Thursday, June 18, 2009
உங்களுக்காக ஒரு ரொமான்ஸ் பதிவு...
தொயந்து சோகமாவே எழுதி, அல்லாத்துக்கும் அழுகாச்சி காட்டுனதால,நெறைய பேர் நொந்து போயிருக்கீங்கனு கமெண்ட்டு,மெயில பாத்தாலே தெரியுது மக்கா...அதனால நான் ஒரு முடிவுக்கு வந்துக்கினேன்.இந்த பதிவுல தம்மாத்துண்டு இயத்துலகூட சோகாச்சி வரக்கூடாதுன்னு முடிவு கட்டிக்கினேன்.அத்தால உங்க எல்லாத்துக்கும் ஷோக்கா அதான்பா இன்கிலிபீச்சுல ரொமாண்டிக்கா ஒரு கத சொல்றேன் கேட்டுக்கோ..கத சொல்லும்போச்சு மட்டும் நான் தெளிவாத்தான் சொல்லுவேன்.அதால யாரும் கிராஸ் கொஸ்டின்னெல்லாம் கேக்ககூடாது..சொல்லட்டா......
கதை:
கழுத்தில் புது மஞ்சள் சரடு மின்ன ,கணவன் செந்திலோடு ஒட்டி நடந்தாள் சுந்தரி.நேற்றுதான் திருமணம் நடந்தது.ஈவின்ங் ஷோவிற்கு இரண்டு டிக்கெட்களை எடுத்துக்கொண்டு ,சுந்தரியை உரசியபடியே நடந்தான் செந்தில்.அவளுடைய சரிகை நெய்த அரக்கு கலர் சேலை அவனுடைய கைகளில் உரசி,அவனை கிறங்க வைத்தது.அவளிடமிருந்து வந்த மல்லிகை மணமும் , மஞ்சள் மணமும் அவனை மோகக்கடலில் மூழ்கச்செய்தன. வீட்டிலேயெ இருந்திருக்கலாமோ என்று அடிக்கடி அவனது உள்மனது கூறியது. சுந்தரியுடன் நடந்து செல்வதே அவனுக்கு சொர்க்கத்தில் நடப்பது போலிருந்தது.தியேட்டருக்குள் நுழைந்ததும் அவளின் மெல்லிய விரல்களோடு தன் கைகளை பிணைத்து கொண்டான்.சுந்தரி கைகளை வெட்கத்துடன் விடுவிக்க முயன்றாள்.உடனே கைகளின் இறுக்கத்தை அதிகபடுத்தினான் செந்தில்.சுந்தரியின் முகம் நாணத்தில் சிவந்து இருட்டில் கூட ஒளி காட்டியது.
ஹலோ இன்னா எல்லாரும் கத வாசிக்கிரீங்களா...புடிச்சிருக்கா..என்னாது நான் வர்ரதுதான் புடிக்கலியா..என்னாப்பா இப்பூடி சொல்லிட்டீக..சரி நான் நடய கட்டுறேன்
.
கதை தொடர்கிறது:
இருவரும் சீட்டில் வந்து அமர்ந்தனர்.திரையில் விக்கோ பல்பொடி விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.கண்களில் பெருமை பொங்க சுந்தரியையே பார்த்தான் செந்தில்.அவன் கவனிப்பதை உணர்ந்த சுந்தரி அவனிடம் திரும்பி வெட்கத்துடன் “என்னங்க?” என்றாள்.
“ஒண்ணுமில்லை .நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்” என்றாவாறே அவளுடைய காதுமடலருகே தொங்கும் முடியை எடுத்து சரிசெய்தான் .
அதற்கு ஒரு புன்னகையை பதிலாய் தந்தாள் அவள்.
படம் ஆரம்பித்தது.தன்னுடைய இடது கையை தூக்கி அவளுடைய சேரின் மேல் வைத்து ,அவளை அணைத்துக்கொள்வதை போல் அமர்ந்தான்.அவளும் அதை விரும்புவதுபோல சற்றே இறங்கி அமர்ந்து, மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.
இன்னாப்பா எல்லாரும் தொயந்து படிக்கிரீகளா?? இன்னாது இடலே டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?? சரி சரி அஜ்ஜஸ் பண்ணிக்கோ.இதோ நான் கிளம்பிட்டேன்..
திரைப்படம் ஓடுவதையே மறந்து இருவரும் ஒருவரையொருவர் மனதிற்குள் நினைத்துக்கொண்டு ஆனந்தப்பட்டனர்.பாடல் காட்சிகளின்போது அவளுடைய கைவிரல்களோடு நாட்டியமாடினான் செந்தில்.சுந்தரி வெட்கத்துடன் கையை விடுவித்துக்கொண்டாள்.
“ஏன்??”-செந்தில்.
“யாராவது பார்க்கபோறாங்க!”-சுந்தரி
“பார்க்கட்டுமே..அதுக்குத்தான் உன் கழுத்துல நான் கட்டின லைசென்ஸ் இருக்கே! “ - செந்தில்.
“அதுக்காக தியேட்டர்லயா?? “ - சுந்தரி.
“அப்போ வீட்டுல வச்சுக்கலாமா ! ம் சொல்லு “ என்று குறும்புடன் கேட்டான் செந்தில்.
கன்னம் சிவந்து நாணத்துடன் அவனுடைய தோளில் சாய்ந்தாள் சுந்தரி. பூக்களை வருடும் இளங்காற்றாக அவளுடைய தலையை கோதினான் செந்தில்.சின்ன சின்ன சீண்டல்களிலும் தீண்டல்களிலும் உலகை மறந்தனர்.படத்தின் கதை என்ன என்பது கூட அறியாமல்,திரையரங்கை விட்டு வெளியே வந்தனர்.மூன்று மணிநேரம் மூன்று நொடிகளாய் மாறிப்போனதை நினைத்து இருவருமே வருந்தினர்.
“சுந்தரி. இன்னைக்கு டின்னருக்கு சரவணபவன் போகலாமா?” காரை
ஸ்டார்ட் செய்து கொண்டே கேட்டான் செந்தில்.
“வேணாங்க..மருமகள் தோசை வார்த்திருப்பாள்.நாம் வீட்டில் போயே சாப்பிடுவோம்” என்றபடி காரினுள் ஏறியபடி கூறினாள் நேற்று அறுபதாம் கல்யாணம் கொண்டாடிய சுந்தரி.
என்னா மக்கா..படிச்சீங்களா...அழலையே..அதான் அதான் எனக்கு வேணும்.என்ன கொஞ்சம் கோபமா இருப்பீக கதய படிச்சிட்டு..அதுக்கு நான் என்ன செய்யட்டும்.சோகாச்சி இல்லாமத்தான் எழுதுறேன்னு சொன்னேன்..கோவாச்சி இல்லாமன்னு சொல்லலையே..வரட்டா....கனவு காணாம போயி தூங்குங்க...
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
me the first?
wait..padichittu varen
adapaavi pullah:-)
kaila maatamaya poiduveenga:-))))
சரியான ரசனைகாஇ தான் நீங்க
“சுந்தரி. இன்னைக்கு டின்னருக்கு சரவணபவன் போகலாமா?” காரை
ஸ்டார்ட் செய்து கொண்டே கேட்டான் செந்தில்.
“வேணாங்க..மருமகள் தோசை வார்த்திருப்பாள்.நாம் வீட்டில் போயே சாப்பிடுவோம்” என்றபடி காரினுள் ஏறியபடி கூறினாள் நேற்று அறுபதாம் கல்யாணம் கொண்டாடிய சுந்தரி.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
முடியலை...
அவளுடைய சரிகை நெய்த அரக்கு கலர் சேலை அவனுடைய கைகளில் உரசி,அவனை கிறங்க வைத்தது.அவளிடமிருந்து வந்த மல்லிகை மணமும் , மஞ்சள் மணமும் அவனை மோகக்கடலில் மூழ்கச்செய்தன.
ஹ ஹ ஹ ஹ
இப்படி எழுதி கடைசியில அல்வா குடுத்தீட்டீங்களே.....
60ம் கல்யாணம் கொண்டாடுனவங்களை சரமாரியா அவன், அவள்ன்னு போட்டு கதை எழுதியிருக்கீங்கன்னா கண்டிப்பா நீங்க அவங்களுக்கு எள்ளுப்பாட்டியாத்தான் இருக்கணும்.. சரிதானே :))
நல்ல முயற்சி!
//ஈவின்ங் ஷோவிற்கு இரண்டு டிக்கெட்களை எடுத்துக்கொண்டு ,சுந்தரியை உரசியபடியே நடந்தான் //
//காரை
ஸ்டார்ட் செய்து கொண்டே கேட்டான் செந்தில்.//
முரண்???
:)
இருந்த போதும் இடையிடையே உங்கள் உரையாடல் தான் கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கியது. வாழ்த்துக்கள்
ம்ம்ம்...ட்விஸ்ட் நல்லாவே இருந்தது!!!
முதலில் என் வேண்டுகோளை மதித்து இந்த படைப்பை கொடுத்ததுக்கு நன்றி!!!
இப்போ படைப்பை பற்றி...
அட பாவி மக்கா...
காலங்கார்த்தால வரட்டு ரொட்டிய மென்னுகிட்டு...
இந்த ஊரு மொக்க செய்தி எல்லாம் வாசிச்சுட்டு ...
அட நம்ம புள்ள புதுசா எழுதி இருக்கேன்னு படிக்க வந்தா...
ஏன் ஏன் இப்படி எல்லாம் ???
இருந்தாலும் ஜாலியா தான் இருந்தச்சு படிக்க ...!!!
நல்லா இருந்ததுங்க கதை..
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்
இப்பிடியா 'ஆண்டி' டுவிஸ்ட் வைக்கிறது?????
மருமகள் என்பதற்கு பதில்
பேத்தி என்று போட்டு இருக்கலாம்
எங்களுக்கு வசதியாக இருந்து இருக்கும்
’பாட்டி’ கதை நல்லாயிருந்திச்சின்னு சொல்ல
கதையை உங்களுடைய ‘சிவப்பு’ கமெண்ட்டரி இல்லாம போட்டு இருந்தீங்கன்னா ஒரு எதிர்பார்ப்போட படிச்சி டிவிஸ்ட் இன்னும் கூடுதலாக இரசித்து இருக்கலாம்.
இருப்பினும் நல்லதொரு முயற்சி
இரசிக்கும்படியாக ...
ஹைய்யோ ஹைய்யோ ......
பயங்கர ரொமான்ஸ் மூடுதான் போலிருக்கு... ஐ மீன் அந்த தம்பதியருக்கு...
தம்பதியின் ரொமான்ஸ் மூடுக்கு நடுவில் எதற்காக நீங்க ஊடால புகுந்து கமெண்ட் போட்டீங்க...
அவ்...அவ்...
நல்லா எழுதி இருக்கீங்க.
ஹி ஹி...கதை சூப்பருங்கோ....
முடியல..
:)))
கதை நல்லா இருக்கு ராஜி. ரசனைக்காரி எழுதின கதையல்லவா
அதான் ரொம்ப ரசனையோட எழுதி இருக்கீங்க.
ம்ம்ம் புதுமணம் கமழுது கதையிலே:)
என்னாதிது நடு நடுவே சின்னப் பிள்ளைத்தனமா இருக்கு :))
சூப்பர் அருமை:))
யக்கோவ்..ஸ்டோரி படிக்க சொல்லோ குஜாலா போச்சி..
அப்பாலிக்கா கட்ச்சீல டர்னிங் பாயிண்ட் பேஜாரு...
//“சுந்தரி. இன்னைக்கு டின்னருக்கு சரவணபவன் போகலாமா?” காரை
ஸ்டார்ட் செய்து கொண்டே கேட்டான் செந்தில்.
“வேணாங்க..மருமகள் தோசை வார்த்திருப்பாள்.நாம் வீட்டில் போயே சாப்பிடுவோம்” என்றபடி காரினுள் ஏறியபடி கூறினாள் நேற்று அறுபதாம் கல்யாணம் கொண்டாடிய சுந்தரி.//
என்னம்மா கீது கிளைமேக்ஸ்
படா பேஜாராபூச்சு
ஹலோ,
இந்த மாதிரி ஒரு 'பெருசுங்க ரொமான்ஸ்' கதைக்கு, நாயகனுக்கு என்னோட பேரா ?? என்னங்க ஞாயம் இது ? அதிலும் ஜோடி பேரு 'சுந்தரி'.... வெளங்கிடும்...
jokes apart... நல்லா இருந்ததுங்க படிக்கறதுக்கு... :)
நன்றிகள் பல
இயற்கை
அபி அப்பா
சக்தி
சென்ஷி
விசா
அன்புடன் அருணா
பித்தன்
அருமை தோழி வாணி
தமிழினி
குறையொன்றுமில்லை
அப்பாவிமுரு
நட்புடன் ஜமால்
கூல்கார்த்தி
ராகவன் அண்ணா
நர்சிம்
கபிலன்
வழிப்போக்கன்
ரம்யா
அ.மு.செய்யது
பிரியமுடன் வசந்த்
செந்தில்குமார்
//அறுபதாம் கல்யாணம் கொண்டாடிய சுந்தரி.//
அறுபதெல்லாம் ஒரு வயசா.. ஏலே ஊட்டிக்கு இரண்டு டிக்கெட் போடுறா சீனியர் சிட்டிசன் கோட்டாவுல.
ரசனை காரி என்ற பேருக்கு ஏற்றாற்போல ரொம்பவே ரசனை தான் போங்க.
இது போல படிக்கவே நல்ல இருக்கு, நிறைய இடத்தில் இப்படி தம்பதிகள் அன்யோன்யம் இப்பவெல்லாம் கிடையாது (கோபம், சண்டை சச்சரவு) இப்படி தான் இருக்கு.
அதுவும் மருமகள் தோசை வார்த்து வைத்து கார்த்திருந்ததா கேள்வி படவே முடியாது.
:))))
Me the 32!
The Famous Number in Blogger's mind!
////சென்ஷி said...
60ம் கல்யாணம் கொண்டாடுனவங்களை சரமாரியா அவன், அவள்ன்னு போட்டு கதை எழுதியிருக்கீங்கன்னா கண்டிப்பா நீங்க அவங்களுக்கு எள்ளுப்பாட்டியாத்தான் இருக்கணும்.. சரிதானே :))
நல்ல முயற்சி!///
இததான் நானும் சொல்லுறேன்;;)))
கிழ கிளுப்பான கதை :-)))))
“சுந்தரி. இன்னைக்கு டின்னருக்கு சரவணபவன் போகலாமா?” காரை
ஸ்டார்ட் செய்து கொண்டே கேட்டான் செந்தில்.
“வேணாங்க..மருமகள் தோசை வார்த்திருப்பாள்.நாம் வீட்டில் போயே சாப்பிடுவோம்” என்றபடி காரினுள் ஏறியபடி கூறினாள் நேற்று அறுபதாம் கல்யாணம் கொண்டாடிய சுந்தரி
eaan intha kola veri ungaluku enga mela
//கதையை உங்களுடைய ‘சிவப்பு’ கமெண்ட்டரி இல்லாம போட்டு இருந்தீங்கன்னா ஒரு எதிர்பார்ப்போட படிச்சி டிவிஸ்ட் இன்னும் கூடுதலாக இரசித்து இருக்கலா//
athee athee
//“வேணாங்க..மருமகள் தோசை வார்த்திருப்பாள்.நாம் வீட்டில் போயே சாப்பிடுவோம்” என்றபடி காரினுள் ஏறியபடி கூறினாள் நேற்று அறுபதாம் கல்யாணம் கொண்டாடிய சுந்தரி.//
**********
Finishing superuuuuuuu............
Kalakkalllllllllll.......
Vaazhthukkal.........
வந்தவுடனே பிடிச்சிட்டம்ல!
கதை சுப்பர்!
//மருமகள் என்பதற்கு பதில்
பேத்தி என்று போட்டு இருக்கலாம்
எங்களுக்கு வசதியாக இருந்து இருக்கும்
’பாட்டி’ கதை நல்லாயிருந்திச்சின்னு சொல்ல//
இப்ப மட்டும் என்னவாம்!
பாட்டி எழுதிய கதை பாட்டி கதைன்னே சொல்லலாம் ஜமால்!
he he he.. Good One :)
அறுபதிலும் ஆசை வரும்... ஆசையிலும் பாசம் வரும்... இதில் அந்தரங்கம் கிடையாதம்மா... நாள் செல்ல நாள் செல்ல சுகம்தானம்மா...பாடல்தான் நினைவு வந்தது.
இதுபோல் காதல்தான் வேண்டும் தம்பதியரிடையே!
ippadiya pazhi vangarathu pongappa??
வெட்க்கதுடன் படிக்க துவங்கிய எனக்கு...முடிவில் இனிமையான அதிர்ச்சி பிடித்தது....!!! ^ _ ^
முதுமை காதலை மிக அழகாக வடித்துள்ளீர்கள்.....!!! ^ _ ^
அருமையான 10 மணி துளிகளை செலவிட்டதில் மகிழ்ச்சியே....!!!
^ _ ^
இடையில் உங்கள் சிறு சிறு தொல்லைகளால், அடுத்து என்ன என்கிற ஆர்வத்தை மிகை செய்தது பாராட்டக்கூடிய ஒரு வால்தனம் ... - _ ^
மொத்தத்தில்... படித்து, நினைத்து, சிரித்து, ரசித்தேன்.... ^ _ ^
Post a Comment