Thursday, April 2, 2009

பட்டாம்பூச்சி விருது பெருமைப்படும் அந்த மூன்று நபர்கள்

எழுத்துலகில் மோகம் கொள்வோரின்,வடிகாலாய் அமைந்து வரும் இந்த பதிவுலகம்,எண்ணற்ற திறமையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்று சொல்வதில் மிகை ஏதும் இல்லை.

அவ்வுலகத்தில் நானும் உலாவிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கையில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு..


சரி..விஷயத்துக்கு வருகிறேன்..முதலில், ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று(என்னை ஏமாற்றாமல்) எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்த நண்பர் அகநாழிகை(பொன்.வாசுதேவன்) அவர்களுக்கு நன்றி....

அதை,நான் யாராவது மூன்று பேருக்கு தரனுமாமே....தந்துட்டா போச்சு..(இதுல வேற “கரப்பான்பூச்சி” விருது வேற ஒண்ணு வந்துருக்காமே)...



முதலில் வால் பையன் என்ற அருண்.இவரை பற்றி நான் சொல்ல தேவையில்லை..என்னை விட உங்களுக்கே அவரை பற்றி நிறைய தெரியும்..2007 ல் இருந்து எழுதி வருகிறார்..அம்மாடியோவ்...அவருடைய படைப்புகளின் பகுதி தொகுப்பே 50 கிட்ட இருக்கும்..



இரண்டாவதாக தமிழ்குருவி(சாதிக் அலி)-2008 ல் இருந்து எழுதுகிறார் .இவருடைய பதிவுகளில் நிறைய அறிவியல் சார்ந்த்தாகவே இருக்கும்.அழகாக அறிவியலை புரியவைத்து இருப்பார்.



மூன்றாவதாக, என் உயிரே (அபு அப்ஸர்)-இவரும் 2008ல் இருந்து எழுதி வருகிறார்.அழகான படங்களின் மூலம் நிறைய விசயங்களை விளக்கி இருப்பார்.


பட்டாம்பூச்சி விருது பெற்ற இம்மூவருக்கும் எனது வாழ்த்துக்கள்..இதை எப்படி உங்களது ப்ளாக்கில் இணைக்க வேண்டும் என்பதை இங்கே சென்று தெரிந்து கொள்ளுங்கள்.(நன்றி சுரேஷ்)