இந்த வருடம் பொங்கலன்றுதான் புத்தக கண்காட்சிக்கு செல்ல நேர்ந்தது என்பது சிறு வருத்தம் என்றாலும், என்னவரின் பர்சை பலமாக பதம் பார்த்ததை நினைக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மொத்தம் இருபது புத்தகங்கள் வாங்கி உள்ளேன். புத்தக கண்காட்சி முடிவதற்குள் எத்தனை புத்தகங்கள் படித்து முடிக்கிறேனோ , அத்தனை புத்தகங்கள் (வேறு) வாங்கி தருவதாக தங்கராசு கூறியிருக்கிறார். பார்க்கலாம் 22ம் தேதி வரை.
மற்றபடி, அடுத்த வருடத்திற்குள்ளாவது அத்தனை புத்தகங்களையும் படித்துவிடவேண்டும் என்று உறுதி மொழி எடுத்துள்ளேன் என்னுள். நான் வாங்கிய புத்தகங்களில் இரண்டு புத்தகங்கள் இணையத்தில் இருந்த விமர்சனம் பார்த்து வாங்கியது. ஒன்று, வம்சியின் வெளியீடான 6174. டான் ப்ரௌனின் புத்தகங்கள் அனைத்தையும் படித்துள்ளேன். அதே மாதிரியான புத்தகங்கள் தமிழில் படிக்க கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருக்கிறேன். ஆனால் தேடியது இல்லை.
சில மாதங்களுக்கு முன் அதிஷா அவர்களின் ப்ளாக்கில், 6174இன் விமர்சனம் படித்தேன். நன்றாக இருந்தது. உடனே முடிவு செய்தேன் வாங்கி விடவேண்டும் என்று. இதோ வாங்கியும் விட்டேன் .ஆனால் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை . இரண்டாவது புத்தகம் விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை. முகநூலை புரட்டும்போது அடிக்கடி கண்ணில் பட்ட புத்தகம் அது.ஆதலால் வாங்கிவிட்டேன்.
மற்றபடி எப்பொழுதும் போல் எஸ்.ராவின் புத்தகங்கள் சிலவும் வாங்கி உள்ளேன்.வாங்கிய புத்தகங்கள் அனைத்திற்கும் விரைவில்(ரசனைக்காரியின்) விமர்சனங்களை
எதிர்பார்க்கலாம்.
வாங்கியுள்ள புத்தகங்களின் வரிசை இங்கே:
உங்களுக்கு பிடித்த புத்தகங்களையும் இங்கே பகிருங்கள். நானும் படிக்க விளைகிறேன்.

- நிமித்தம் - எஸ்.ரா
- மறைக்கப்பட்ட இந்தியா - எஸ்.ரா
- மழைமான் - எஸ்.ரா
- காந்தியோடு பேசுவேன் - எஸ்.ரா
- இலக்கற்ற பயணி - எஸ்.ரா
- நகுலன் வீட்டில் யாரும் இல்லை - எஸ்.ரா
- சூரியனுக்கு அருகில் ஒரு வீடு - மனுஷ்ய புத்திரன்
- தலைமுறைகள்- நீல.பத்மநாபன்
- சாயாவனம் - சா.கந்தசாமி
- கொற்கை - ஜே.டி. குருஸ்
- கொங்குதேர் வாழ்க்கை - நாஞ்சில் நாடன்
- டாலர் நகரம்- ஜோதிஜி
- வெண்கடல் - ஜெயமோகன்
- வெள்ளை யானை - ஜெயமோகன்
- 6174 - க.சுதாகர்
- லஜ்ஜா - தஸ்லிமா நஸ்ரின்
- தன்னாட்சி- அர்விந்த் கெஜ்ரிவால் ( தமிழில்:கே.ஜி.ஜவர்லால்)
- இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன - ராஜ் சிவா
- ராஜிவ்காந்தி சாலை - விநாயக முருகன்
- பொன்னியின் செல்வன்- கல்கி (ஏற்கனவே இணையத்தின் மூலம் படித்தது என்றாலும் புத்தகத்தில் படிக்கும் ஆசையில் வாங்கினேன்)
உங்களுக்கு பிடித்த புத்தகங்களையும் இங்கே பகிருங்கள். நானும் படிக்க விளைகிறேன்.
5 comments:
அத்தனை புத்தகங்களையும் படித்துவிடவேண்டும் என்று உறுதி மொழி எடுத்துள்ளேன்//வாழ்த்துக்கள்
வணக்கம்
புத்தகங்கள் பற்றிய தொகுப்பு சிறப்பு...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பரம(ன்) இரகசியம் - என்.கணேசன் (ப்ளாக்ஹோல் மீடியா வெளியீடு)வாங்கிப் படிக்கவும். ஆரம்பம் முதல் முற்றும் வரை நல்லதொரு வாசிப்பனுபவம் பெறுவீர்கள்.
மிக்க நன்றி.
நூல்கள் பற்றிய அருமையான தொகுப்பு!
Post a Comment