Wednesday, June 17, 2009

காத்திருப்பேன் உனக்காக..!


வித்திட்ட விதை எல்லாம்
உன் பேர் சொல்ல
திக்கற்று நிற்கிறேன்
நானிங்கே..
காயத்தை மட்டும்
தந்த நீ
ஏன் களிம்பை தர மறுக்கிறாய்
ஊமைக்கனவுகளுக்கு
எப்பொழுது
உயிர் தரப்போகிறாய்.
உன் நினைவுகளில்
என் வார்த்தைகள்
கூட மயங்கி விட்டன
அதனால்தான்
கவிதை கூட
இங்கே வறட்சியாய்..
நான்
உன்னிடத்தில் வந்த போது
என் எதிர்காலத்தையும்....,
உன் கடந்த காலத்தையும்
மறந்து விட்டேன்.
கானலாகிப்போன
காலங்களுக்காக
என்ன செய்வேன் நான்
கண்ணீரை தவிர ..
இமைக்கும் ஒலி கூட
என்னை பயமுறுத்துகிறது
நீ என்னை பிரியும்போது
தனிமையின்
தணலை தாங்கிக்கொண்டு
தள்ளாடும் வயதிலும்
காத்திருப்பேன் உனக்காக..!

29 comments:

அப்பாவி முரு said...

எனக்கு பிடித்த வரி...

//தள்ளாடும் வயதிலும்
காத்திருப்பேன் உனக்காக..!//

நன்றாக வந்துள்ளது.

வாழ்த்துகள்

nzpire said...

//
உன் நினைவுகளில்
என் வார்த்தைகள்
கூட மயங்கி விட்டன
அதனால்தான்
கவிதை கூட
இங்கே வறட்சியாய்.. //

அட அட அட என்னா பீலிங்கு!....

அருமை !...

*இயற்கை ராஜி* said...

//உன் நினைவுகளில்
என் வார்த்தைகள்
கூட மயங்கி விட்டன
அதனால்தான்
கவிதை கூட
இங்கே வறட்சியாய்//

supernga..

நட்புடன் ஜமால் said...

இமைக்கும் ஒலி கூட
என்னை பயமுறுத்துகிறது
நீ என்னை பிரியும்போது\\

என்னே ஒரு அன்பு ...

நட்புடன் ஜமால் said...

தனிமையின்
தணலை தாங்கிக்கொண்டு
தள்ளாடும் வயதிலும்
காத்திருப்பேன் உனக்காக..!\\


சிறப்பான அன்பு

ராம்.CM said...

நீ என்னை பிரியும்போது
தனிமையின்
தணலை தாங்கிக்கொண்டு
தள்ளாடும் வயதிலும்
காத்திருப்பேன் உனக்காக..!///


அருமை...அழகு.

Menaga Sathia said...

//தள்ளாடும் வயதிலும்
காத்திருப்பேன் உனக்காக..!//
சூப்பர்!!

Rajeswari said...

நன்றி

முரு,

nzpire,

இயற்கை,

ஜமால்,

ராம்,

மேனகசத்தியா

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு ராஜேஸ்வரி!

Anbu said...

அக்கா கவிதை கலக்கல்

sakthi said...

கானலாகிப்போன
காலங்களுக்காக
என்ன செய்வேன் நான்
கண்ணீரை தவிர ..


வரிகளும் வார்த்தைகளும் மிக அருமை
வாழ்த்துக்கள்

வெற்றி-[க்]-கதிரவன் said...

//நான்
உன்னிடத்தில் வந்த போது
என் எதிர்காலத்தையும்....,
உன் கடந்த காலத்தையும்
மறந்து விட்டேன்//

-:)

//நீ என்னை பிரியும்போது
தனிமையின்
தணலை தாங்கிக்கொண்டு
தள்ளாடும் வயதிலும்
காத்திருப்பேன் உனக்காக..!//

-:)

நன்னா இருக்கு

வால்பையன் said...

கவித கவித

அபிராமி அபிராமி


(கவிதைய பார்த்தா இப்படி தான் ஆகிருவேன்)

முனைவர் இரா.குணசீலன் said...

கவித
கவித
பிரமாதம்

சொல்லரசன் said...

//உன்னிடத்தில் வந்த போது
என் எதிர்காலத்தையும்....,
உன் கடந்த காலத்தையும்
மறந்து விட்டேன்.//


கடந்த காலத்தை மறந்ததுதான் கண்ணீரின் காரணமா?
கவிதை அருமை

யாழினி said...

//தள்ளாடும் வயதிலும்
காத்திருப்பேன் உனக்காக..!//

வரிகள் அபாரம்.

வேத்தியன் said...

ஏன் களிம்பை தர மறுக்கிறாய்//

களிம்பு என்றால் என்ன???
தயவு செய்து விளக்கமாக சொல்லவும்...

வேத்தியன் said...

நீ என்னை பிரியும்போது
தனிமையின்
தணலை தாங்கிக்கொண்டு
தள்ளாடும் வயதிலும்
காத்திருப்பேன் உனக்காக..!//

நல்லா இருக்கு...

மிகவும் ரசித்தேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

//உன்னிடத்தில் வந்த போது
என் எதிர்காலத்தையும்....,
உன் கடந்த காலத்தையும்
மறந்து விட்டேன்.
கானலாகிப்போன
காலங்களுக்காக
என்ன செய்வேன் நான்
கண்ணீரை தவிர ..//

காதல் ரசம்

Vani said...

"...கானலாகிப்போன
காலங்களுக்காக
என்ன செய்வேன் நான்
கண்ணீரை தவிர..."

தேர்ந்தெடுத்த வார்த்தைகள்...
நீங்க ஆழமா யோசிக்கிறீங்க, ராஜி.
ஒரு சின்ன விண்ணப்பம்...
"சுக ராகம் சோகம் தானே.."னு ஒரு கவி சொல்லி உள்ளார்...
இருந்தாலும்...
சந்தோசமான விஷயங்களை நிறைய‌ எழுதுங்க...
உங்களோட புது படைப்புகளுக்காக நான் தினமும் பார்ப்பேன்..
சுகமான விஷயங்கள் எனின் ரெட்டிப்பு சந்தோசம் தானே :)

Sathik Ali said...

ovvoru varikaLum arumai,kathai kavithai enRu kalakkukiRIrkaL vaazhththukkkaL

VISA said...

good one.

கூத்தாடி said...

sssssssss appa ippavae kanna kattuthae

R.Gopi said...

//காயத்தை மட்டும்
தந்த நீ
ஏன் களிம்பை தர மறுக்கிறாய் //

Very touching lines........


//நீ என்னை பிரியும்போதுதனிமையின்தணலை தாங்கிக்கொண்டுதள்ளாடும் வயதிலும்
காத்திருப்பேன் உனக்காக..!//

Wowwwwwwwww. Superrrrrrrrrr...

Unknown said...

சென்னைல நல்ல மழை பெய்ஞ்சுதுன்னு சொன்னாங்க ஆனா, உங்க மூளை ரொம்ப வரண்டுதான் போச்சு போங்க. பதிவை -ஐ புதுபிக்க தோனலையோ... இதைதான் க.பி. சொல்லறாங்களோ...

-அகுநி

வேங்கை said...

//
உன் நினைவுகளில்
என் வார்த்தைகள்
கூட மயங்கி விட்டன
அதனால்தான்
கவிதை கூட
இங்கே வறட்சியாய்.. //

வாழ்த்துகள்

வேங்கை said...

//உன் நினைவுகளில்
என் வார்த்தைகள்
கூட மயங்கி விட்டன
அதனால்தான்
கவிதை கூட
இங்கே வறட்சியாய்.. //


வாழ்த்துகள்

VIJAY said...

I CAME TO KNOW ABOUT YOUR BLOG BY TAMIL WEEKLY ANANDA VIKATAN. QUIET INTERESTING, THAT TOO YOUR KAVITHAIGALIL ULLA ORU MEN SOGAM..... MARAKA NINAIKUM PALA NINAIVUGALAI THODUVATHU POL ULLATHU.. NALLA MUYARCHI.... NANRI.

Rajeswari said...

Thank you vijay sir.