Tuesday, May 19, 2009

ரசனைக்காரியிடம் சில கேள்விகள்..


இப்பதிவை எழுத அழைத்தவர் தேவன்மயம்.


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
ராஜேஸ்வரியா? ரசனைக்காரியா?
முதல் பெயர், அம்மா அப்பா வைத்தது.அப்பெயருக்கான பின்புலம்,நிறைய பேருக்கு உள்ளது போல ஜாதகம்தான்.
இரண்டாவது பெயர்,எனக்கு நானே வைத்துக்கொண்டது.ரசனை என்பது அனைவருக்கும் பொதுவானது.எதை,எங்கே,எப்படி என்ற நிலைப்பாடு மட்டுமே மற்றவரிடமிருந்து வேறுபடுத்தும்.
போர்முனையில் போட்டோகிராபியும்,பசிமயக்கத்தில் குக்கரியும் அவரவர் கொண்டுள்ள மனநிலைப்பாட்டில்,ரசனையை பிரதிபலிக்கும்.அந்நிலைப்பாட்டிற்கான ,எனக்கானதொரு பக்குவநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால்,”ரசனைக்காரி” என்று பெயர் உருவாக காரணம் ஆயிற்று.
இரண்டு பெயர்களுமே எனக்கு பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அழுகையினுடைய மூலம், பொதுவாக அனுதாபத்தை ஏற்படுத்தவும்,இயலாமையின் வெளிப்பாடாகவும் இருக்கும்.அனுதாப அழுகை என்பது அழுக்கேறிப்போன,அருவருப்பான பசபசப்பு.இயலாமையின் அழுகை,ஏற்றுக்கொள்ளப்பட்டு மருந்திடப்படவேண்டியவை.கடைசியாக நான் மனம் வருந்தியது நேற்று.(மே 18ஆம் தேதி,2009ஆம் ஆண்டு ,தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
அம்மா கையால சமைத்த உணவு எல்லாமே.குறிப்பாக மீன்குழம்பும் மட்டன் கோலா உருண்டையும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ஒருவருடனான நட்பு,நம்மில் பல பரிமாணங்களை உணர்த்தவும் ,வெளிப்படுத்தவும் உதவும். ஆதலால் நட்பில் நான் கொஞ்சம் நிதானிதான்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?அருவியில்தான்.அதில் மருத்துவ குணமும் உண்டு.கடலில் குளித்துவிட்டு வந்தால் மறுபடியும் குளிக்கவேண்டி இருக்கும்.ஆனால் அருவியில் அவ்வாறூ கிடையாது.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள் + உடை அணிந்திருக்கும் விதம் + அவருடைய வார்த்தைகள்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விசயம்- புது விசயங்களை கற்றுக்கொண்டிருப்பது.
பிடிக்காத விசயம்- நிறைய விசயங்களை தெரிந்துகொள்ளாமலிருப்பது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
மன்னிக்கவும்.இன்னும் திருமணம் ஆகவில்லை.


10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் அப்பா,அம்மா மற்றும் என் தோழி கார்த்திகா.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வெண்மையான புன்னகை.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
இந்த கேள்விகளை மட்டுமே ....


13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கையில் அடக்க முடியா காற்றின் வண்ணம்.அதனால் மட்டுமே, வார்த்தைகள் ,எல்லைகளற்று இருக்கும்.

14.பிடித்த மணம்?
அன்பினால் உதிர்க்கும் சொற்களின் மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
இவரின் கவிதைகள் மனத்தில் எப்பொழுதும் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இவருடைய “இரவிலும் உதிக்கும் வானவில்லே” கவிதை மிகவும் அற்புதமாய் இருக்கும். அவர் நட்புடன் ஜமால் .

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அவருடைய அனைத்து இடுக்கைகளும் ஏதாவது ஒரு செய்தி சொல்லும். குறிப்பாக சொல்ல்வேண்டுமென்றால்,கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கும் இந்த இடுக்கையை சென்று பாருங்களேன்.

17. பிடித்த விளையாட்டு?
நிறைய பேருடன் சேர்ந்து விளையாடும் எல்லாவிளையாட்டுமே. குறிப்பாக கோ-கோ ரொம்ப பிடிக்கும்.

18.கண்ணாடி அணிபவரா?
உலகின் மெய்ப்பொருள் காணவிரும்புவதால், கண்ணாடி (மனத்திரை) அணியும் பழக்கமில்லை.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
யதார்த்தமற்ற படங்கள் தவிர்த்து, மற்ற அனைத்தும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க

21.பிடித்த பருவ காலம் எது?
அனைத்துப்பருவங்களுமே ரசிப்புக்குரியதுதான்.

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
சுஜாதாவின் “கணையாழியின் கடைசிப்பக்கங்கள்”.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அடிக்கடி மாட்டேன்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
மனிதர்களின் மனங்கள்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
உண்டு.(மனிதர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு தனித்திறமை கண்டிப்பாய் இருக்கும்.அதை கண்டுபிடிப்பதில்தான் அவனுடைய வாழ்வின் ஏற்ற தாழ்வு இருக்கிறது)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
எதையும் ஏற்றுக்கொள்ள என்னை பக்குவப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எனக்குள்ளே இருக்கும் கடவுளோடு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறான்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அடிக்கடி சென்று வரும் வான்வெளி மற்றும் பால்வீதி.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்ப இருக்கிறது கூட நல்லா இருக்கே.

31.மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
ஏதும் செய்ய முடியாதே..சரி பாதில்ல அவங்க.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அனுபவத்தின் மூலமும்,ஆதலால் உருவாகக்கூடிய செயல்கள் மூலமும் உனக்காக நீ எழுதும் வரலாறு.

இந்த தொடர்பதிவுக்கு நான் அழைக்கும் நபர் நண்பர் நட்புடன் ஜமால்.

56 comments:

இராகவன் நைஜிரியா said...

me the first????????????????

இராகவன் நைஜிரியா said...

ரசனையான கேள்விகிகளுக்கு
ரசனையான பதில்கள்
ரசனைக்காரியிடம் இருந்து.

Rajeswari said...

ஆம் அண்ணா..நீங்க தான் பர்ஸ்ட்

இராகவன் நைஜிரியா said...

// 11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வெண்மையான புன்னகை.//

புன்னகை - பொன்னகையை விட பெரிது.

தேவன் மாயம் said...

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கையில் அடக்க முடியா காற்றின் வண்ணம்.அதனால் மட்டுமே, வார்த்தைகள் ,எல்லைகளற்று இருக்கும்.///

பதில்களில் கவித்துவம் கொல்லுதே!!

இராகவன் நைஜிரியா said...

ஜமாலை நான் மாட்டி விடலாம் என்று நினைத்து இருந்தேன். நீங்க முந்திகிட்டீங்க

இராகவன் நைஜிரியா said...

இந்த இடுகைக்கு கமெண்ட் மாடரேஷன் தேவைங்களா...

தேவன் மாயம் said...

18.கண்ணாடி அணிபவரா?
உலகின் மெய்ப்பொருள் காணவிரும்புவதால், கண்ணாடி (மனத்திரை) அணியும் பழக்கமில்லை.///

அப்பப்பா!
தாங்கமுடியலடா சாமி!!

இராகவன் நைஜிரியா said...

அனானியை தூக்கிட்டு, கமெண்ட் மாடரேஷனை ரிலீஸ் பண்ணுங்க

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப நாள் கழிச்சு... நான் தான் பர்ஸ்டூ...

தேவன் மாயம் said...

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அடிக்கடி சென்று வரும் வான்வெளி மற்றும் பால்வீதி.
///
இப்ப்டி ரசனையான பதிலெல்லாம் யார் எழுத முடியும்!!

இராகவன் நைஜிரியா said...

// 3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும். //

இதுக்கு சரி. நீங்க சமைச்ச சாப்பாடு உங்களுக்கு பிடிக்குமா?

(பி.கு. : நான் நல்லா சமைப்பேன்... நான் சமைக்கும் சாப்பாடு எனக்கு ரொம்ப பிடிக்கும்)

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அடிக்கடி சென்று வரும் வான்வெளி மற்றும் பால்வீதி.
///
இப்ப்டி ரசனையான பதிலெல்லாம் யார் எழுத முடியும்!! //

ரசனைக்காரிதான். இதுல சந்தேக வேறயா.

Rajeswari said...

இராகவன் நைஜிரியா said...
// 3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும். //

இதுக்கு சரி. நீங்க சமைச்ச சாப்பாடு உங்களுக்கு பிடிக்குமா?

)//

அய்யய்யோ மாட்டிக்கிட்டேனே.

Rajeswari said...

thevanmayam said...
18.கண்ணாடி அணிபவரா?
உலகின் மெய்ப்பொருள் காணவிரும்புவதால், கண்ணாடி (மனத்திரை) அணியும் பழக்கமில்லை.///

அப்பப்பா!
தாங்கமுடியலடா சாமி!!

//

கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க தேவா சார்

Rajeswari said...

இராகவன் நைஜிரியா said...
அனானியை தூக்கிட்டு, கமெண்ட் மாடரேஷனை ரிலீஸ் பண்ணுங்க
//

பண்ணியாச்சு அண்ணா

இராகவன் நைஜிரியா said...

// Rajeswari said...

இராகவன் நைஜிரியா said...
// 3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும். //

இதுக்கு சரி. நீங்க சமைச்ச சாப்பாடு உங்களுக்கு பிடிக்குமா?

)//

அய்யய்யோ மாட்டிக்கிட்டேனே.//

ஹா... ஹா... மாட்டிகிட்டீங்களா..

இராகவன் நைஜிரியா said...

அப்படியெ அனானியையும் தூக்கிடுங்க.

தேவன் மாயம் said...

சே!! சே! ”””பதிலெல்லாம் அருமைங்க!!””ன்னு எழுதப்புடிக்கலை!!கலாய்க்காமல் இருக்கவும் முடியவில்லை!!

தேவன் மாயம் said...

இராகவன் அண்ணன் ஆரம்பிச்சிட்டாரா கச்சேரியை!

இராகவன் நைஜிரியா said...

டெஸ்ட்...

Rajeswari said...

அய்யோ செட்டிங்ஸ் சொதப்புதே..

இராகவன் நைஜிரியா said...

கமெண்ட் மாடரேஷன் தூக்கியாச்சுங்க.


கும்மி அடிப்பவர்கள் எல்லாம் அடிக்கலாம்.

இராகவன் நைஜிரியா said...

// Rajeswari said...

அய்யோ செட்டிங்ஸ் சொதப்புதே..//

டீச்சருக்கே சொதப்பினா... நாங்க எல்லாம் என்ன சொல்வது.

பார்த்துப் பொறுமையா பண்ணுங்க

இராகவன் நைஜிரியா said...

அலுவலகத்தில் வேலை அதிகம் இருப்பதால் நான் கொஞ்ச நேரம் கழித்து வருகின்றேன்.

அதற்குள்ளாக தங்கச்சி சரி செய்து வைக்கின்றார்களா என யாராவது வாட்ச் பண்ணி வைங்கப்பா..

Rajeswari said...

சரியாகி விட்டது என்று நினைக்கிறேன்

அப்துல்மாலிக் said...

//கடைசியாக அழுதது எப்பொழுது?

அழுகையினுடைய மூலம், பொதுவாக அனுதாபத்தை ஏற்படுத்தவும்,இயலாமையின் வெளிப்பாடாகவும் இருக்கும்.அனுதாப அழுகை என்பது அழுக்கேறிப்போன,அருவருப்பான பசபசப்பு.இயலாமையின் அழுகை,ஏற்றுக்கொள்ளப்பட்டு மருந்திடப்படவேண்டியவை.//


ரசிச்ச் பதில்... அப்பாடா இவ்வளவு இருக்கா

அப்துல்மாலிக் said...

//வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கையில் அடக்க முடியா காற்றின் வண்ணம்.அதனால் மட்டுமே, வார்த்தைகள் ,எல்லைகளற்று இருக்கும்./

சூ.. யப்பா

ரொம்ப ரசிக்கிறீங்களே, காற்றுக்கு என்னா கலர்னு சொல்லலியே

அப்துல்மாலிக் said...

//வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அனுபவத்தின் மூலமும்,ஆதலால் உருவாகக்கூடிய செயல்கள் மூலமும் உனக்காக நீ எழுதும் வரலாறு///

உண்மையானது..

பதில்கள் அனைத்தும் எதார்தமான பதில்கள், உங்களை பற்றிய தெரிந்துக்கொள்ள இது ஒரு நல்ல பதிவு

S.A. நவாஸுதீன் said...

சில பதில்களில் எதார்த்தம் குறைவாக இருந்தாலும்,எல்லா பதில்களிலும் ரசனைக்கு குறைவில்லை.

மச்சான் ஜமால், மாட்டிக்கிட்டியா?

அகநாழிகை said...

ரசனையோடு சொல்லியிருந்தது இயல்பாக இருக்கிறது.
பதில்களின் எளிமை பிடித்திருக்கிறது.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

அப்துல்மாலிக் said...

//S.A. நவாஸுதீன் said...
சில பதில்களில் எதார்த்தம் குறைவாக இருந்தாலும்,எல்லா பதில்களிலும் ரசனைக்கு குறைவில்லை.

மச்சான் ஜமால், மாட்டிக்கிட்டியா
//

ரிப்பீட்டேய்

அப்துல்மாலிக் said...

//இராகவன் நைஜிரியா said...
ஜமாலை நான் மாட்டி விடலாம் என்று நினைத்து இருந்தேன். நீங்க முந்திகிட்டீங்க
///

அண்ணாத்தே உங்களுக்கு ஆளா கிடைக்காது????? கலக்குங்க‌

வேத்தியன் said...

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ஒருவருடனான நட்பு,நம்மில் பல பரிமாணங்களை உணர்த்தவும் ,வெளிப்படுத்தவும் உதவும். ஆதலால் நட்பில் நான் கொஞ்சம் நிதானிதான்.//

நல்ல கொள்கை...

வேத்தியன் said...

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விசயம்- புது விசயங்களை கற்றுக்கொண்டிருப்பது.
பிடிக்காத விசயம்- நிறைய விசயங்களை தெரிந்துகொள்ளாமலிருப்பது.
//

ஐயையோ புரியலையே...
:-)

வேத்தியன் said...

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கையில் அடக்க முடியா காற்றின் வண்ணம்.அதனால் மட்டுமே, வார்த்தைகள் ,எல்லைகளற்று இருக்கும்.//

ஆஹா நீங்க ஒரிஜினல் ரசனைக்காரி தான்...
என்ன ரசனை உங்களுக்கு???
:-)

வேத்தியன் said...

ஜமால் அண்ணா கலக்குக...

வேத்தியன் said...

நிறைய பேருடன் சேர்ந்து விளையாடும் எல்லாவிளையாட்டுமே. குறிப்பாக கோ-கோ ரொம்ப பிடிக்கும்.//

கோ-கோ???
எப்பிடி விளையாடுவது???

வேத்தியன் said...

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
சுஜாதாவின் “கணையாழியின் கடைசிப்பக்கங்கள்”.//

கிடைச்சுருச்சா???
pdfல இருந்தா எங்க எடுத்தீங்கன்னு லிங்க் கொடுக்க முடியுமா???
ரொம்ப நாளா தேடியும் கிடைக்கலை...

வேத்தியன் said...

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
மனிதர்களின் மனங்கள்.
//

ஆஹா கலக்கீட்டேள்...
பேஷ் பேஷ்...
:-)

வேத்தியன் said...

பதில்கள் எல்லாமே ரொம்ப ரசிக்கக்கூடியதாக இருந்தது...
அருமை...

Rajeswari said...

வேத்தியன் said...
22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
சுஜாதாவின் “கணையாழியின் கடைசிப்பக்கங்கள்”.//

கிடைச்சுருச்சா???
pdfல இருந்தா எங்க எடுத்தீங்கன்னு லிங்க் கொடுக்க முடியுமா???
ரொம்ப நாளா தேடியும் கிடைக்கலை...//

pdf இல்லை .புத்தகமாத்தான் இருக்கு

Rajeswari said...

இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே http://uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=111 செல்லவும்

நட்புடன் ஜமால் said...

மிக்க இரசனையுடன் இருந்தது தங்கள் பதில்(கள்).

வித்தியாசமாயும் இருந்தன.

நட்புடன் ஜமால் said...

என்னையுமா!

சரி பார்க்கலாம் ...

ப்ரியமுடன் வசந்த் said...

//25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
மனிதர்களின் மனங்கள்.//

ரசனையோ ரசனை

ஆ.சுதா said...

உங்களை பற்றி நிரைய தெரிந்தக் கொள்ள முடிந்தது. நல்லவகையில் எழுதி இருக்கீங்க.

|அழுகையினுடைய மூலம்,
பொதுவாக அனுதாபத்தை ஏற்படுத்தவும்,இயலாமையின் வெளிப்பாடாகவும் இருக்கும்.அனுதாப அழுகை என்பது அழுக்கேறிப்போன,அருவருப்பான பசபசப்பு.இயலாமையின் அழுகை,||

அழுகையைப் பற்றி ஏன் எல்லோருக்கும் இப்படி ஒரு என்னம்
எனக்கு இதில் மாற்று கருத்து உண்டு,
அழுகையைபற்றி என்னிடம் ஒரு கவிதை உண்டு சீக்கிரம் பதிவிடுவேன்.
(என் வலை எனக்கு கிடைத்ததும்)

வேத்தியன் said...

Rajeswari said...
இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே http://uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=111 செல்லவும்//

Thanks for e info...

நசரேயன் said...

கும்மி எல்லாம் முடிஞ்சி போச்சா?

நசரேயன் said...

நான் தான் கடைசி ..பேட்டி நல்லா இருக்கு

சுந்தர் said...

வார்த்தைகளில் விளையாடி இருக்கீங்க, மிக்க அருமை.

coolzkarthi said...

அக்க சான்ஸ் இல்ல....கடவுளிடம் சண்டைபோடும் சாத்தான்....வாவ்! நல்ல வார்த்தை விளையாட்டு....

ஆதவா said...

ஒவ்வொரு பதில்களையும் நன்கு நிதானித்துப் படித்தேன். ஓரளவு உங்களை அறிய உதவியாக இருந்தது. சில பதில்கள் கவித்துமாகவும் இருந்தது.. ஒருசில பதில்களுக்கு உங்களின் மனநிலை பிரதிபலிப்பதாகவும், இன்னும் சில கேள்விகளுக்கு மறைக்கும்படியான (அல்லது அப்படியானதொரு தோற்றத்தில்) பதில் இருப்பதாகவும் எண்ணுகிறேன்.

பெரும்பாலான பதில்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன.

உங்கள் வயது நாற்பதைத் தாண்டி ஐம்பதில் நுழைந்திருக்கும் என்று நினைத்தேனே!!!!???!!!

Suresh said...

உங்களை பற்றி புரிந்து கொள்ள உதவியது இந்த பதிவு...

நேர்மையான பதில்கள் தோழி...

அன்பு நண்பன் ஜமாலுக்கு வாழ்த்துகள்


//வெண்மையான புன்னகை.//

//வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
மனிதர்களின் மனங்கள்.//

இது ரொண்டும் மிக சிறப்பு நல்ல கவிதை

SK said...

எல்லாரும் சொன்னா போல ரசிச்சு பதில் எழுதி இருக்கீங்க..

நட்புடன் ஜமால் said...

\\உங்கள் வயது நாற்பதைத் தாண்டி ஐம்பதில் நுழைந்திருக்கும் என்று நினைத்தேனே!!!!???!!!\\

me too ...