்து சென்று, பதில் சொல்லவேண்டும் என்று பயமும் தடுமாற்றமும் என்னுள்.பலமுறை என் பதிலை சொல்லிபார்த்துக் கொண்டும், மறந்துவிடக்கூடாதென்று ஆத்தா பராசக்தியையும் வேண்டிக்கொண்டிருந்தேன்.
வினாடி வினா நல்லபடியாக நடந்துகொண்டிருந்தது. மற்ற அனைவரும் தைரியமாக போய், புன்னகைத்தபடியே மைக்கில் கேள்வியும் பதிலும் சொல்லிக்கொண்டிருந்தனர்.பார்த்துக்கொண்டிருந்த எனக்கும் சிறிது சிறிதாக நம்பிக்கை பிறந்தது. நாமும் சிரித்தமுகத்துடன் சென்று பதில் சொல்ல்வேண்டும் என்று முடிவு எடுத்துக்கொண்டேன். எனக்கான கேள்வியை மைக்கின் அருகே அமர்ந்திருந்த என் தோழி கேட்டாள்.

நானும் ஒயிலாக நடந்து சென்று, புன்னகையுடன் எனது பதிலை சொன்னேன். சொன்னதுதான் தாமதம், மொத்த பள்ளியும். சிறப்பு விருந்தினர்களும் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். அட அப்படி என்ன பதில் சொன்னேன் என்று கேட்கிறீர்களா?? “Pass” என்றுதான் சொன்னேன். இதற்கு ஒரு சிரிப்பா!!


56 comments:

நட்புடன் ஜமால் said...

இங்கேயும் 9ஆம் வகுப்பா ...

இய‌ற்கை said...

:-))))))))

இய‌ற்கை said...

neenga pass nga..:-))))

நட்புடன் ஜமால் said...

9ஆம் வகுப்பு நாடக நிகழ்வு கிட்டத்தட்ட பலருக்கு இம்மாதிரியான சம்பவங்கள் நடந்து இருக்கும் போல

எனக்கு 12ஆம் வகுப்பின் போது நாடகத்தில் நடந்தது ஒன்று - வாய்ப்பு கொடுத்திட்டியள் பதிவேற்றிவிடுவோம்

நட்புடன் ஜமால் said...

"pass" மேட்டர் ரொம்ப ஜோர்

5ஆவதிலேயே இப்படியா - நல்ல ரசனைங்க உங்களுக்கு

நீங்க “பாஸ்” பாஸ்

தேவன் மாயம் said...

நான் பேந்த பேந்த மேடையிலேயே நின்று கொண்டிருந்தேன். ஏற்கனவே இருந்த குழப்பம் தீர்வதற்குள், அடுத்த காட்சிக்கு வந்த என் அக்காவின் கணவனான , என் தோழி ரோஸ்மேரி, கடகடவென்று வசனங்களை ஒப்பித்துவிட்டு, “ வாடி உள்ளே” என்று என் கையை பிடித்து இழுத்தாள். நான் அழுது விடும் குரலில், “ஏய்...உங்கூட நான் வரக்கூடாதுடி” என்று சொல்ல, அனைவரும் ”ஓ” வென்று கத்தி சிரிக்க, நாடகம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் பிரம்படி காலையும் முதுகையும் பதம்பார்க்க,
இனிதே நிறைவடைந்தது நாடகம்.///

பரவாயில்லையே!
இப்படி முடிவதுதான்
கலகலப்பா
இருக்கும்!

தேவன் மாயம் said...

ஜமாலு நாடகத்தில் நடித்ததுண்டா?

nithya said...

டென்ஷன் ஆக இருந்த பொழுதை மாற்றி சிரிக்க வைத்த ரசனைக்காரியிடம் எனது வாழ்த்தும் நன்றியும் சென்றடையட்டும்.

R.Gopi said...

//வாடி உள்ளே” என்று என் கையை பிடித்து இழுத்தாள். நான் அழுது விடும் குரலில், “ஏய்...உங்கூட நான் வரக்கூடாதுடி” என்று சொல்ல, அனைவரும் ”ஓ” வென்று கத்தி சிரிக்க, நாடகம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் பிரம்படி காலையும் முதுகையும் பதம்பார்க்க,
இனிதே நிறைவடைந்தது நாடகம்.//

சரியான காமெடிதான்..........

//“Pass” என்றுதான் சொன்னேன். இதற்கு ஒரு சிரிப்பா!!//

oththigai paaththu, aaththaa paraasakthiya எல்லாம் vendindu kadaisila sonnadhu PASS. இது
besh, besh.........

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நானும் ஒயிலாக நடந்து சென்று, புன்னகையுடன் எனது பதிலை சொன்னேன். சொன்னதுதான் தாமதம், மொத்த பள்ளியும். சிறப்பு விருந்தினர்களும் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். அட அப்படி என்ன பதில் சொன்னேன் என்று கேட்கிறீர்களா?? “Pass” என்றுதான் சொன்னேன். இதற்கு ஒரு சிரிப்பா!!//

ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆறா வகுப்புக்கு மாறுவதற்கு என்ன செய்தாய் என்றுதானே கேள்வி கேட்கப்பட்டது?!

நல்ல நகைச்சுவை உணர்வு ரசனைக்காரவுகளே!!

S.A. நவாஸுதீன் said...

நான் பேந்த பேந்த மேடையிலேயே நின்று கொண்டிருந்தேன். ஏற்கனவே இருந்த குழப்பம் தீர்வதற்குள், அடுத்த காட்சிக்கு வந்த என் அக்காவின் கணவனான , என் தோழி ரோஸ்மேரி, கடகடவென்று வசனங்களை ஒப்பித்துவிட்டு, “ வாடி உள்ளே” என்று என் கையை பிடித்து இழுத்தாள். நான் அழுது விடும் குரலில், “ஏய்...உங்கூட நான் வரக்கூடாதுடி” என்று சொல்ல, அனைவரும் ”ஓ” வென்று கத்தி சிரிக்க, நாடகம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் பிரம்படி காலையும் முதுகையும் பதம்பார்க்க, இனிதே நிறைவடைந்தது நாடகம்

ஹா ஹா ஹா. சாரி ஆபீஸ்ல சத்தம் போட்டு சிரிக்க முடியல. சூப்பர்

வால்பையன் said...

இப்போ ஒரு நாடகம் போடுங்களேன்!

S.A. நவாஸுதீன் said...

நானும் ஒயிலாக நடந்து சென்று, புன்னகையுடன் எனது பதிலை சொன்னேன். சொன்னதுதான் தாமதம், மொத்த பள்ளியும். சிறப்பு விருந்தினர்களும் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். அட அப்படி என்ன பதில் சொன்னேன் என்று கேட்கிறீர்களா?? “Pass” என்றுதான் சொன்னேன். இதற்கு ஒரு சிரிப்பா!!

இதுக்கா இம்புட்டு டென்சன். அசத்தல்தான் போங்க

அன்புடன் அருணா said...

ஓ நீங்க சூப்பர் ஸ்டூடன்டா???கலக்கிருக்கீங்க!!!

அக்பர் said...

இனிமையான நினைவுகள்.

அப்பாவி முரு said...

"நான் உங்கூடயெல்லாம் வரக்கூடாதுடி”

:)))))))

Vidhoosh said...

பாஸ் சொன்னது கூட பரவால்லை. இதுக்கு சிரிப்பங்களான்னு கேட்டீங்க பாருங்க, உங்க ரசனை ரசவெடி

நாமக்கல் சிபி said...

//நான் பேந்த பேந்த மேடையிலேயே நின்று கொண்டிருந்தேன். ஏற்கனவே இருந்த குழப்பம் தீர்வதற்குள், அடுத்த காட்சிக்கு வந்த என் அக்காவின் கணவனான , என் தோழி ரோஸ்மேரி, கடகடவென்று வசனங்களை ஒப்பித்துவிட்டு, “ வாடி உள்ளே” என்று என் கையை பிடித்து இழுத்தாள். நான் அழுது விடும் குரலில், “ஏய்...உங்கூட நான் வரக்கூடாதுடி” என்று சொல்ல, அனைவரும் ”ஓ” வென்று கத்தி சிரிக்க, நாடகம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் பிரம்படி காலையும் முதுகையும் பதம்பார்க்க,
இனிதே நிறைவடைந்தது நாடகம்.//

ஹெஹெ! நல்ல டைரக்ஷன்!

சிரிப்பை நிப்பாட்ட முடியலை என்னால!

நாமக்கல் சிபி said...

//பரவாயில்லையே!
இப்படி முடிவதுதான்
கலகலப்பா
இருக்கும்!//

:))

ஜெஸ்வந்தி said...

இனிமையான நினைவுகள். இன்றைக்கு எல்லாரும் ஒன்பதாம் வகுப்பிலே படிக்கப் போய் விட்டீர்கள்.!

பிரியமுடன்.........வசந்த் said...

//ஒரு வீட்டில் இரு மருமகள்களும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அமைந்த நாடகம் அது.//

நடக்குற காரியமா ராஜி?

பிரியமுடன்.........வசந்த் said...

// நான் இளைய மருமகளாயும்//

அப்பவே ட்ரெயினிங் எடுத்தாச்சா?

பிரியமுடன்.........வசந்த் said...

//என்னை அழைத்து செல்வதற்கு பதில் என் அக்காவை அழைத்து சென்று விட்டாள். //

ஹா ஹா ஹா

பிரியமுடன்.........வசந்த் said...

//அனைவரும் ”ஓ” வென்று கத்தி சிரிக்க, நாடகம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் பிரம்படி காலையும் முதுகையும் பதம்பார்க்க,//

ரத்தம் ஒண்ணும் வரலியே?

பிரியமுடன்.........வசந்த் said...

//அப்போதைய என்னுடைய ஆங்கில அறிவு எப்படி இருக்கும் என்று சொல்ல தேவையில்லை.//

இப்போ நிறைய இருக்கோ?

பிரியமுடன்.........வசந்த் said...

//“Pass” என்றுதான் சொன்னேன். இதற்கு ஒரு சிரிப்பா!!//

இதுக்கு சிரிக்காம அழுவாங்களா என்ன?

பிரியமுடன்.........வசந்த் said...

சிரிப்பா இருக்குங்க இன்னும் அடக்க முடியல.......

jackiesekar said...

என்ன பதில் சொன்னேன் என்று கேட்கிறீர்களா?? “Pass” என்றுதான் சொன்னேன். இதற்கு ஒரு சிரிப்பா!!


பின்ன சிரிக்காம???

sakthi said...

ஏய்...உங்கூட நான் வரக்கூடாதுடி” என்று சொல்ல, அனைவரும் ”ஓ” வென்று கத்தி சிரிக்க, நாடகம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் பிரம்படி காலையும் முதுகையும் பதம்பார்க்க,
இனிதே நிறைவடைந்தது நாடகம்

நல்ல நாடகம் தான் போங்க

அ.மு.செய்யது said...

உங்கள் கனாக்கால அனுபவங்கள் எனக்குள்ளும் பல ஞாபகங்களை கிளறி விட்டது.

நானும் பல நாடகங்களில் நடித்து வசனங்களை மறந்திருக்கிறேன்.வினாடி வினாவிலும் பாஸ் சொல்லியிருக்கிறேன்.

அதெல்லாம் ஒரு ஜாலி..இந்த‌ மாதிரி நாட‌கங்க‌ளில் ந‌டித்தால் அடிக்க‌டி கிளாஸ‌ க‌ட்ட‌டிச்சி ஒத்திகைக்கு போயிர‌லாம்.

அபுஅஃப்ஸர் said...

//ஒரு வீட்டில் இரு மருமகள்களும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி//

சமூக சேவை... நடக்குற காரியமா

அபுஅஃப்ஸர் said...

//நான் இளைய மருமகளாயும்//

நல்ல ட்ரைனிங்தான் போங்கோ

அபுஅஃப்ஸர் said...

//நான் பேந்த பேந்த மேடையிலேயே நின்று கொண்டிருந்தேன்//


இதுவே ஒரு பெரிய ஆக்ட் தானே

ஹா ஹா ரசிச்சேன் முழுதும்

செந்தழல் ரவி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

coolzkarthi said...

அக்கா நல்ல நகைச்சுவை.... சிரித்து மகிழ்ந்தேன்....

ஜீவன் said...

நல்ல நகைச்சுவை பதிவு! சரி என்ன கேள்விக்கு pass நு சொன்னீங்க ?

குடந்தை அன்புமணி said...

//நான் பேந்த பேந்த மேடையிலேயே நின்று கொண்டிருந்தேன். ஏற்கனவே இருந்த குழப்பம் தீர்வதற்குள், அடுத்த காட்சிக்கு வந்த என் அக்காவின் கணவனான , என் தோழி ரோஸ்மேரி, கடகடவென்று வசனங்களை ஒப்பித்துவிட்டு, “ வாடி உள்ளே” என்று என் கையை பிடித்து இழுத்தாள். நான் அழுது விடும் குரலில், “ஏய்...உங்கூட நான் வரக்கூடாதுடி” என்று சொல்ல, அனைவரும் ”ஓ” வென்று கத்தி சிரிக்க, நாடகம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் பிரம்படி காலையும் முதுகையும் பதம்பார்க்க, இனிதே நிறைவடைந்தது நாடகம்//

சிரிப்பு எங்களின் வயிறை பதம் பார்த்துவிட்டது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஏய்...உங்கூட நான் வரக்கூடாதுடி” என்று சொல்ல /

haahaaahaaaaa

:))))))))))

ஆப்பு said...

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

सुREஷ் कुMAர் said...

ஹாய் ரசனைக்காரி... http://wettipedia.blogspot.com/2009/07/blog-post_17.html க்கு வந்து விழாவில் கலந்துகொள்ளவும்..

सुREஷ் कुMAர் said...

//
ஏய்...உங்கூட நான் வரக்கூடாதுடி” என்று சொல்ல, அனைவரும் ”ஓ” வென்று கத்தி சிரிக்க
//
ஹாஹாஹாஹாஹா..

நங்களும் சிரிச்சுட்டோம்ள..

सुREஷ் कुMAர் said...

அப்போ நடந்தத இங்கன கொட்டி சிரிக்கவேக்கனும்னே இவ்ளோநாளா வெய்ட் பண்ணிட்டு இருந்தியளோ..

கொசுவத்தி சூப்பர்.. செமையா கடிச்சிடுச்சு..

சூரியன் said...

pass சூப்பர் :)

இய‌ற்கை said...

என் பிளாக்கில் விருது காத்திருக்கிறது
http://iyarkai09.blogspot.com/

குடந்தை அன்புமணி said...

தங்களுக்கு ஒரு விருது... என் கடைக்கு வரவும்...
http://anbuvanam.blogspot.com/2009/07/blog-post_21.html#links

இய‌ற்கை said...

விருது வாங்க என் வலைப்பூவுக்கு வாங்க‌

வெட்டிப்பயல் said...

:-)

அபி அப்பா said...

அருமையா இருக்கு உங்க அனுபவம்:-)))))

Positive Anthony Muthu said...

நல்ல நகைச்சுவை.

இளவயது நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை.

Positive Anthony Muthu said...

நல்ல நகைச்சுவை.

இளவயது நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை.

Positive Anthony Muthu said...

நல்ல நகைச்சுவை.

இளவயது நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை.

சாதிக் அலி said...

எல்லோரையும் சிரிக்க வைத்து ஆசிரியரை மட்டும் டென்சன் படுத்தி விட்டீர்களே.நல்ல ஜோக். சிரிப்பை அடக்க முடியவில்லை.வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்களுடன் விருதும் கொடுத்திருக்கேன் வாங்கிக்கோங்க!!

படுக்காளி said...

நண்பர் கோபியின் வலைப் பதிவில் இருந்து தாவி வந்தடைந்தேன்.

நல்லா இருக்கே.

பழைய நினைவுகள் என்றுமே இனிமைதான். எனக்கு நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு இது.

சரித்திர நாடகம். தான் பேச வேண்டிய வசனத்தை நெட்டுரு போட்டுக் கொண்டு சைடு தட்டி மறைவில் நண்பர். அவர் செல்ல வேண்டிய நேரம் வந்தும் கூட, படிக்கும் மும்முரத்தில் அங்கே நின்று கொண்டு இருக்கிறார். பக்கத்தில் உள்ள நண்பர் "போடா... உன் சீனு வந்தாச்சு என சொல்ல" அவசரம் அவசரமாய் மேடைக்குள் வந்து விட்டார். வந்த அவசரத்தில் அணிந்திருந்த மூக்கு கண்ணாடி கழட்ட வில்லை. சரித்திர நாடகத்தில் ரிம் லெஸ் கிளாஸ்....... எப்படி......

நல்ல வேளை முதல் சில நிமிடங்களில் கழற்றி விட்டதால் கொஞ்சம் பேருக்கு மட்டும் தெரிந்த்து.

Hindu Marriages In India said...

படு சூப்பர்

வெங்கட் நாகராஜ் said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

http://blogintamil.blogspot.in/2014/11/blog-post_67.html

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.