Saturday, March 27, 2010

தீர்மானங்களின் தடுமாற்றம்


இது என்னுடைய 50 வது பதிவு. இவ்வேளையில், நான் பதிவிட ஆரம்பித்த காலகட்டத்தில், தன்னுடைய பின்னூட்டங்களின் மூலம் என்னை பெரிதும் ஊக்கப்படுத்திய ராகவன் அண்ணாவிற்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
-----------------------------------------
தீர்மானங்கள் எடுப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான, இலகுவான விசயம்.தீர்மானங்கள் மனிதனின் மனதை சுத்தப்படுத்தும் கருவியாக இருந்து வருகிறது.தேவையில்லா விசயங்களை தூக்கி எறிந்துவிட்டு, புதிதாக பிறந்ததுபோல வாழ முற்படுத்துவதற்கு, செய்த தவறுகள் பலவற்றை மறப்பதற்கு, மற்றவரிடம் சொல்லி பெருமை படுவதற்கு என்று பலவகையில் தீர்மானங்கள் மனிதனின் ஆளுமையுடன் பயணப்பட்டுக்கொண்டே இருக்கிறது.இவ்வுலகில் தீர்மானங்களே எடுக்காத உயிர் என்று எதுவுமே இல்லை.


வருடத்தின் ஆரம்ப நாளில் , தீர்மானங்களை எடுப்பவர்களாகட்டும், அனுதினமும் ஏதாவது ஒரு தீர்மானங்களை எடுப்பவராகட்டும், எத்தனை பேர் அதை சரிவர பின்பற்றுகிறோம் என்பது அவதானிக்க முடியாத ஒன்று.தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முடியாமைக்கு பல காரணிகள் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் பொதுவான ஒரு தடையாய் இருப்பது ஆழ்மன போராட்டம்.

உதாரணத்திற்கு, உடம்பை குறைக்க வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும். அதற்காக தினமும் உடற்பயிற்சியும் சரியான உணவு பழக்க வழக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவும் (அதாவது தீர்மானம்) எடுத்திருப்போம். ஆனால் அதிகாலையில் எழுந்து பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் என செயல்திட்டம் உதிக்கும்போது, நம்முடைய தீர்மானங்கள் ஆழ்மனதிற்கு சென்று சேர்ந்திருந்தால், எவ்வித தடையுமின்றி நம்மால் பயிற்சியை தொடர்ந்திட முடியும். அன்றேல், தூக்கம் மட்டும்தான் மிஞ்சும்.

மேலோட்டமாக எடுக்கப்படும் தீர்மானங்களும், சூழ்நிலை கைதியாகி எடுக்கப்படும் தீர்மானங்களும், காற்றில்லாத பலூன்போல கீழே கிடக்கும். சுய சிந்தையோடு, ஆழ்மனதின் விழிப்புணர்வோடு எடுக்கும் எந்த ஒரு முடிவும் தீர்மானமும், நம்மை நம்மையறியாமலே செயல்படவைக்கும்.


வாரத்திற்கு குறைந்தது மூன்று பதிவாவது எழுத வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். அவை ஆழ்மன விழிப்புணர்வோடு எடுக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக பதிவிடுவேன். பார்போம் என்ன நடக்க போகிறது என்பதை.

------------------------------------------

சென்ற வாரம் “இண்டி ப்ளாக்கர்” மீட்டிங் சென்றிருந்தேன். பல புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது.அதில் நிறைய பேர் பல வலைப்பூக்களை நிர்வகிப்பவர்களாய் இருக்கின்றனர். ஒவ்வொரு வலைப்பூவும் ஒவ்வொரு கரு கொண்டதாய் உள்ளது. உதாரணத்திற்கு தொழில்நுட்பம் சார்ந்த வலைப்பூவென்று தனியாக, சமையெலுக்கென்று தனியாக, சொந்த விசயங்களை பகிர்ந்து கொள்ள என்று தனியாக. மேலும் அவற்றின் மூலம் எவ்வாறு பணம் ஈட்டலாம் என்பதிலும் முனைப்பாகவும் தொலைநோக்கு பார்வையுடனும் உள்ளனர்.
----------------------------------
48 comments:

padma said...

வாழ்த்துக்கள் ராஜி

Mrs.Menagasathia said...

வாழ்த்துக்கள்!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஓ! அப்படியா!?

Rajeswari said...

நன்றி

பத்மா

மேனகசத்யா

ஜோதிபாரதி

Sangkavi said...

//வாரத்திற்கு குறைந்தது மூன்று பதிவாவது எழுத வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். அவை ஆழ்மன விழிப்புணர்வோடு எடுக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக பதிவிடுவேன்.//

நானும் நினைக்கிறேன் ஆனால் முடியவில்லை....

வாழ்த்துக்கள்.....

துபாய் ராஜா said...

சீக்கிரம் செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்.

Rajeswari said...

நன்றி

Sangkavi

துபாய்ராஜா

Gokul said...

வாழ்த்துக்கள்

//வாரத்திற்கு குறைந்தது மூன்று பதிவாவது எழுத வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். அவை ஆழ்மன விழிப்புணர்வோடு எடுக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக பதிவிடுவேன்.//

:(

மணிஜீ...... said...

நிறைய எழுதுங்கள்... வாழ்த்துக்கள்...

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

வாழ்த்துக்கள்!!

Rajeswari said...

நன்றி

கோகுல்

மணிஜி

ஜீவன் அண்ணா

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

வாழ்த்துகள்.
:)

butterfly Surya said...

வாழ்த்துக்கள் ராஜி.

கண்டிப்பாக நிறைவேறும். நிறைவேற்றுங்கள்.

ராமலக்ஷ்மி said...

அரை சதத்துக்கு வாழ்த்துக்கள் ராஜேஸ்வரி.

snegan said...

அம்மா நல்லது வாரத்திற்கு ஒரு முறை பதிவு போடுவது படிபதற்கு தயாராக இருப்போம்

பிரியமுடன்...வசந்த் said...

வாழ்த்துகள் ராஜி

1ல இருந்து 50 வரைக்கும் வர ரொம்ப ரொம்ப லேட்டு ஆமா சொல்ட்டேன்....

:)

இயற்கை ராஜி said...

சீக்கிரம் செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள் ராஜி.

Rajeswari said...

நன்றி

ஷங்கர்

பட்டர்பிளை சூர்யா

ராமலெஷ்மி

சினேகன்

பிரியமுடன் வசந்த்

இராகவன் நைஜிரியா said...

தங்களின் 50வது இடுகைக்கு வாழ்த்துகள்.

விரைவில் 100வது இடுகையை எதிர் பார்க்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// தன்னுடைய பின்னூட்டங்களின் மூலம் என்னை பெரிதும் ஊக்கப்படுத்திய ராகவன் அண்ணாவிற்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். //

ஆஹா சீனா ரானா இந்த உலகம் இன்னும் உன்னை நம்புதுடா?

Rajeswari said...

நன்றி

ராஜி

ராகவன் அண்ணா- ( விரைவில் 100 வது பதிவை அடைய முயற்சிக்கிறேன்.)

Rajeswari said...

//ஆஹா சீனா ரானா இந்த உலகம் இன்னும் உன்னை நம்புதுடா?
//

இதில் என்ன சந்தேகம்

இராகவன் நைஜிரியா said...

// வாரத்திற்கு குறைந்தது மூன்று பதிவாவது எழுத வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். //

அற்புதம்... போடுங்க படிக்க நாங்க காத்துகொண்டு இருக்கின்றோம்.

அன்புடன்-மணிகண்டன் said...

வாழ்த்துக்கள்!!! :)

VISA said...

ஐம்பதாவது பதிவுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்.

அப்பாவி முரு said...

//Gokul said...
வாழ்த்துக்கள்

//வாரத்திற்கு குறைந்தது மூன்று பதிவாவது எழுத வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். அவை ஆழ்மன விழிப்புணர்வோடு எடுக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக பதிவிடுவேன்.//

:( ////


என்ன மாப்பிள்ளை.,
வீட்டுல மதுரையா? சிதம்பரமா?


உங்க வாழ்த்தும், :( மதுரைன்னு சொல்லுது...


வாழ்த்துகள் ராஜி...

:))))

எம்.எம்.அப்துல்லா said...

//ஆழ்மன விழிப்புணர்வோடு எடுக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக பதிவிடுவேன் //


பதிவிடப்போறதில்லைன்னு இன்னா ஸ்டைலா சொல்லுறீங்க :)

வாழ்த்துகள் ராஜி.

Gokul said...

//என்ன மாப்பிள்ளை.,
வீட்டுல மதுரையா? சிதம்பரமா? //

திருச்செங்கோடு :))

ஆனா அவங்க மதுரை...

Dr.Rudhran said...

best wishes. keep writing.
missed the indiblogger meet. maybe you can write about that as the next blog, i dont see many tamil blogs covering that program

அபுஅஃப்ஸர் said...

//வாரத்திற்கு குறைந்தது மூன்று பதிவாவது எழுத வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன்.//

அப்படியா நல்ல தீர்மானம், அப்போ இன்னும் 2 மாசத்துலே செஞ்சூரி போட்டுடுவீங்க‌

வாழ்த்துக்கள்

சே.குமார் said...

நிறைய எழுதுங்கள்... வாழ்த்துக்கள்...

சே.குமார் said...

நிறைய எழுதுங்கள்... வாழ்த்துக்கள்...

"உழவன்" "Uzhavan" said...

நிறைய எழுத வாழ்த்துகள்.

ஜாக்கி சேகர் said...

50க்கு வாழ்த்துக்கள்... பதிவர் சந்திப்பின் போது... சட்டென பெயர் மறந்து போனதால் உங்களிடம் பேச முடியவில்லை.. மன்னிக்கவும்.. கொஞ்சம் கூச்சசுபாவமும் அதற்க்கு காரணம்..

அஹமது இர்ஷாத் said...

வாழ்த்துக்கள் மேலும் பல பதிவுகளை எதிர்பார்த்து....

http://bluehillstree.blogspot.com

ஆதிமூலகிருஷ்ணன் said...

பதிவு போட்டு ஒரு வாரமாச்சு. மூணு வேண்டாம், ஒண்ணியும் கூட காணோம்.!

நட்புடன் ஜமால் said...

தெரிஞ்சிகிட்டு எங்களிடமும் பகிருங்கள்

50க்கு வாழ்த்துகள்.

உங்கள் உரலை கொடுத்த இராகவன் அண்ணாவுக்கும் நன்றிகள்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

பார்வையாளன் said...

best wishes

சே.குமார் said...

Romba nalachchu....

http://www.vayalaan.blogspot.com

சே.குமார் said...

hai...

enathu valaipoovirkku ungalai varaverkirean...

http://www.vayalaan.blogspot.com

சௌந்தர் said...

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுத்துகள் உங்களால் எழுத முடியும்..

R.Gopi said...

50 வது கோல்டன் ஜூபிலி பதிவிற்கு வாழ்த்துக்கள்....

தாங்கள் இது போல் மேலும் பல சதங்கள் அடித்து ஆட வாழ்த்துக்கள்...

//வாரத்திற்கு குறைந்தது மூன்று பதிவாவது எழுத வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். //

அட்லீஸ்ட் ஒண்ணாவது எழுதுங்க...

பிரியமுடன் பிரபு said...

மேலோட்டமாக எடுக்கப்படும் தீர்மானங்களும், சூழ்நிலை கைதியாகி எடுக்கப்படும் தீர்மானங்களும், காற்றில்லாத பலூன்போல கீழே கிடக்கும். சுய சிந்தையோடு, ஆழ்மனதின் விழிப்புணர்வோடு எடுக்கும் எந்த ஒரு முடிவும் தீர்மானமும், நம்மை நம்மையறியாமலே செயல்படவைக்கும்
//

YES
NICE

பாலராஜன்கீதா said...

உங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

பிரியமுடன் பிரபு said...

வாழ்த்துக்கள்

ronald said...

வாழ்த்துக்கள்!!